நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 1st December 2018 | நடப்பு நிகழ்வுகள் 1 டிசம்பர் 2018


TNPSC Current Affairs 1st December 2018

தமிழ்நாடு

v  தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து  ரூ.5 லட்சமாக உயர்வு :
o    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையினை, ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி  தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
o    அதன்படி 1.12.2018  முதல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி. :
o    தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 11.1.2012 அன்று முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
o    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
o    காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
o    ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும்.
o    மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிப்பது முக்கியம்.
o    தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
o    முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் நவம்பர் 2018 வரையில், 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
v  தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கூ.தக. :தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக  அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
v  கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் 29-11-2018 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்தியா

v  ”பாஷா சங்கம்” (‘Bhasha Sangam’)  : பள்ளி மாணவர்கள் 22 இந்திய மொழிகளை எளிதாக கற்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசினால் ”பாஷா சங்கம்” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, மத்திய அரசின் ’ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்’ (Ek Bharat Shreshtha Bharat) எனும் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
v  ’ஹவுஸ்லா 2018’ (Hausla 2018) என்ற பெயரில்  ‘குழந்தைகள் காப்பக நிறுவனங்களில் வாழும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான திருவிழா’ (National Festival for Children of Child Care Institutions)  புது தில்லியில் 26-29 நவம்பர் 2018 தினங்களில், ‘குழந்தைகள் பாதுகாப்பு’ (Child Safety) என்னும் மையக்கருத்தில்,  மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது.
v  ”சாங்காய் திருவிழா” (Sangai Festival) என்ற மணிப்பூர் மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கலாச்சார மற்றும் சுற்றுலா திருவிழா 21-30 நவம்பர் 2018 தினங்களில் நடைபெற்றது.
v  மஹாராஷ்டிரா அரசு ‘மராத்தா’ இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு  52% லிருந்து  68% ஆக உயர்ந்துள்ளது.
v  இந்தியாவில் முதல் ”ஆந்தைகள் திருவிழா’ (Indian Owl Festival) ,  மஹாராஷ்டிரா மாநிலம், பூனேவிலுள்ள பிங்கோரி எனும் கிராமத்தில் நடைபெற்றது.  ஆந்தைகள் இன பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக நடைபெற்ற இந்த திருவிழாவை ‘ஈலா பவுண்டேஷன்’ (Ela Foundation) எனும் அமைப்பு நடத்தியுள்ளது.
v  காவிரியின் குறுக்கே ‘மேகதாது அணை’ (Makedatu Project) அமைக்கும் கர்நாடகா அரசின் திட்டத்திற்கு மத்திய நீர் கமிஷன் (Central Water Commission) 26 நவம்பர் 2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம்

v  2050 ஆம் ஆண்டிற்குள் ‘காலநிலை சமநிலை’ (Climate Neural) என்ற இலக்கினை அடைவதற்கு ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.
v  யுனெஸ்கோவின் ‘தொட்டறியமுடியாத கலாச்சாரங்கள்’ (intangible heritage) பட்டியலில் புதிதாக ஏழு கலாச்சார நிகழ்வுகள் 29-11-2018 அன்று சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு,
o    ’ஷ்ரியம்’ (Ssirum) -  கொரிய பாரம்பரிய மல்யுத்தம்
o    ‘ரெக்கீ’ (Reggae) - ஜமைக்கா நாட்டின் தனித்தன்மை மிக்க இசை
o    ராய்கோ -ஷின்(Raiho-shin) - ஜப்பானிய நாட்டுப்புற வழிபாடு
o    ‘அஷ் -ஷமர்’ (As-Samer) - ஜோர்டான் நாட்டில் சிறப்பு நிகழ்வுகளின் போது நடைபெறும் பாடல் மற்றும் நடன நிகழ்வு
o    ’சிடாபா’ (Chidaoba) - ஜார்ஜியா நாட்டில் அனுசரிக்கப்படும் மல்யுத்தம், இசை, நடனம் மற்றும் சிறப்பு ஆடைகள் கொண்ட கலாச்சார நிகழ்வு
o    6.’ஹர்லிங்’ (Hurling)  - அயர்லாந்து நாட்டில் நடைமுறையிலுள்ள, சிறிய குச்சி மற்றும் பந்துகளைக்கொண்டு விளையாடப்படும் பாரம்பரிய  விளையாட்டு
o    கஷகஷ்தான் நாட்டில் குதிரை வளர்ப்பவர்கள் கொண்டாடும் வசந்தகால திருவிழா (Spring festive rites of Kazakh horse breeders)
கூ.தக. : யுனெஸ்கோவின் ‘தொட்டறியமுடியாத கலாச்சாரங்கள்’ (intangible heritage)   பட்டியலில் இதுவரையில் இடம்பெற்றுள்ள இந்திய கலாச்சாரங்கள் - ‘ராம்லீலா’ ( Ramlila) ,  இமாலய மலைப்பகுதிகளில், புத்தமத புனித நூல்களை  ஓதும் நிகழ்வு (recitation of sacred Buddhist texts in the Himalayan region), கிழக்கிந்தியப் பகுதிகளில் நடைமுறையிலுள்ள ‘ச்சாயு நடனம்’ (Chhau dance), யோகா (yoga) மற்றும் ‘கும்பமேளா’ ( Kumbh Mela) ஆகியவை.

வெளிநாட்டு உறவுகள்

v  ”கோப் இந்தியா 2019” (Cope India 2019) என்ற பெயரிலான இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகளின் கூட்டு இராணுவ ஒத்திகை 3-14 டிசம்பர் 2018 தினங்களில் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள கலைகுண்டா மற்றும் அர்ஜன் சிங்  விமானப்படைத் தளங்களில்  நடைபெறுகிறது.
கூ.தக. : இந்தியா-அமெரிக்கா விமானப்படைகளுக்கிடையேயான, முதல் ”கோப் இந்தியா” பயிற்சி 2004 ஆம் ஆண்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

v  நடப்பு நிதியாண்டின் (2018-2019) ஜூலை- செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.  நடப்பு (2018-19) நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்தது அதுவே முதல் முறையாகும்.  இந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்து உள்ளது. இருப்பினும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம். சீனாவுடன் ஒப்பிடும்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா முன்னிலையில் உள்ளது என்று தெரியவருகிறது.

திட்டங்கள்

v  ”எம்பதி பிரச்சாரம்” (Empathy Campaign) : கல்லீரல் அழற்சி (ஹெபடிடிஸ்) நோயைப் பற்றிய விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்துவதற்காக, மத்திய  ‘கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம்’ ( Institute of Liver and Biliary Sciences (ILBS))  ’எம்பதி’ (EMPATHY : Empowering People Against Hepatitis: The Empathy Campaign) எனும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

மாநாடுகள் / கூடுகைகள்

v  13 வது,  ‘ஜி-20’ உச்சி மாநாடு (2018 G20 Buenos Aires summit) , அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் 30 நவம்பர் 2018 அன்று  தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
v  இந்நிகழ்வுக்கிடையே, சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பிரதமர் மோடி 30-11-2018 அன்று பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • ஜி-20 அமைப்பு பற்றி ...
§  20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும்.
§  அர்ச்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய‌ நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
§  26 செப்டம்பர் 1999 அன்று  ஜெர்மனியின், பெர்லின் நகரில் தொடங்கப்பட்டது.
§  ஜி-20 அமைப்பின் முதல் தலைவராக  கனடாவின் அப்போதைய நிதியமைச்சர் பால் மார்டின் (Paul Martin) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
§  இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பை பகிர்ந்துகொள்வதற்காக, மொத்தமுள்ள 20 உறுப்பு நாடுகளும் ஐந்து குழுக்களாக (நான்கு நாடுகள் வீதம்) பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ளது,
§  இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக  அர்ஜெண்டினா நாட்டின்  அதிபர் ‘மவுரிசியோ மாக்ரி’ (Mauricio Macri) உள்ளார்.
v  ’தெற்கு ஆசிய பிராந்திய இளைஞர்கள் அமைதி மாநாடு’ ( ‘South Asia Regional Youth Peace Conference’)  28-30 நவம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது. மஹாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த தின நிகழ்வுகளையொட்டி இந்த மாநாட்டை மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள ‘காந்தி ஸ்மிரிதி தர்ஷன் சமிதி’ (Gandhi Smriti and Darshan Samiti (GSDS)) என்ற அமைப்பு நடத்தியுள்ளது.
v  மூன்றாவது, ’ஆசியான் - இந்தியா வணிக கூடுகை 2018’ (ASEAN – India Business Summit (AIBS))  மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 27 நவம்பர் 2018 அன்று நடைபெற்றது.

நியமனங்கள்

v  மத்திய வருவாய்த்துறையின் புதிய செயலாளராக அஜய் பூஷண் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு

v  தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில், 13 வயது இஷா சிங்கிற்கு   மூன்று தங்கம் :திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகளில்,  10 மீ ஏர்பிஸ்டல் பிரிவு மகளிர், யூத் மகளிர், ஜூனியர் மகளிர் போட்டிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை இஷா சிங் முறையே ஹீனா சித்து, மானு பாக்கர், ஸ்வேதா சிங் ஆகியோரை வென்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
v  போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மானவ் தாக்கர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.   இவர், ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சக வீரர் ஜீத் சந்திராவை வென்றதுடன், இரட்டையர் பிரிவில் மனுஷ் ஷாவுடன் இணைந்து   சக இணையான ஜீத் சந்திரா-சினேஹித்தை வீழ்த்தியும் பட்டம் வென்றுள்ளார்.
o    மேலும், இந்த போட்டிகளில், சென்னை வீராங்கனை செலனாதீப்தி செல்வகுமார், ஸ்வஸ்திகா கோஷ் ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

முக்கிய தினங்கள்

v  உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 | மையக்கருத்து (2018) - உங்கள் நிலையை அறிந்துகொள்ளுங்கள் (“Know your status”)
கூ.தக. :
o    இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள, "குழந்தைகள், ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ்: உலகம் 2030' என்ற அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
o    இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 19 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இது அதிகபட்சமாகும்.
o    இந்தியாவில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவது கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 43 சதவீதம் குறைந்துள்ளது.
o    ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்டவர்களுள், 73 சதவீதம் பேர் அதற்கான தகுந்த சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். இது, கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 50 சதவீதம் அதிகமாகும்.
v  இரசாயனப் போரினால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூருவதற்கான தினம் (Day of Remembrance for all Victims of Chemical Warfare) - நவம்பர் 30
v  சர்வதேச பாலஸ்தீனிய மக்கள் ஒருமைப்பாடு தினம் - நவம்பர் 29

 



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!