நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. தெர்மாமீட்டர் -வெப்பமானி
    2. மைக்ரோஸ்கோப் -தொலைநோக்கி
    3. டைப்ரைட்டர் -தட்டச்சுப் பொறி
    4. யுனிவர்சிட்டி -பல்கலைகழகம்

  2. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
    (i) சிறந்த ஊர்கள் நகரம் என்ற பெயரால் வழங்கும்
    (ii) புரம் சிறந்த ஊர்களை குறிப்பதாகும்
    (iii) புலம் என்னும் சொல் நிலத்தை குறிக்கும்
    (iv) நம்மாழ்வர் பிறந்தஊர் - கொரட்டூர்
    1. 1,2,3,4,சரி
    2. 1,3,4, சரி, 2 தவறு
    3. 1,2, சரி, 3,4 தவறு
    4. 1,2,3, சரி, 4 தவறு

  3. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. மாயவரம் - கொரநாடு
    2. மதுராந்தக வட்டம் - தென்னாடு
    3. பட்டுக்கோட்டை வட்டம் - கானாடு
    4. தஞ்சை - காந்தி நகரம்

  4. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டவை
    1. மின்னர் - பெண்கள்
    2. காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை
    3. கமன சித்தர் - தேவர்கள்
    4. மந்தி - பெண் குரங்கு

  5. ”பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்த காலம்” என்ற பாடலை எழுதியவர்
    1. கடுவெளி சித்தர்
    2. பகுத்தறிவு கவிராயர்
    3. திரிகூட ராசப்ப கவிராயர்
    4. தாராபாரதி

  6. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. ஊரும், பேரும் நூலின் ஆசிரியர் - இரா. சேதுநாதன்
    2. கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம்
    3. நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் - குப்பம்
    4. கடற்கரை சிற்றூர்கள் - பாக்கம்

  7. “பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது” என்ற பாடலை எழுதியவர்
    1. திரிகூட ராசப்ப கவிராயன்
    2. தாராபாரதி
    3. உடுமலை நாராயணகவி
    4. அழகிய சொக்கநாத புலவர்

  8. “கூனல் இளம் பிறை முடித்த வேணி” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. மரமும் பழைய குடையும்
    2. சித்தர் பாடல்கள்
    3. குற்றாலக் குறவஞ்சி
    4. அந்த காலம், இந்தகாலம்

  9. பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர்
    1. பட்டுக்கோட்டையார்
    2. பகுத்தறிவு கவிராயர்
    3. தாராபாரதி
    4. அழகிய செக்கநாதர்

  10. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க .
    (i) அழகிய சொக்கநாதப்புலவர் காலம் - கி.பி 19 ஆம் நூற்றாண்டு
    (ii) அழகிய சொக்க நாதப்புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தார்
    1. 1,2 சரி
    2. 1 தவறு, 2 சரி
    3. 2 சரி, 1 தவறு
    4. 1, சரி, 2 தவறு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!