நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. பொருத்துக
    (1) சூரியகாந்தி (a)சிற்பி பாலசுப்ரமணியம்
    (2) சூரிய நிழல் (b) நா.காமராசன்
    (3) இராசதண்டனை (c)பாரதிதாசன்
    (4) காவியப்பாவை (d) பேராசிரியர்.பெ.சுந்தரம் பிள்ளை
    (5) சேரதாண்டவம் (e)கண்ணதாசன்
    (6) நூல்தொகை விளக்கம் (f)முடியரசன்
    1. c f e b a d
    2. f e b a d c
    3. b a e f c d
    4. d c f e b a

  2. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு – நூலின் நூல் அமைப்பு யாது ?
    1. 36 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள்
    2. 36 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்
    3. 34 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்
    4. 34 தலைப்புகள் + 54 பிரிவுகள் + 1452 பாடல்கள்

  3. இன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றவர் என்ற நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் என்று தமிழர்க்காவும் எழுதியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. முடியரசன்
    4. சிற்பி பாலசுப்ரமணியன்

  4. பொருத்துக
    (1) எந்நாளோ ? (a) நா.காமராசன்
    (2) பூக்கட்டும் புதுமை (b) சிற்பி பால சுப்ரமணியம்
    (3) விடுதலை விளைத்த உரிமை (c) ந.கருணாநிதி
    (4) தளை (d) கண்ணதாசன்
    (5) கண் (e) பாரதிதாசன்
    (6) தண்ணீர்வங்கிகள் (f) முடியரசன்
    1. e f d b a c
    2. b c d e f a
    3. f d b a c e
    4. a b c d e f

  5. பாரதியார் மொழி பெயர்த்த நூல்
    1. சாகுந்தலம்
    2. ராமாயணம்
    3. பாரதம்
    4. கீதை

  6. பொருத்துக
    (1) கண்மலர் (a) வியங்கோள் வினைமுற்று
    (2) பொழி திருமுகம் (b) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தக்கதொகை
    (3) அருள்மொழி (c) வினைத்தொகை
    (4) ஆடுக (d) உருவகம்
    1. a b c d
    2. d c b a
    3. c a b d
    4. c b a d

  7. பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவம்
    1. செங்கீரை
    2. தால்
    3. சப்பாணி
    4. காப்பு

  8. குமரகுருபரர் இயற்றிய நூல்களில் தவறாக இடம்பெற்றுள்ள நூல்
    1. மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்
    2. மதுரை கலம்பகம்
    3. மதுரை மும்மணிகோவை
    4. காசிகலம்பகம்

  9. ’வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்’ என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. மதுரை காஞ்சி
    2. முதுமொழி காஞ்சி
    3. பெத்தல கேம் குறவஞ்சி
    4. குற்றாலக் குறவஞ்சி

  10. ஆண்பால் பிள்ளை தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்
    1. 8
    2. 7
    3. 9
    4. 6



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!