TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 01-03-2018
தமிழகம்
v தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு விருது : அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின்
கூட்டமைப்பின் (Association of State Road Transport
Undertakings - ASRTU) 2016-2017 ஆம் ஆண்டிற்கான 11 விருதுகளை
தமிழ்நாடு அரசின், மாநகர் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு
அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், சேலம், கோயம்பத்தூர் மற்றும் கும்பகோணம் ஆகிய போக்குவரத்துக்
கழகங்கள் பெற்றுள்ளன.
v காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி ஸ்ரீ
ஜெயேந்திர சரஸ்வதி 28-2-18 அன்று காலமானார். திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி என்ற கிராமத்தில் 18 ஜீலை 1935 அன்று பிறந்த ஜெயேந்திர சரஸ்வதியின்
இயற்பெயர் சுப்ரமணியம் மகாதேவன்
என்பதாகும். ஸ்ரீஜயேந்திரர்
மறைவையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக விஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்க உள்ளார்.
v தமிழகத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கின.
o
2028-19-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இரண்டு பாதுகாப்பு உற்பத்தி பெருவளாகங்கள்
அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் திரு அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.
o
இவற்றில்
ஒன்று தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
o
தொழில்
சதுக்கம் என்ற வகையில் அமையவுள்ள இந்த பெருவளாகம் சென்னை முதல் ஓசூர், கோயம்புத்தூர், சேலம்,
திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் அமைந்திருக்கும்.
o
இந்தத்
திட்டம் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
v தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - மாநில அளவிலான குழு அமைப்பு : தமிழகத்தில்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி ஆர்.வாசுகி தலைமையில்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா
v இந்தியாவின் முதல் ’விமானப் போக்குவரத்து பல்திறன் மையம்’
(Aviation Multi Skill Development Centre) மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் அஷோக் கஜபதி ராஜீ (Ashok
Gajapathi Raju) அவர்களால் சண்டிகாரில்
துவங்கப்பட்டது.
v ’ஸ்ரீஜன்’ (SRIJAN -Station
Rejuvenation through Joint Action) என்ற பெயரில் நாடெங்கிலுமுள்ள 600 முக்கிய இரயில் நிலையங்களை மறு சீரமைப்பதற்காக பொது
மக்களிடம் ஆலோசனைகளை பெறும் திட்டம்
மத்திய அரசின், இந்திய இரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Indian
Railway Stations Development Corporation Limited (IRSDC) துவங்கப்பட்டுள்ளது.
v மனிதக் கழிவை அகற்ற ரோபோ : இந்தியாவில் முதல் முறையாக,
"பண்டிகூட்”
(Bandicoot) எனப்படும்
மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
v “அனைவருக்குமான உள்ளடங்கிய இணையதள சேவை பட்டியலில்”
(Inclusive Internet Index 2018) இந்தியா 47 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஃபேஸ்புக் மற்றும்
தி எக்கணாமிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்பட்டியலில், முதல்
ஐந்து இடங்களை முறையே,
சுவீடன்,
சிங்கப்பூர், அமெரிக்கா, டென்மார்க் மற்றும் தென் கொரியா நாடுகள் பெற்றுள்ளன.
v இந்தியாவின் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக,
ஆசிய வளர்ச்சி வங்கி
(Asian
Infrastructure Investment Bank (AIIB)) 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல்
வழங்கியுள்ளது. சீனாவிலுள்ள,
பீஜிங் நகரில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இவ்வங்கியானது
டிசம்பர் 2015
ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். பிப்ரவரி 2018 இன் படி மொத்தம் 84 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இவ்வங்கியில்,
சீனாவிற்கு அடுத்ததாக, 7.5 சதவீத பங்குகளுடன், இரண்டாவது மிகப்பெரிய
பங்குதாரர் நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
v ”மூடி
முதலீட்டாளர் சேவை நிறுவனத்தால்” (Moody’s Investors Service) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 2018 ஆம் காலண்டர் ஆண்டில்,
இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
v பன்னிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் மீது கற்பழிப்பு போன்ற பாலியல் வன்முறைகளில்
ஈடுபடுவோருக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் கூடிய மரண தண்டனை வழங்குவதற்கான
சட்டத்திற்கு ஹரியானா மாநில கேபினட் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
v ஆள்கடத்தல் சட்டம் -2018ன் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது, இச்சட்டத்தின் மூலம்,
குற்றவாளிகளுக்கு
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்
முதல் ஆயுள் சிறை தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ. 1
லட்சத்துக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும். தற்போது
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கடத்தல் தடுப்புப் பிரிவின் (National
Anti-Trafficking Bureau) பணிகளைத்
தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தேசிய அளவில் மேற்கொள்ளும்.
உலகம்
v
‘என் (N)’ என்ற எழுத்தை
பயன்படுத் சீன அரசு தடை : சீனாவில் ஆங்கிலம், மாண்டரின்
ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற
எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மார்ச் 1 முதல் அமலுக்கு
வந்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
v ”லேமித்யா 2018” (Lamitye 2018) என்ற பெயரில், இந்தியா மற்றும் செசல்ஸ் (Seychelles) நாடுகளுக்கிடையே 8 வது கூட்டு இராணுவப் பயிற்சி செசல்ஸ் நாட்டிலுள்ள மாகி தீவுகளில் (Mahe
Island) நடைபெற்றது.
v இந்தியா - நேபாள நாடுகளுக்கிடையே,
7 வது ‘சிறந்த மனிதர்கள் குழு கூடுகை”
(Eminent
Persons Group) நேபாள தலைநகர்
காத்மண்டுவில் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
v பிரகதி திட்டத்தின் 24 ஆவது கலந்துரையாடல் கூட்டம் பிரதமர்
திரு. நரேந்திர மோடி தலைமையில் 28-02-2018 அன்று நடைபெற்றது. ’பிரகதி திட்டம்’ என்பது. முனைப்பான ஆளுகை மற்றும் அரசு திட்டங்களை குறித்த காலத்தில்
நிறைவேற்றி முடிக்கவும் வகை செய்வதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
v இந்தியா மற்றும் இஸ்ரேலின் உள்நாட்டு மற்றும் பொது
பாதுகாப்பு குறித்த கூட்டு வழிகாட்டு குழுவின் இரண்டு நாள் கூட்டம் 27,28 பிப்ரவரி 2018 ஆகிய இரு தினங்கள் புது தில்லியில் நடைபெற்றது.
o
அரசு
அல்லாத பயங்கரவாதம் உள்பட பயங்கரவாதிகளிடம் இருந்து வரும் அமைதி மற்றும்
பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை எதிர்த்துப் போரிடவும் இரு நாடுகளுக்கு இடையிலான
ஒத்துழைப்பையும் இரு தரப்பு வர்த்தகத்தையும் விரிவுபடுத்துவது என இருநாட்டு
பிரதமர்களும் முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
v இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக
ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு
ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
v இந்தியா மாசிடோனியா இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொருளாதாரம்
v 2017-18 ஆம் நிதியாண்டில், ஜனவரி மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திரச் செலவுக் கணக்கு விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
o
2018
ஜனவரி மாதம் வரை மத்திய அரசுக்கு 11 லட்சத்து 63 ஆயிரத்து 386 கோடி ரூபாய் வருவாயாகக்
கிடைத்துள்ளது.
o
(மொத்த
வருவாய்க்கான திருந்திய மதிப்பீட்டில் இது 71.7
சதவீதமாகும்).
o
இதில்
9 லட்சத்து 71 ஆயிரத்து
323 கோடி ரூபாய் வரி வருவாய் (மத்திய அரசுக்கான நிகர
வருவாய்), வரி அல்லாத வருவாயாக 1
லட்சத்து 24 ஆயிரத்து 364 கோடி
ரூபாயும், கடன் அல்லாத மூலதன வருவாயாக 67 ஆயிரத்து 699 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன.
o
கடன்
அல்லாத மூலதன வருவாயில், கடன்
வசூல் (12 ஆயிரத்து156 கோடி ரூபாய்)
மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் (55
ஆயிரத்து 543 கோடி ரூபாய்) ஆகும்.
o
வரிவருவாயில்
மாநிலங்களின் பங்குத் தொகையாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 477
கோடி ரூபாயை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது.
o
மத்திய
அரசின் மொத்தச் செலவினம் 18
லட்சத்து 39 ஆயிரத்து 945 கோடி ரூபாய்
(2017-18 நிதியாண்டின் திருந்திய மதிப்பீட்டின் 83 சதவீதமாகும்).
o
இதில்
15 லட்சத்து 75
ஆயிரத்து 780 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கு ஆகும். 2 லட்சத்து 64 ஆயிரத்து 165
கோடி ரூபாய் மூலதனக் கணக்காகும்.
o
மொத்த
வருவாய்ச் செலவினத்தில் 4
லட்சத்து 14 ஆயிரத்து 238 கோடி ரூபாய்
திருப்பிச் செலுத்தப்பட்ட வட்டித் தொகை, 2 லட்சத்து 18 ஆயிரத்து 581 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்குச்
செலவிடப்பட்ட தொகையாகும்.
(ஆதாரம்: http://pib.nic.in)
முக்கிய
தினங்கள்
v 42 ஆவது சிவில் கணக்குகள் தினம் (Civil
Accounts Day) - மார்ச் 1
கூ.தக : இந்திய சிவில் கணக்குகள் பணிகள் (Indian Civil Accounts Service (ICAS)) உருவாக்கப்பட்ட
தினமான மார்ச் 1, (1976 ) சிவில் கணக்குகள் தினமாக ஒவ்வொரு
ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
v தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28, “நிலையான எதிகாலத்திற்கான
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” (Science and Technology for a sustainable future)
எனும் தலைப்பில் அனுசரிக்கப்பட்ட்து.
கூ.தக: தேசிய
அறிவியல் தினமானது 28-02-1928 அன்று சர்.சி.வி.ராமன் அவர்களால்
ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
விளையாட்டுகள்
v லாரியஸ் விளையாட்டு விருதுகள் 2018
(2018 Laureus Awards)
o
2017 ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ரோஜர் ஃபெடரர்,
சுவிட்சர்லாந்து (டென்னிஸ்)
o
2017 ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது - செரீனா வில்லியம்ஸ் ,
அமெரிக்கா (டென்னிஸ்)
v ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற முதல்
இந்தியப் பெண் 'அருணா புத்தா ரெட்டி’ :
ஆஸ்திரேலியாவில் நடைபெற உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா
ரெட்டி மகளிருக்கான வால்ட் பிரிவில்
வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ்
போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். மேலும்
ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்
பெண் என்ற சாதனையை இதன்மூலம் படைத்துள்ளார்.
புத்தகங்கள்
v “இஸ்லாமுக்கு ஓர் சிந்தனையாளரின் வழிகாட்டி” என்ற நூலின் உருது மொழி பெயர்ப்பு 2018 மார்ச் 1 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னிலையில்
ஜோர்டான் மன்னர் வெளியிடுகிறார். இந்நூலை, ஜோர்டான் மன்னரின்
சகோதரரும், அந்நாட்டின் மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்
துறை முதன்மை ஆலோசகருமான இளவரசர் காஜி பின் முகமது பின் தலால் எழுதியுள்ளார்.
படியுங்கள் ! பகிருங்கள்
! வெற்றி பெறுங்கள் !
---------------------
March 1 Current affairs in Tamil. Awesome sir. Keep continue
பதிலளிநீக்குthank u for ur motivation...will do
நீக்குIt's really awesome sir, keep doing
பதிலளிநீக்கு