விவசாயிகளின் நலனுக்காக அடங்கல் பதிவேட்டினை மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தமிழக முதலமைச்சர் 26-10-2018 அன்று துவக்கி வைத்தார்.
- இ-அடங்கல் முறையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர் சாகுபடி சம்பந்தமான விவரங்களை பதிவு செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தாங்கள் பயிர் செய்துள்ள விவரங்களை அவர்களே பதிவு செய்யலாம்.
- இ-அடங்கலை கொண்டு ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் `ஜி’ அறிக்கை மிக எளிதாக இறுதி செய்யப்படும். விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி இ-அடங்கல் பதிவை பார்வையிடவும், அடங்கல் நகல் பெற அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி எந்நேரத்திலும், எவ்விடத்திலும் பதிவிறக்கம் செய்ய இயலும். வெள்ள சேதம் மற்றும் வறட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இ-அடங்கல் பதிவேட்டின் மூலம் தவறுகள் இல்லாமல் கணக்கிட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.