நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையைப் பற்றிய முக்கிய தகவல்கள்

Img courtesy :http://www.udd.gujarat.gov.in/sou.php
  • சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 31-10-2018 அன்று பிரதமர் மோடி அவர்கள் திறந்துவைத்தார்.  
  • குஜராத் மாநிலத்தில் , நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.  வல்லபாய் படேலின் 143ஆவது பிறந்த நாளில் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • ”ஒற்றுமைக்கான சிலை” எனப்பெயரிடப்பட்டுள்ள   வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது.  இதுவரையில் உலகின் உயரமான சிலையாகக் கருதப்பட்ட  சீனாவில் உள்ள ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை 153 மீட்டர் உயரம் கொண்டதாகும்.   தற்போது உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை, சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு கிடைக்கவுள்ளது. மேலும்,  அமெரிக்காவின் சுதந்திர தேவி (97 மீட்டர்) சிலையை விட இரு மடங்கு உயரம் கொண்டதாகும். 
  • பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் என்ற சிற்ப கலைஞரால் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இந்த சிலையை உருவாக்கி உள்ளன. 250 இன்ஜினியர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்களில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த சிலை 553 வெண்கல பகுதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகளை கொண்டதாகும். இந்த பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்த அடிப்பகுதி பிரத்யேக வடிவமைப்பை கொண்டுள்ளது இதன் மற்றொரு தனிச்சிறப்பாகும். 
  • இந்த சிலையில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம்அமைக்கப்பட்டுள்ளது. 
  • படேலின் சிலையின் அடிபாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!