நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 9,10 மார்ச் 2018

Current Affairs for TNPSC Exams 9th, 10th March 2018

தமிழகம்

v  ஸ்ரீபெரும்புதூர் அருகில் 250 ஏக்கரில் வான்வழி பூங்கா நிறுவப்பட உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
v  மார்ச் 12 முதல் தமிழகத்தில் 7 இடங்களில் தூர்தர்ஷன் சேவை நிறுத்தம் : வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 7 இடங்களில் தூர்தர்ஷன் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தின் துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.  பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின் படி, திருவண்ணாலை, வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தூர்தர்ஷன் அஞ்சல் நிலையங்களான, ஆரணி (189.25 மெகாஹெர்ட்ஸ்), செய்யாறு (535.25 மெகா ஹெர்ட்ஸ்), வந்தவாசி (210.25 மெகா ஹெர்ட்ஸ்), ஆற்காடு (519.25 மெகாஹெர்ட்ஸ்), பேரணாம்பட்டு (527.24 மெகா ஹெர்ட்ஸ்), வேலூர் (471.25 மெகாஹெர்ட்ஸ்) மற்றும் வேலூர் தூர்தர்ஷன் செய்தி அஞ்சல் நிலையம் (503.25 மெகாஹெர்ட்ஸ்) ஆகிய 7 இடங்களில் செயல்பட்டு வந்த குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களின் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளது.

v  பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு : தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 943 ஆக அதிகரித்துள்ளது .  இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
v  சேலத்தில் 1,000 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி மையம்:   சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைப்பதற்கான 1,000 ஏக்கர் கொண்ட மூன்று இடங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  சேலத்தில் ஜவுளித் தொழில் அதிகமாக இருப்பதால், விமான வீரர்களுக்குத் தேவையான பாராசூட் மற்றும் சீருடைகளைத் தயாரிப்பது போன்ற வகைகளில் தொழில் முனைவோர் கவனம் செலுத்தி, அதுதொடர்பான உற்பத்தியை ராணுவத்துக்கு வழங்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருக வாய்ப்புள்ளது. மேலும்,  சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ரூ. 2 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை முதலீட்டில் உற்பத்தி மையங்களைத் தொடங்கலாம். இதற்கென பிரத்யேக ராணுவ முதலீட்டு பிரிவை அணுகி உரிமம் பெறுவது போன்ற சேவைகளைப் பெறலாம்
v  உலகத் தமிழ் இணைய மாநாடு 2018 - ஜூலை, 6 முதல், 8ம் தேதி வரை கோவை, வேளாண் பல்கலையில் நடைபெறவுள்ளது.  இணையப் பட்டியலில், ஆங்கிலத்திற்கு அடுத்த இடத்தில், தமிழ் உள்ளது. படைப்புகளில், ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
v  இந்தியாவில், அதிக சொத்துக்களைக் கொண்ட மாநில கட்சிகளின் பட்டியலில் அ.தி.மு.க. இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.  இப்பட்டியலில்,  உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.635 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சி ரூ.224.87 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியா

v  நாரி சக்தி விருது 2018” : சமுதாய மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பெரும்பங்காற்றிய பெண்களின் சேவைகளைப் பாராட்டி வழங்கப்படும் நாரி சக்தி விருதுகள் 2018” (Nari Shakti Puraskar)  குடியரசுத் தலைவரால் பெண்கள் தினத்தின் போது வழங்கப்பட்டன.  தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கீதா மிட்டல் (Justice Gita Mittal) அவர்கள் உட்பட, இவ்வாண்டு இவ்விருதினை 39  பெண்கள் மற்றும் அமைப்புகள் பெற்றுள்ளன. 
v  தேசிய ஊட்டச்சத்து இயக்கம் (National Nutrition Mission)  மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao)  திட்டத்தின் விரிவாக்கங்களை பிரதமர் மோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் 08-03-2018 அன்று துவங்கி வைத்தார்.
கூ.தக.
o    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao)   திட்டமானது,  பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு 22-01-2015 அன்று மத்திய அரசினால் துவங்கப்பட்டது.
o    தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது, நாடெங்கிலும் ஊட்டச்சத்து குறைபாடுகளை ஒழிக்கும் நோக்கோடு,  ரூ. 9046 கோடி பட்ஜெட்டில் 2017-2018 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் இலக்குகள்
o    2022 ஆம் ஆண்டிற்குள் , ஊட்டச்சத்துக் குறைபாட்டை 2 சதவீதமும்,  பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் இரத்த சோகை நோயை 3 சதவீதமும், எடைகுறைவான குழந்தைகள் பிறத்தலை 2 சதவீதமும் ஒவ்வொரு வருடமும் குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.  ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டிற்குள், தற்போதிருக்கும் 38.4 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
v  'சுவிதா' (SUVIDHA) திட்டம் :  பிரதமர் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)) கீழ் ரூ. 2.50 மதிப்புள்ள 100% மக்கும் தன்மையுள்ள சுகாதார சானிடரி நாப்கின்கள் (Oxo-biodegradable Sanitary Napkin)  திட்டமான 'சுவிதா' (‘SUVIDHA’)  மத்திய அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த குறைந்த விலை சுகாதார பஞ்சுக்குட்டை நாடெங்கும் உள்ள 3200 மக்கள் மருந்து மையங்களில் ரூ.2.50-க்கு  கிடைக்கும்.
v  விங்ஸ் இந்தியா 2018’ (WINGS INDIA 2018) நிகழ்வு :  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் ஃபிக்கி அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விங்ஸ் இந்தியா 2018’ எனும் நான்கு நாள் நிகழ்ச்சி  8.3.2018 அன்று ஹைதராபாதில் தொடங்கியது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து இந்தியா உலக விமானப் போக்குவரத்தின் மையம்” (India-Global Aviation Hub) என்பதாகும்.
v  இந்திய தொழிற் துறையில் சீனப் பொருட்களின் தாக்கம் என்ற தலைப்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ள, மாநிலங்களவை எம்.பி. திரு. நரேஷ் குஜ்ரால் தலைமையிலான, வர்த்தகத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
v  தூய்மை ஆற்றல், 2018” (Swachh Shakti 2018) என்ற தலைப்பில் இந்திய அரசினால் நடத்தப்படும் வருடாந்திர மகளிர் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்  மார்ச் 8 அன்று நடைபெற்றது.
v  இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் கல்வி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு  (Digital education and literacy) திட்டங்கள்.
1. ஸ்வயம் (SWAYAM)  : தகவல் மற்றும் செய்தித் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன் லைன் வகுப்புகளை நடத்துவதற்கான ஒருங்கிணைந்த மேடையை அமைத்து தருகிறது ஸ்வயம் என்ற இந்த வலை தளம்.
 2. ஸ்வயம் பிரபா (SWAYAM Prabha)  : ஸ்வயம் பிரபா என்பது டிடிஎச் மூலம் (வீடுகளுக்கு நேரடியாக) 32 உயர்ந்த தரமுள்ள கல்வி அலைவரிசைகளை வழங்குவதற்கான திட்டமாகும்.
3. தேசிய டிஜிட்டல் நூலகம் (என்டிஎல்) (National Digital Library (NDL))  : இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது அனைத்து கற்றல் வளங்களையும் மெய்நிகர் நிலையில் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்குவது ஆகும். இதில் ஒற்றைச் சாளர முறையில் தேடுதல் வசதி அமைந்திருக்கும்.
4. இ-ஷோத் சிந்து ( e-Shodh Sindhu) : உயர்கல்வி மின்னணு ஆதாரங்களின் தொகுப்பு இது.
5. நிகர்நிலை சோதனைக்கூடம் (Virtual Lab) : அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகள் அனைத்துக்குமான நிகர்நிலை சோதனைக்கூடங்களுக்கு தொலைநிலை தொடர்பு வசதி அளிக்கும் அமைப்பு.
6. கல்விக்கான இலவச மற்றும் திறந்த  மூல மென்பொருள்கள் (Free and Open Source Software for Education (FOSSEE)):  இத்திட்டத்தின் மூலம், கல்வி நிலையங்களில் திறந்த மூல” (open source software)   மென்பொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

v  மகளிர் தொழில்முனைவோருக்கான உதயம் சகி” (Udyam Sakhi Portal / www.udyamsakhi.org)  இணையதளத்தை மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 8-3-2018 அன்று  தொடங்கியுள்ளது.
v  மகளிர் தொழில்முனைவுத் திறன் தளத்தை  (Women Entrepreneurship Platform (WEP))  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,   08-03-2018   அன்று நிதி ஆயோக் (NITI Aayog) துவங்கியுள்ளது. நாடு முழுவதும் வணிகத்தில் ஈடுபடும் பெண்களின் தொழில்முனைவுத் திறன், புதியன காணும் முனைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல், நிலையான திட்டம் வகுத்தல், நீண்டகால உத்திகள் கையாளுதல் ஆகியவற்றுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதே மகளிர் தொழில்முனைவுத் திறன் தளத்தின் நோக்கமாகும்.         
v  ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்கு  தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) 7-03-2018 அன்று அனுமதி வழங்கியுள்ளது. ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்கான ஒப்பந்தம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆந்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரபிரதேசம் (கிழக்கு), உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஏழு வட்டங்களில் டெலிநார் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்தி ஏர்டெல் கையகப்படுத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
v  'ஸ்வச் பாரத்' திட்டத்துக்கு முன்னோடி குன்வர் பாய் : சட்டீஸ்கர் மாநிலம், கோத்தாபாரி கிராமத்தைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற 106 வயது மூதாட்டி. தனது முதிய வயதிலும் தனக்கு இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்பனை செய்து அவர் இரண்டு கழிப்பறைகள் கட்டினார்.  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,   தன்னைக் கவர்ந்த பெண்மணி குன்வர் பாய்என்று பிரதமர் மோடி அவர்கள்  குன்வர்பாயைப் பாராட்டினார். 
v  முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் : ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையத்தை தெற்கு மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் வினோத்குமார் தொடங்கி வைத்தார். அதேபோல் தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள பேகம்பேட் ரயில் நிலையமும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.    
v  கர்நாடக மாநிலத்திற்கான மூவர்ண கொடியை வெளியிட்டார் முதல் மந்திரி சித்தராமையா : கொடியின் வடிவமைப்பு ஆனது மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டிருக்கும்.  கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருக்கும்.
o    மாநிலத்திற்கு என்று தனி கொடி வைத்திருப்பதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் எதுவும் இல்லை.  ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
v  லோசர் திருவிழா” (Losar Festival) எனப்படும், புத்த மத புத்தாண்டு நிகழ்வு அருணாச்சல் பிரதேசத்தின் இட்டா நகரில் 2-4 மார்ச் 2018 தினங்களில் கொண்டாடப்பட்டது.
v  "ஐ-மெட்ரோஸ்” (I-Metros) எனப்படும்  இந்தியாவில் காணப்படும் அனைத்து மெட்ரோ இரயில் நிறுவனங்களின் சங்கத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
v  அதிக அளவிலான பெண்கள் தொழில்முனைவோர்களைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் (Mastercard Index for Women Entrepreneurs) இந்தியா 57 வது இடத்தைப் பெற்றுள்ளது.  மாஸ்டர்கார்டு” (MasterCard) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வுப் பட்டியலில், முதல் ஐந்து இடங்களை முறையே, நியூசிலாந்து, சுவீடன், கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் பெற்றுள்ளன.
v  உலகளவில், 2018 ஆம் ஆண்டில், அதி வேகமாக வளர்ந்து வரும் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த டாடா கன்சல்டி சர்வீஸஸ்” (Tata Consultancy Services (TCS)) நிறுவனமும் இடம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனமான “Brand Finance” வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், ஐ.பி.எம்(IBM) மற்றும் அக்செஞ்சர்” (ACCENTURE) நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
v  12 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா  ராஜஸ்தான் மாநில பேரவையில்  நிறைவேறியது.

வெளிநாட்டு உறவுகள்

v  எதிர்காலத்திற்கான இலக்குகள்” ("Vision for Future" ) நிகழ்வு : இந்தியா - ரஷியா நாடுகளுக்கிடையேயான 70 ஆண்டு கால வெற்றிகரமான நல்லுறவை கொண்டாடும் வண்ணம் எதிர்காலத்திற்கான இலக்குகள்எனும் நிகழ்வு புது தில்லியில் நடைபெற்றது.
v  புவியதிர்ச்சியினால் பாதிப்பிற்குள்ளான நேபாளத்தில், இந்தியா  50,000 வீடுகளைக் கட்டி கொடுக்கவுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில்  இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (United Nations Development programme (UNDP)), ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் (United Nations office for Project Services (UNOPS)) ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. 
v  ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியின் (European Bank for Reconstruction and Development (EBRD))  69 வது உறுப்பினராக இந்தியா இணையவுள்ளது.  1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையிடம் லண்டனில் அமைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

v  ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருது பறிப்பு :  மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கெளரவம் மிக்க மனித உரிமை விருதை அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மியாமன்ரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறி குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட விருது பறிக்கப்பட்டுள்ளது.
v  ஜீனிஃபர் கோப்ரா" (Juniper Cobra) என்ற பெயரில் அமெரிக்கா - இஸ்ரேல் நாட்டு இராணுவங்களுக்கிடையே, ஏவுகணைத் தாக்குதலை தடுப்பதற்கான கூட்டு இராணுவப்பயிற்சி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்றது.
v  உலக வான்வழி போக்குவரத்து மேலாண்மை கூடுகை (World Air Traffic Management congress) 6 - 8 மார்ச் 2018 ஆகிய தினங்களில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது.
v  இங்கிலாந்து நாட்டின்திறன் தூதராக  இந்திய வம்சாவளி தொழில் அதிபர் நியமனம் : இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி சஞ்சீவ் குப்தா. இவர் அங்கு உருக்கு தொழில் அதிபராக உள்ளார்.  இத்திட்டத்தின் கீழ், தொழில் துறை மாணவர்கள் திட்டம், மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. படிக்கிற காலத்திலேயே அவர்கள் தொழில் துறை பயிற்சியும், அனுபவமும் பெற துணை நிற்கிறது. இங்கிலாந்து முழுவதும் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய நியமனங்கள்

v  மத்திய அரசின் செய்தி நிறுவனமான  பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (Press Information Bureau (PIB)) புதிய இயக்குனராக ஸ்டான்ஷிகு கர் (Sitanshu Kar) நியமிக்கப்பட்டுள்ளார். 
v  மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தெலுங்கு தேசம்  கட்சியைச் சார்ந்த  அசோக் கஜபதி ராஜு, சௌதரியின் ராஜிநாமா : அசோக் கஜபதி ராஜு மத்திய விமான போக்குவரத்து அமைச்சராகவும், சௌதரி மத்திய இணை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
v  விமான போக்குவரத்து துறை இலாகா, வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது : விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ  தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பொறுப்பை பிரதமர் மோடி கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, விமான போக்குவரத்து துறையை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

v  ரூ. 50 கோடிக்கு மேல் வங்கியில் கடன் வாங்க பாஸ்போர்ட் எண் அவசியம் : 50 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடன் வாங்குபவர்களிடம் பாஸ்போர்ட் குறித்த விவரங்களை பெற வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடு தப்பி செல்ல முயற்சிக்கும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும்.

முக்கிய தினங்கள்

v  தேசிய கைத்தறி தினம் ( National Handloom Day ) - மார்ச் 8
v  சர்வ தேச பெண்கள் தினம்  (International Women’s Day 2018 )  மார்ச் 8 அன்று கிராம மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்வை மேம்படுத்த இதுவே காலம்  (Time is Now: Rural  and urban activists transforming women’s lives) எனும் கருத்தை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.
v  உலக சிறுநீரக தினம் 2018  (World Kindney Day 2018)  மார்ச் 8 2018 அன்று, ”சிறுநீரகங்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம்” (Kidneys and Women’s Health) எனும் நோக்கத்தில் அனுசரிக்கப்பட்டது.  உலகமெங்கும், மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் சிறுநீரக தினமாகஅனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.   

விருதுகள் / மரியாதைகள்

v  ஃபிரிட்ஷ்கர் பரிசு 2018” (Pritzker Prize) :  கட்டடவியல் துறைக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் ஃபிரிட்ஷ்கர்விருது  இந்திய கட்டடவியல் வல்லுநர் பாலகிருஷ்ணா தோசிக்கு (Balkrishna Doshi) வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதைப் பெற்றுள்ள முதல் இந்தியர் எனும் பெருமையை தோசி பெற்றுள்ளார்.  ஃபிரிட்ஷ்கர் விருதானது” 1979 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலுல்ள சிக்காக்கோ பிரிட்ஷ்கர் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 

அறிவியல் தொழில்நுட்பம்

v  டியாங்கோங்-1  :  அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம். ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விளையாட்டுகள்

v  தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் தேசிய சாதனை படைத்தார். அத்துடன் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
v  ”Uber India” டாக்சி நிறுவனத்தின் முதல் விளம்பர தூதராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
v  ஆசிய கோப்பை வில்வித்தையின் '1-ஆம் நிலை' போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றது.இதில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா  ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
v  ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே  மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
o    முன்னதாக, மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார்  மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
o    மது வேத்வான் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
o    மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார்-திவ்யா தயால்-மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
v  ஐ-லீக் கால்பந்து: பஞ்சாப் சாம்பியன்  : ஐ-லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
v  தேசிய தடகளம்: சூரியாவுக்கு தங்கம் : தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் எல்.சூரியா தங்கம் வென்றார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறும் போட்டியில் பந்தய இலக்கை 32 நிமிடம் 23.96 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த அவர், காமன்வெல்த் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தார். முன்னதாக அவர், 5000 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
v  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் வெள்ளி வென்றார் அஞ்சும் முட்கில் : மெக்ஸிகோவின் குவாதலஜரா நகரில் நடைபெறும் இப்போட்டியில்,  மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் முட்கில், சீனாவின்     டிங் சனைத் தோற்கடித்து வெள்ளி வென்றுள்ளார். இப்போட்டியில், சீனாவின் ருய்ஜியாவ் பெய் 455.4 புள்ளிகளுடன் தங்கமும், டிங் சன் 442.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
v  தேசிய தடகளம்: தமிழக வீரர் தருண் சாதனை :   பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 22-ஆவது ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்  போட்டியில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண்   49.45 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்காக இந்திய தடகள சம்மேளனம் 49.45 விநாடிகளையே இலக்காக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
v  ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 3 தங்கம் : ஆசிய கோப்பை வில்வித்தையின் '1-ஆம் நிலை' போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றது. இதில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி 27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. முன்னதாக, மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார்-திவ்யா தயால்-மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !
----------------------


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!