நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. பொருத்துக
    (1) ஏமாப்பு (a) பாதுகாப்பு
    (2) சோகப்பர் (b) நங்கை
    (3) பொழில் (c) மணம்
    (4) மடங்கல் (d) சிங்கம்
    (5) அரிவை (e) துன்புறுவர்
    (6) கடி (f) சோலை
    1. d b c a e f
    2. e f d b c a
    3. a e f d b c
    4. a f e d b c

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. மதுரை மும்மணிக்கோவை நூல் - குமரகுருபரர்
    2. அழகர் கின்ளை விடு தூது நூல் அமைப்பு - 1 காப்பு வெண்பா + 239 கண்ணிகள்
    3. தூதின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்க பாட்டியல் நூல்
    4. அதியமான் தூதராக ஔவை சென்றதை கூறும் நூல் – புறநானூறு

  3. பாரதியார் எழுதிய உரை நடை நூல்களில் தவறானது
    1. சந்திரகனகையின் கதை
    2. பாஞ்சாலிசபதம்
    3. ஞானரதம்
    4. தராசு

  4. பொருத்துக
    (1) தென்றல் விடு தூது (a) தஞ்சை வேதநாயக சாத்திரியார்
    (2) முத்துக்குமாரசுவாமி பிள்ளைதமிழ் (b) திரிகூடராசப்பகவிராயர்
    (3) பெத்தலகேம் குறவஞ்சி (c)குமரகுருபரர்
    (4) குற்றாலக் குறவஞ்சி (d) பலபட்டை சொக்கநாதபிள்ளை
    1. c a d b
    2. a b d c
    3. c a b d
    4. d c a b

  5. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) பரணியின் இலக்கணம் கூறும் நூல் – இலக்கணவிளக்க பாட்டியல் நூல்
    (2) பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்தாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராக வந்து என்று உ.வே. சாமிநாத அய்யர் கூறினார்.
    (3) கலிங்கத்து பரணி 509 தாழிசைகள் கொண்டது
    (4) இன்றைய ஒடிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
    (5) பிற்கால புலவரான ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரை ”பரணிக்கோர் செயங்கொண்டார் என புகழ்ந்து பாடியுள்ளார்.
    1. 1,2,3,4, சரி 5 தவறு
    2. 1,2,4 சரி 3,5 தவறு
    3. 1,3,5 சரி 2,4 தவறு
    4. அனைத்தும் சரி

  6. பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப்பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைகேற்ற உரையாடற் சிறப்பு பெற்ற நூல் எது
    1. மனோன்மணியம்
    2. குண்டலகேசி
    3. சிலப்பதிகாரம்
    4. கம்பராமாயணம்

  7. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. கண்ணி என்பது - பாட்டின் இரண்டடிகள் பாடுவது.
    2. தூது இலக்கியம் பாடப்படும்வெண்பா - வெண்டளை விரவிய கலிவெண்பா
    3. மனோன்மணியம் நூலை பெ.சுந்தரம் பிள்ளை வெளியிடப்பட்ட ஆண்டு -1891
    4. ஜீவகன் மன்னனின் பழம்பதி ஊர் - திருநெல்வேலி

  8. அகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளை கொண்டது.
    1. 2
    2. 3
    3. 4
    4. 5

  9. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் என்ற பாடலை பாடியவர் - பாரதியார்
    2. ரகசியவழி என்ற ஆங்கியல நூலை எழுதியவர் - லிட்டன் பிரவு
    3. மனோன்மணீயம் என்ற நூலை எழுதியவர் - கவிமணி
    4. பரணியின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்க பாட்டியல் நூல்

  10. மனோன்மணீயம் நூலானது எத்தனை அங்கங்களையும், எத்தனை காட்சிகளையும் கொண்டது.
    1. 5 அங்கங்கள் + 20 காட்சிகள்
    2. 5 அங்கங்கள் + 30 காட்சிகள்
    3. 4 அங்கங்கள் + 20 காட்சிகள்
    4. 4 அங்கங்கள் + 30 காட்சிகள்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!