நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 12


  1. காமராசர் காலம்
    1. 1903 ஜீலை 15 முதல் 1972 அக்டோபர் 02 வரை
    2. 1903 ஜீலை 15 முதல் 1975 அக்டோபர் 02 வரை
    3. 1908 அக்டோபர் 30 முதல் 1972 அக்டோபர் 02 வரை
    4. 1908 அக்டோபர் 15 முதல் 1972 அக்டோபர் 02 வரை

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. 1955 - ராஜாஜி
    2. 1949 - குமாரசாமி
    3. 1947 - ஓமந்தூர் ராமசாமி
    4. 1945 - பிரகாசம்

  3. “காமராஜர் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) 1937 ல் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
    (2) 1939 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்
    (3) காமராசரை “தலைவரை உருவாக்குபவர்“ என அழைக்கப்பட்டார்
    (4) இவர் காலத்தில் “கூட்டுறவு இயக்கம்“ வேரூன்றியது
    (5) 1963 ல் புவனேசுவர் மாநாட்டில் அகில இந்திய காங்கிரசு தலைவராக பதவியேற்றார்
    (6) காமராசருக்கு நடுவணரசு“பாரத ரத்னா விருது“, 1976 ஆம் ஆண்டு அளித்தது.
    1. 1,2,4,5 சரி 3,6 தவறு
    2. 1,2,3,4,5 சரி 6 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1,2,3 சரி 4,5,6 தவறு

  4. தொழிற்பெயரில் முதனிலையாகிய பகுதி திரிந்து வருவது
    1. எதிர்மறை பெயரெச்சம்
    2. வினையாலணையும் பெயர்
    3. முதனிலை தொழிற்பெயர்
    4. முதனிலை திரிந்த தொழிற் பெயர்

  5. வினையாலணையும் பெயர் பற்றிய தவறானவை
    1. வினைசெய்தவரை குறிக்காமல் வினையைக் குறிக்கும்
    2. முக்காலத்தையும் காட்டும்
    3. மூவிடங்களிலும் வரும்
    4. தொழில் செய்பவருக்கு பெயராய் வரும்

  6. வழா நிலை மற்றம் வழு எத்தனை வகைப்படும்
    1. 7,4
    2. 6,5
    3. 7,6
    4. 6,7

  7. வல்லினம் மிகா இடங்கள்
    1. ஓரெழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகாது
    2. வினைத் தொகை, உம்மைதொகையில் வல்லினம் மிகாது
    3. உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
    4. பண்புத் தொகையில் வல்லினம் மிகாது

  8. பொருத்துக
    (1) இலைவேல் (a) உருவகங்கள்
    (2) மருப்பூசி (b) உவமைத் தொகை
    (3) மாறன் களிறு (c) வினைத் தொகை
    (4) உயர்துலை (d) ஆறாம் வேற்றுமை தொகை
    (5) மல்லல் நெடுமதில் (e) உரிச்சொற்றொடர்
    1. b d a e c
    2. b a d e c
    3. b a d c e
    4. b a c d e

  9. முத்தொள்ளாயிரத்தை பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை கொண்ட நூல்
    (2) இந்நூல் புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக “108“ வெண்பாவும், பழைய உரை நூல்களில் மேற்கோளாக “22“ வெண்பாவும் கிடைத்தன
    (3) இந்நூல் சிறந்த இலக்கிய நயமும், கற்பனை வளமும் நிறைந்த நூலாக திகழ்கிறது.
    (4) இந்நூல் முழுமையாகக் கிடைக்கப்பெற்றது
    1. 1,2,3 சரி, 4 தவறு
    2. 1,3,4 சரி, 2 தவறு
    3. அனைத்தும் தவறு
    4. அனைத்தும் சரி

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பிளசர் கார் - மகிழுந்து
    2. முக்கியஸ்தர் - தலைவர்
    3. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல பொருள் அங்காடி
    4. பிரதானம் - முதன்மை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!