நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
    (1) தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகை நூலில் 1452 பாடல்கள் உள்ளன.இந்நூல் தமிழ் மொழியின் உபநிடதம் எனப்படுகின்றது.
    (2) தாயுமானவர் திருமூலர் மரபில் வந்த மெளன குருவிடம் ஆசிபெற்றவர்.
    (3) தாயுமானவர் காலம் 17ம் நூற்றாண்டு.
    (4) தாயுமானவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமி புரம்.
    1. 1,2,4 சரி 3 தவறு
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. 1,3,4 சரி 2 தவறு
    4. அனைத்தும் சரி

  2. ’தமிழ் மாதின் இனிய உயிர்நிலை’ என்று உலகோரால் பாராட்டப்படும் நூல்
    1. தாயுமானவர் பாடல்கள்
    2. புறநானூறு
    3. அகநானூறு
    4. திருக்குறள்

  3. பொருத்துக
    (1) பொருதகர் (a) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    (2) கேடு (b) குறிப்பு வினைமுற்று
    (3) பகல்வெல்லும் (c) எதிர்மறை வினையாலணையும் பெயர்
    (4) ஒல்கார் (d) வியங்கோள் வினைமுற்று
    (5) ஒடுக்கம் (e) தொழிற்பெயர்
    (6) செயல் (f) ஏழாம் வேற்றுமை தொகை
    (7) அறியார் (g) வினையாலணையும் பெயர்
    (8) பொருட்டு (h) வினைத்தொகை
    1. d c b h a g e f
    2. h a f g e d c b
    3. g e d c b h a f
    4. a f g e d c b h

  4. வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர்
    1. கபிலர்
    2. ஔவையார்
    3. பரணர்
    4. ஓதலாந்தையார்

  5. ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது
    1. இயன்மொழி வாழ்த்து
    2. படைமடம்
    3. கொடைமடம்
    4. பொருண்மைகாஞ்சி

  6. பொருத்துக
    (1) குறிஞ்சி (a) ஓதலாந்தையார்
    (2) முல்லை (b) ஓரம் போகியார்
    (3) மருதம் (c) அம்மூவனார்
    (4) நெய்தல் (d) பேயானார்
    (5) பாலை (e) கபிலர்
    1. e b c a d
    2. e d b c a
    3. e c d b a
    4. e b c d a

  7. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 180
    2. புலனழுக்கற்ற அந்தணாளன் - கபிலர்
    3. ஐங்குறு நூற்றை தொகுத்தவர் - கூடலூர் கிழார்
    4. நித்திலக் கோவையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 120

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்- பேகன்
    2. அகநானூறு நூலை தொகுத்தவர் - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
    3. ஒரு மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை முதலானவற்றை ஆய்ந்து கூறுவது - பாடாண்திணை
    4. ”நெடுந்தொகை என்ற அடைமொழி உடைய நுல் - அகநானூறு

  9. பொருத்துக.
    (1) 1,3,5 (a) நெய்தல்திணை (40)
    (2) 2,8 (b) முல்லைத்திணை (40)
    (3) 4,14 (c) மருதத்திணை (40)
    (4) 6,16 (d) குறிஞ்சித்திணை (80)
    (5) 10,20 (e) பாலைத்திணை (200)
    1. e d b c a
    2. b d c a e
    3. b d c a e
    4. a b c d e

  10. பொருத்துக
    (a) பழனிமலை (a) காரி
    (b) பறம்பு மலை (b) ஆய்
    (c) கதிரை மலை (c) ஓரி
    (d) கொல்லி மலை (d) அதியமான்
    (e) பொதிகை மலை (e) பாரி
    (f) கோடை மலை (f) பேகன்
    1. c b a f e d
    2. d c b a f e
    3. f e d c b a
    4. e d c b a f



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!