நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. கீழ்கண்டவற்றில் தவறானவை:-
    1. அனுமதி - இசைவு
    2. உபயம் - திருப்பணியாளர் கொடை
    3. ஆதவன் - சந்திரன்
    4. உஷார் - விழிப்பு

  2. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் __________
    1. தொழில்
    2. விளக்கு
    3. உயிர்க்கு
    4. உடைத்து

  3. மக்களின் உழவுத் தொழில் பற்றியும் அச்சமுதாயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் நூல்
    1. கலம்பகம்
    2. முக்கூடற்பள்ளு
    3. நந்திக்கலம் பகம்
    4. நாலடியார்

  4. பொருத்துக:-
    (1) ஆடவர் - (a) ஓரையாடுதல்
    (2) மகளிர் - (b) பூப்பறித்தல்
    (3) சிறுவர் - (c) ஏறு தழுவுதல்
    (4) சிறுமியர் - (d) கிட்டிப்புள்
    1. c a d b
    2. a c b d
    3. a b c d
    4. c b a d

  5. ”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்…” என்ற பாடலை பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. பட்டுக்கோட்டையார்
    3. முடியரசன்
    4. பாரதியார்

  6. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. இளமையில் கல் - கட்டளைத் தொடர்
    2. என்ன, இந்த ஓவியத்தின் அழகு- வினா தொடர்
    3. நேற்று எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது - செய்திதொடர்
    4. திருக்குறளை திருவள்ளுவர் இயற்றினார் - செய்வினை

  7. கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாக கூறி நல்வழிப்படுத்தும் நூல்.
    1. முதுமொழிக்காஞ்சி
    2. குற்றாலக்குறவஞ்சி
    3. பழமொழிநானூறு
    4. புறநானூறு

  8. ”இனிமைத் தமிழ் மொழி எமது – எமக்கு இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது”
    1. அண்ணா
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. மு.வரதராசனார்

  9. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் நூல்களில் தவறானவை
    1. தமிழியக்கம்
    2. சேர தாண்டவம்
    3. பாண்டியன் பரிசு
    4. குயில் பாட்டு

  10. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்.
    1. பெருஞ்சித்திரனார்
    2. நா.பிச்சமூர்த்தி
    3. வாணிதாசன்
    4. முடியரசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!