Skip to main content
குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch - Admission Going on!

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS | Online & PDF

Join Now Tamil Medium English Medium

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 02-03-2018

TNPSC Current Affairs 2nd March 2018

தமிழகம்

v  சென்னை பாதுகாப்பு கண்காட்சி 2018  :           முதல் முறையாக பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் 2018 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தல் என்ற இடத்தில் சென்னைக்கு அருகே கிழக்கு கடற்கரையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
v  முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு :  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மரபு மையம், தமிழ்மரபு அறக்கட்டளை (உலகலாவிய அமைப்பு), தமிழக அரசின் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடக்கம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.
v  இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள், கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  இதற்காக 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
v  61 வது, அனைத்திந்திய காவல் பணி கூடுகை (All India Police Duty Meet) 24-02-2018 முதல் 01-03-2018 வரை வண்டலூரில் நடைபெற்றது.   இந்த கூடுகையானது, ஆறாவது முறையாக தமிழகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1954, 1974, 1991, 2000 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இக்கூடுகை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தியா

v  ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு வணிக தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate (MDR))  விதிக்கப்பட மாட்டாது என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம்,  ரயில்வேயில் (ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள வாயிலாகவோ) பயணச் சீட்டுகளை, டெபிட் அட்டைகள் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, வணிகர்களுக்கு விதிக்கப்படுவது போன்ற வணிக தள்ளுபடி விகிதம் வசூலிக்கப்பட மாட்டாது. ஒரு லட்சம் ரூபாய் வரையில் இந்த நடைமுறை ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க உதவும்.
v  சமஸ்கிருதம் கற்றலை ஊக்குவிக்க்கப்பதற்காக, புது தில்லி அரசு மாநில சமஸ்கிருத கல்விக் குழு’ (State Sanskrit Education Council) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
v  "உதய்(UDAY - Ujwal DISCOM Assurance Yojana) எனப்படும் மத்திய அரசின் மின்சார உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்   திட்டத்தில்  பிப்ரவரி 28, 2018 அன்று, இலட்சதீவு   இணைந்துள்ளது.
v  வெளிநாடுகளில் இயங்கும் இந்திய பொதுத்துறை வங்கி கிளைகளை ஒருங்கிணைப்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
o    வெளிநாடுகளில் அதிக அளவு கிளைகளைக் கொண்டுள்ள இந்திய பொதுத்துறை வங்கிகள் பட்டியலில்  பாரத ஸ்டேட் வங்கி (52) முதலிடத்தையும், பரோடா வங்கி (50) இரண்டாமிடத்தையும், ஃபாங்க ஆப் இந்தியா(29) மூன்றாமிடத்தையும் பெற்றூள்ளன. 
o    நாடுகளினடிப்படையில், இங்கிலாந்து நாட்டில் தான் அதிக அளவிலான இந்திய பொதுத்துறை வங்கிகள் காணப்படுகின்றன, அடுத்த மூன்று இடங்களை முறையே ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
v  அமெரிக்காவைச் சேர்ந்த விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான போயிங்மற்றும் இந்தியாவின் டாடாநிறுவனமும்  இணைந்து  உருவான டாடா போயிங் ஏரோபேஸ்” (Tata Boeing Aerospace Ltd (TBAL)) நிறுவனத்தின் தயாரிப்பாலை ஹைதராபாத்தில் 01-03-2018 அன்று துவங்கப்பட்டுள்ளது.  இந்த விமான தயாரிப்பாலையில் AH-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன (AH-64 Apache helicopter)
v  தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை  (National Financial Reporting Authority (NFRA)) அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இவ்வமைப்பில் ஒரு தலைவர் பதவி, 3 முழுநேர உறுப்பினர் பதவிகள் ஒரு செயலாளர் பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
v  தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 ( Fugitive Economic Offenders Bill, 2018 ) ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு வெளியில் இருந்து கொண்டு பொருளாதார குற்றவாளிகள் இந்திய சட்ட நடைமுறைகளிலிருந்து தப்பிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா தெரிவிக்கிறது.
o    ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இந்த மசோதாவின் கீழ் வரும்.
v   தேச நிர்மாணத்திற்கு ராணுவத்தின் பங்களிப்பு” (‘Contribution of the Army Towards Nation Building’) என்பது குறித்த 2017-18க்கான வருடாந்தர ராணுவக் கருத்தரங்கைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே இன்று புதுதில்லியில்  தொடங்கி வைத்தார்.
v  மேற்கு அலைஎன்று பொருள்படும் பஸ்ச்சிம் லெஹர் (எக்ஸ்.பி.எல்-18)” (Paschim Leher (XPL-18)) எனப்படும், அரபிக்கடலில் இந்திய கப்பற்படையின் மேற்கத்திய பிரிவு மேற்கொண்ட மிகப்பெரிய போர் நடவடிக்கை பயிற்சி நிறைவடைந்தது.
v  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாக்” (Nag) எனும்  பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின்” (Anti-Tank Guided Missiles (ATGM)) பாலைவன சூழலிலான சோதனை இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் எனுமிடத்தில் 28-02-2018 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
v  “T App Folio” என்ற பெயரிடப்பட்டுள்ள  அலைபேசி ஆளுமை செயலியை (mobile governance application)  தெலுங்கானா மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், அரசின் சேவைகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் விரைவாக சென்றடையச் செய்தலாகும்.

வெளிநாட்டு உறவுகள்

v  வங்கதேசத்தில் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷியா கூட்டு முயற்சியில் அமைகிறது. வங்கதேசத்தின்  ரூப்பூர் பகுதியில்  அமையவுள்ள புதிய அணுமின் நிலையத்தின் கட்டமைப்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, ரஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
v  இந்தியா- ஜோர்டான் கையெழுத்திட்டுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் : ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளதையொட்டி, இந்தியா மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே, பின்வரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
1.பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
2.ராஜீய மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஜோர்டான் எல்லைக்குள் நுழையவும் அதனை விட்டு வெளியேறவும், அந்நாட்டு பகுதி வழியாக செல்லவும், வீசா தேவையை தவிர்ப்பது
3.2018 முதல் 2022 வரையான காலத்திற்கு  இந்தியாவுக்கும், ஜோர்டானுக்கும் இடையே இசை, நடனம், நாடகம், கண்காட்சி, கருத்தரங்குகள், மாநாடு, தொல்லியல் ஆவணக்காப்பகம், நூலகம், அருங்காட்சியகம், இலக்கியம், ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், அறிவியல் அருங்காட்சியகம், திருவிழாக்கள், வெகுஜன ஊடகங்கள், இளைஞர் திட்டங்கள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ளுதல்
4.மனித ஆற்றல் ஒத்துழைப்பு உடன்பாடு : இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜோர்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஜோர்டானில் இந்திய நாட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்ய வழிவகை ஏற்படுத்தப்படும்.
5.சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
6.சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் :  ஜோர்டானில் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 3,000 அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு அந்த நாட்டிலேயே பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம்
7.பாறை பாஸ்பேட் மற்றும் உரம் என்பிகே ஆகியவற்றை வழங்குவதற்கான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தம்
8.சுங்கத்துறையில் பரஸ்பர உதவி உடன்பாடு
9.ஆக்ராவுக்கும் பெட்ராவுக்கும் (ஜோர்டான்) இடையிலான (பிணைப்பு) நகர உடன்பாடு : ஆக்ராவுக்கும் பெட்ராவுக்கும் இடையிலான சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கென சுற்றுலா, பண்பாடு, விளையாட்டுக்கள், பொருளாதாரத்துறைகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்புக்கும் கூட்டாக பணிபுரிவதற்கும் என ஆக்ரா, பெட்ரா நகரங்களின் நகராட்சி மன்றங்களிடையே இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
10.இந்தியாவின் வெகுஜன தகவல் தொடர்பு நிறுவனத்துக்கும் ஜோர்டான் ஊடக நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்பு
11.பிரசார் பாரதிக்கும் ஜோர்டான் தொலைக்காட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
12.ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி இருக்கை ஒன்றை அமைப்பதற்கு அப்பல்கலைக்கழகத்திற்கும் இந்திய பண்பாட்டு உறவுகள் சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
v  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான்  நான்கு நாள் பயணமாக  மார்ச் 9-ம் தேதி இந்தியா வருகிறார்.

முக்கிய நியமனங்கள்

v  ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான இந்திய தூதராக வினய் குமார் (Vinay Kumar)  நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

v  உலக அரிய நோய்கள் தினம் (World Rare Disease Day) -  பிப்ரவரி 28 அன்று, “ஆராய்ச்சி” (Research) எனும் கருத்தாக்கத்தில் அனுசரிக்கப்பட்டது.

அறிவியல் தொழில்நுட்பம்

v  சந்திரனில், முதல் அலைபேசி நெட்வர்க் (mobile phone network) 2019 ஆண்டில் துவங்கப்படவுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த PTScientists,  Vodafone Germany, Nokia  மற்றும் Audi  நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
v  ”Huawei Balong 5G01” என்ற பெயரில், உலகின் முதல் வணிக ரீதியான ஐந்தாம் தலைமுறை சிப்பை ( 5G  chip) ஹவாய் (Huawei) நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதனைப் பயன்படுத்தி 2.3 GBPS (gigabit per second) இணையதள வேகத்தைப் பெற இயலும் அன அறிவிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுகள்

v  2014 ஆம் ஆண்டு சொச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக,  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (International Olympic Committee (IOC))  உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டிருந்து  ரஷியா மீண்டும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
v  ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வினேஷ் போகட்டுக்கு வெள்ளி : கிர்கிஸ்தானில்   நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 2-3 என்ற கணக்கில் சீனாவின் சன் லீயிடம் தோல்வியடைந்து, வெள்ளி வென்றுள்ளார்.
v  பஞ்சாப் காவல் துறையில் சேர்ந்தார் ஹர்மன்பிரீத் கௌர் :  இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (28)  பஞ்சாப் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.


படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !
---------


  

Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments