நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்” எனத் தொடங்கும் பாடலானது கம்பராமாயண நூலில் உள்ள எந்த காண்டத்தின் கடவுள் வாழ்த்து பாடலாக அமைந்துள்ளது.
    1. யுத்த காண்டம்
    2. சுந்தர காண்டம்
    3. அயோத்திய காண்டம்
    4. பாலகாண்டம்

  2. “தமிழரசி குறவஞ்சி” என்னும் நூலை இயற்றியவர்.
    1. பெருஞ்சித்திரனார்
    2. பாரதிதாசன்
    3. பள்ளியகரம் ந.கந்தசாமிப்பிள்ளை
    4. அ.வரத நஞ்சையப்பிள்ளை

  3. வெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
    1. இறைச்சி
    2. உள்ளுறை உவமை
    3. படைமடம்
    4. கொடை மடம்

  4. தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்
    1. நாலடியார்
    2. நற்றிணை
    3. புறநாநூறு
    4. ஐங்குறு நூறு

  5. தோழி தலைவன் இடத்தில் தலைவியை விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாறு கூறுவது.
    1. வரைவு கடாதல்
    2. பராய்கடன் உரைத்தல்
    3. படைமொடம்
    4. பொருண்மை காஞ்சி

  6. பொருத்துக
    (1) கபிலரை வாய்மொழி கபிலன் எனப் பாராட்டியவர் (a) மாறோக்கத்து நப்சலையார்
    (2) கபிலரை நல்லிசை கபிலன் என பாராட்டியவர் (b) இளங்கீனார்
    (3) கபிலரை வெறுத்த வேள்வி விளங்கு புகழ் கபிலன் எனப் பாராட்டியவர் (c) பெருங்குன்றுக்கிழார்
    (4) கபிலரை “புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன்” என புகழ்ந்தவர் (d) நக்கீரர்
    1. d a c b
    2. d c b a
    3. d c a b
    4. a b c d

  7. பொருத்துக
    (1) உயர்தனிச் செம்மொழி (a) பரிதிமாற்கலைஞர்
    (2) சமரசம் (b) மு. வரதராசனர்
    (3) கவிதை (c) இளவழகனார்
    (4) வாழ்க்கை (d) மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்
    (5) ஆவுந்தமிழுரும் (e) அ. சிதம்பரநாதன்
    (6) நீதி நுல்களில் இயக்கிய நயம் (f) திரு.வி.க
    (7) மனிதர் வாழ்க (g) எஸ். வையாபுரி பிள்ளை
    1. a b c d e f g
    2. a g f d c b e
    3. a f g c d b e
    4. a f g c d e b

  8. “எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று” என்ற பாடல் இடம்பெற்ற நூல்.
    1. புறநானூறு
    2. புறப்பொருள் வெண்பாமாலை
    3. அக நானூறு
    4. தண்டியலங்காரம்

  9. புறநானூற்றில் உள்ள திணைகள் மற்றும் துறைகளின் எண்ணிக்கை
    1. 11,65
    2. 65,11
    3. 12,65
    4. 65,12

  10. பொருத்துக
    (1) கார் காலம் (a) ஆனி, ஆடி
    (2) கூதிர் (b) சித்திரை, வைகாசி
    (3) முன்பனி (c) மாசி, பங்குனி
    (4) பின்பனி (d) மார்கழி, தை
    (5) இளவேனில் (e) ஐப்பசி, கார்த்திகை
    (6) முது வேனில் (f) ஆவணி, புரட்டாசி
    1. f e d b c a
    2. e f b d a c
    3. f e d c b a
    4. a b c d e f



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!