-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 30-31 மார்ச் 2018

TNPSC Current Affairs 30-31 March 2018

TNPSC Current Affairs 30-31 March 2018

இந்தியா

v  ”181 சக்தி” (181-Sakhi) என்ற பெயரில், பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றி புகார் செய்வதற்கான இலவச தொலைபேசி உதவி சேவையை  அஸ்ஸாம் மாநில அரசு துவக்கியுள்ளது.
v  சீக்கிய விழிப்புணர்வு மாதம் - ஏப்ரல் 2018” : அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம்  ஏப்ரல் 2018 மாதத்தை சீக்கிய விழிப்புணர்வு  மற்றும் பாராட்டுதலுக்கான மாதமாக (Sikh Awareness and Appreciation Month) அறிவித்துள்ளது.
v  நாட்டிலேயே,  அதிக மலைவாழ் மக்கள் வாழுமிடங்களில் சுத்தமான குடிநீர் சேவை வழங்கியுள்ள மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்திலுள்ளது.
v  இந்தியாவின் மிக உயரத்தில் அமைந்துள்ள சாலை  ( Longest Elevated Road ) மத்திய பிரதேசத்தில் காசியாபாத்தில் (Ghaziabad) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
v  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 % பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
v  சர்வதேச படகு திருவிழா (International Yachting Festival) 29 மார்ச் 2018 முதல் 01 ஏப்ரல் 2018 வரை  ஆந்திரப் பிரதேச அரசால் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.
v  ‘Huddle Kerala’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய  புதிதாகத் தொழில் துவங்குவதற்கான கூடுகை  கேரளா மாநிலத்திலுள்ள கோவளத்தில் 6 - 7 ஏப்ரல் 2018 தினங்களில் நடைபெறுகிறது.
v  இந்திய வங்கித்துறையில் முதல் முறையாக கேயா” (Keya) எனும் பெயரில்  செயற்கை நுண்ணறிவு உரையாடி(AI-run voicebot) யை கோடக் (Kotak) வங்கி அறிமுகம் செய்துள்ளது. 
v  கறுப்புக் கோழி (கடக் நாத் கோழி)  (Kadaknath chicken) மீதான, 'புவிசார் குறியீடு' மத்திய பிரதேச மாநிலத்திற்கு  கிடைத்துள்ளது.  மத்திய பிரதேசத்தில்   வளர்க்கப்படும் நாட்டுக் கோழி வகையைச் சேர்ந்த, 'கடக் நாத் கோழி' என அழைக்கப்படும், கறுப்புக் கோழியின் முட்டை, எலும்பு மற்றும் மாமிசம் அனைத்தும் கறுப்பாக இருக்கும். இதன் இறைச்சியில், கொழுப்பு குறைவாகவும், புரதச் சத்து அதிகமாகவும் உள்ளது.
v  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக அசோக் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
v  தனிநபர் வருமான வரி, பெரு நிறுவனங்கள் வரி மீது சுகாதாரம், கல்விக்காக கூடுதல் வரி (செஸ்) 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்வு.
v  தாஜ்மஹாலைப் பார்வையிட நேரக் கட்டுப்பாடு :  ஏப்ரல் 1-ம் தேதி முதல் தாஜ்மஹாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும்  என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
v  மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது  60 லிருந்து 62ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
v  அம்பேத்காரின் பெயரில் மாறுதல் செய்து உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது :  இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் அம்பேத்கார் 'பாபாசாகேப்' என்றும், இதர வடமாநிலங்களில் 'பாபா பீம்ராவ்' என்றும்தான் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
v  நைத்வார் மோரி நீர் மின் நிலைய திட்டம்(Naitwar Mori Hydro Electric Project) :   உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தரகாசியில் (Uttarkashi) அமையவுள்ள நைத்வார் மோரி நீர் மின் நிலைய திட்டத்திற்கு மத்திய  அமைச்சர் R K சிங் 30-03-2018 அன்று அடிக்கல் நாட்டினார்.
v  இராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மிகப்பெரிய உணவு பூங்காவான  கிரீண்டெக் மெகா உணவு பூங்காவை” (Greentech Mega Food Park Private Ltd)  ஆஜ்மீரில்,  மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சர் ஹர்ஸிமராத் கவுர் படால் (Harsimrat Kaur Badal) துவங்கி வைத்தார்.
v  ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 “ (Smart India Hackathon) என்ற பெயரில்  இந்திய அரசின் மனித வளத்துறையினால் நடத்தப்படும் நாட்டின் முன்னேற்றத்திற்கான்  உலகின் மிகப்பெரிய  டிஜிட்டல் தொழில்நுட்ப போட்டியாகும்.  இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடெங்கிலுமுள்ள  மாணவர்களின்  புதுமையான சிந்தனைகளை தேசத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாகும்.
v  உத்தரபிரதேச அரசின் புதிய அயோத்தியா  திட்டத்தின் கீழ்  உத்தரப்பிரதேசத்திலுள்ள சரையு நிதிக்கரையில் ரூ.330 கோடி 100 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை அமைக்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
v  ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வரும் பட்ஜெட் 2018-2019 அறிவிப்புகளின் விவரம்: 
o    நீண்டகால மூலதன ஆதாய வரி திட்டம் :  பங்கு விற்பனை, பரஸ்பர நிதி போன்ற பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்தால் அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீத வரி
o    மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து ரூ.40,000 வரை சலுகை பெறும் வகையில் நிலையான கழிவுத் திட்டம்
o    ரூ. 250 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் ஈட்டும் தொழிலகங்களுக்கான நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு.
o    மூத்த குடிமக்கள், வங்கி வைப்பு நிதி, அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை வட்டி பெற்றால், அதற்கு வரி கிடையாது; இதேபோல காப்பீட்டு பிரீமியம், மருத்துவச் செலவு ஆகியவற்றின் கீழ் 80டி பிரிவின் கீழ் மூத்த குடிமக்கள் ரூ.50,000 வரை வரிச் சலுகை.
o    பெரும் பணக்காரர்களுக்கு வருமான வரியுடன் விதிக்கப்படும் 10 முதல் 15 சதவீத கூடுதல் வரி

வெளிநாட்டு உறவுகள்

v   ஜப்பானுக்கு மூன்று நாள்  அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை 30-03-2018 அன்று சந்தித்துப் பேசினார்.
v  இந்தியா - ஷாம்பியா நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட நீதித்துறை ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


சர்வதேச நிகழ்வுகள்

v    ”ICBM சர்மாட்” ( ICBM Sarmat ) என்ற பெயரில்  அதி நவீன கண்டம் விட்டு கண்டம்  தாண்டி தாக்கவல்ல ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.  உலகிலேயே  மிகவும் அதிக எடையுள்ள ஏவுகணையாக அறியப்பட்ட சாத்தான்’ (’Satan’) ஏவுகணைக்கு மாற்றாக இந்த புதிய ஏவுகணை பயன்படுத்தப்படவுள்ளது.
v  பாபர்” (Submarine Launched Cruise Missile (SLCM) BABUR) எனும் பெயரில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது.  இந்த   ஏவுகணையானது 450 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இலக்குகளைத்தாக்க வல்லது.
v  மியான்மர் அதிபராகப் ஊ வின் மியிந்த் (66) பொறுப்பேற்றுக் கொண்டார்.
v  எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபியே அஹமது (Abiye Ahmed) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
v  ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் அரசியல் விவகாரத்துறை தலைவராக ரோஸ்மெர்ரி டிகார்லோ நியமனம் : முன்னாள், அமெரிக்க தூதரான ரோஸ்மெர்ரி டிகார்லோ ஐக்கிய  நாடுகள் சபையின் அரசியல் விவகாரத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐநாவின் அரசியல் விவகாரத்துறை தலைவராக இருந்துவரும் ஜெஃப்ரி ஃபெல்ட்மெனுக்கு அடுத்து, ரோஸ்மெர்ரி இந்த பதவியில் பொறுப்பேற்கவுள்ளார்.

முக்கிய நியமனங்கள்

v   துணை தேர்தல் கமி‌ஷனராக சந்திர பூ‌ஷண் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 5 ஆண்டுகளுக்கு துணை தேர்தல் கமி‌ஷனர் பொறுப்பை வகிப்பார். 
கூ.தக. : தற்போது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அவர்களும், மற்ற இரண்டு தேர்தல் ஆனையர்களாக சுனில் அரோரா மற்றும் அசோக் லாவாசா ஆகியோரும் உள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்பம்

v   இண்டர்ஸ்டிடியம்” (interstitium) என்ற பெயரில் புதிய உடல் உறுப்பைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.  மனித தோலின் கீழ் பகுதியில்  திரவத்தினால் நிரப்பப்பட்ட  ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட பகுதிகளே இந்த புதிய உறுப்பு என அறியப்படுகிறது.
v  ஜிசாட் 6' செயற்கைகோள் வெற்றி :    
o    ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து 29-03-2018 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியை இஸ்ரோ பதிவு செய்துள்ளது.
o     முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 6 ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
o    இஸ்ரோ இதுவரை 12 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 8 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைகோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.
o    விண்ணில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
o    ஏற்கெனவே விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைகோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள். இது பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.
v  8 டன் எடை கொண்ட சீன விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வருகிறது :  டியாங்காங்-1 என பெயரிடப்பட்ட  விண்வெளி நிலையம் சீனா சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு  நிறுவப்பட்டது. இந்த விண்வெளி நிலையத்திற்கு 6 விண்வெளி வீரர்களும் சென்று வந்துள்ளனர்.  சில ஆண்டுகளில் செயலிழந்த அதை தென்சீனக்கடலில் விழவைக்க சீனா முயன்றது. ஆனால் அதன் முயற்சிகள் அனைத்தும் வீணானதுடன், டியாங்காங்குடனான தொடர்புகள் அனைத்தும் கடந்த 2016-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையம் தற்போது பூமியை நோக்கி வருகிறது.
v  செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி   நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்  விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
v  'எலக்ட்ரிக்' கார், ஸ்கூட்டர்களுக்கு இஸ்ரோ பேட்டரி : ராக்கெட்டுகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பயன்படுத்தி வரும் லித்தியம் பேட்டரி, விரைவில் கார்களிலும், ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர்  சிவன் தெரிவித்துள்ளார்.
v  ”K2-229b” என்று பெயரிடப்பட்டுள்ள பூமியை விட 20%  பெரிதான புதிய கோளை பிரான்ஸ் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விளையாட்டுகள்

v   பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்துக்கு (Kidambi Srikanth)  துணை ஆட்சியர் பதவியை ஆந்திர பிரதேச மாநில அரசு வழங்கியுள்ளது.
v  ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வில்லியம்சன்  : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (27) நியமிக்கப்பட்டுள்ளார்.
v  முத்தரப்பு டி20 போட்டி: ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் :  மும்பையில் நடைபெற்ற முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி  சாம்பியன் ஆகியுள்ளது.
v   சிட்னியில் நடைபெறும் ISSF ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ( Junior World Cup), 25மி பிரிவில்,  இந்தியாவின்  முஷ்கான் பனவாலா(16)  (Muskan Bhanwala) தங்கம் வென்றுள்ளார்.          
படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !

5 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.