நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 2nd December 2018 | நடப்பு நிகழ்வுகள் 2 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 2nd December 2018

இந்தியா

  • v  "பாஷா சங்கம்" திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பிற மொழிகள் பயிற்சி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  
o    'பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
o    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்திய அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளை, நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
o    அந்த வகையில், அனைத்து பள்ளிகளிலும், ஏதாவது ஐந்து அலுவல் மொழிகளை, ஒவ்வொரு வாரமும் பயிற்றுவித்து, மாணவர்களுக்கு பிறமொழிகளையும் பரிட்சயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
o    இதுதொடர்பாக, 'பாஷா சங்கம்' என்ற, மொழி மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும், மாநில பள்ளி கல்வி துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், மாணவர்களிடையே பிறமொழி அறிவையும் வளர்க்கும் வகையில், குறைந்தபட்சம், ஐந்து மொழிகளில், முக்கிய வார்த்தைகளை கற்றுத் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
o    தினமும், ஒரு மொழியை தேர்வு செய்து, அதில் உள்ள முக்கியமான, ஐந்து சொற்றொடர்களை, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வாசிக்க வேண்டும். இந்த வழக்கத்தை பின்பற்றி, சாதனை செய்யும் பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

  • v  01 ஜூலை 2019 முதல், 'சைல்டு லாக்' இல்லாத கார்கள் மட்டுமே,  வாடகை கார்களாக பதிவு செய்யப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
o    கார்களில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, கதவுகளை திறக்க முடியாத வகையில், 'சைல்டு லாக்' வசதி அமைக்கப்பட்டது. இதனால், கார் உள்ளே இருக்கும் குழந்தைகளோ அல்லது வெளியில் இருப்பவரோ கார் கதவை திறக்க முடியாது.ஆனால், இந்த முறையால், வாடகை கார்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததால், கார்களில், 'சைல்டு லாக்' வசதியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • v  2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது.
o    கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநிலமெங்கும் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பாக கருதப்பட்டது.
o    இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் உலக அளவில் 4வது இடத்தில் கேரள வெள்ளம் இடம்பெற்றுள்ளது.
o    இந்த வெள்ளத்தினால்   கேரளாவின் 14 மாவட்டங்களில் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 443 பேர் பலியானதாகவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
o    இந்த பட்டியலில், கேரளாவிற்கு அடுத்தபடியாக அதிக உயிர்பலியை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களாக ஜப்பான், கொரியா, நைஜீரியா நாடுகளில் ஏற்பட்ட வெள்ளமும், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட கொடூர வெயிலும் இடம்பெற்றுள்ளன.

  • v  112” எனப்படும்  அனைத்து  அவசரகால எண்களையும் உள்ளடக்கிய ஒரே எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 
o    இந்த சேவையை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் பெற்றுள்ளது.
o    இந்த அவசர உதவி எண்கள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ்,    காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) மற்றும் பெண்கள் உதவிஎண் (1090)  என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து அவசர உதவிக்கும் பயன்படுத்தலாம்.
"112 இந்தியா' செயலி (112 India' mobile app) :
o    ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால எண் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள  இந்த "112 இந்தியா' செயலியில், பெண்கள் பாதுகாப்பிற்கான  ”SHOUT”(சத்தமிடுதல்) என்னும் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
o    உதவி தேவைப்படும் பெண்களின் இடத்தை கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. அவசர உதவி தேவைப்படும் பெண்கள் இந்த சத்தமிடும் அம்சத்தை "கிளிக்' செய்தால் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ, அவசர உதவி மையத்திடம் பதிவு செய்திருக்கும் தன்னார்வலர்களுக்கோ அவசர உதவி மையத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • v  ஹார்ன்பில் திருவிழா 2018” (Hornbill Festival 2018) எனப்படும் நாகாலாந்து மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 1-12-2018 அன்று துவக்கி வைத்தார்.
கூ.தக. :   நாகாலாந்து மாநிலம் உருவான தினம் - 1 டிசம்பர் 1963 

  • v  இ-திரிஷ்டி மென்பொருள் (eDrishti)  :   இரயில்களின் நேரங்கள், வருமானம், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவத்தை ஒருங்கினைந்த முறையில் கண்காணிப்பதற்கு மத்திய இரயில்வே அமைச்சருக்கு உதவும் வகையில்  வெளியிடப்பட்டுள்ள மென்பொருளாகும். இதனை இந்திய இரயில்வேயின், Centre for Railway Information System (CRIS) நிறுவனம் தயாரித்துள்ளது.
  • v  தெற்கு ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் எச்.ஐ.வி. நோய் தாக்கத்திற்குள்ளான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது  என ஐ,நா, வின் ‘யுனிசெஃப் (UNICEF (United Nations International Children’s Emergency Fund)) அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
o    உலக சுகாதார நிறுவனம் (World health organization) வெளியிட்டுள்ள ’உலக ஊட்டச்சத்து அறிக்கை 2018’ (Global Nutrition Report 2018) இன் படி,  உலகின் மூன்றில் ஒரு வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
o    இந்த அறிக்கையின் படி, 46.6 மில்லியன் வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்டு 140 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா  முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன.

உலகம்
  • v  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ.புஷ் காலமானார் : இவர் ,  1989 முதல் 1993 வரையிலான அமெரிக்காவின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.
  • v  அநாதைகளைக் கடத்துதலை (orphanage trafficking)  அடிமை முறைக்கு சமமானது என அங்கீகரித்துள்ள  உலகின் முதல் நாடு எனும் பெயரை ஆஸ்திரிரேலியா (Australia) நாடு பெற்றுள்ளது.
  • v  மியான்மர் நாட்டின் ஆங் சன் சூ கி (Aung San Suu Kyi) க்கு வழங்கப்பட்ட பிரஞ்சு அரசின்  ’பாரீஸ் சுதந்திர விருது (Freedom of Paris Award)  திரும்பப் பெறப்பட்டுள்ளது. ’ரோகிங்காக்கள் விவகாரத்தில் ஆங்சாங்சூயியின்   நடவடிக்கைகளை முன்னிட்டு ஏற்கனவே இவரிடமிருந்து கனடா நாட்டின் குடியுரிமை மற்றும் ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் தூதுவர் விருது ஆகியவை   
  • v  ஜியார்ஜியா நாட்டின் முதல்  பெண் அதிபராக ‘சலோமி சுரிச்சிஸ்வில்லி (Salome Zurichishvili)  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • v  பிரதமர் மோடி -  ஆர்ஜென்டீன அதிபர் மொரீசியோ மெக்ரி சந்திப்பு : அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெறும்  13 வது,  ‘ஜி-20’ உச்சி மாநாடு (2018 G20 Buenos Aires summit) ல் கலந்துகொண்ட போது, அந்நாட்டின் அதிபர் மொரீசியோ மெக்ரியுடன் பிரதம் மோடி அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  • v  பிரதமர் மோடி -  சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு : ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை ஜி20 உச்சி மாநாட்டின் போது, இந்தியா மற்றும் சீனா இடையிலான உயர்மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும்  ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர். சீனாவுடன் இருதரப்பு உறவு, நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை இந்த மாநாட்டின் போது மோடி சந்தித்தார். கடந்த 7 மாதங்களில் நான்காவது முறையாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
  • v  பிரதமர் மோடி- ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸ் சந்திப்பு:  ஜி20 உச்சி மாநாட்டின் போது, ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்த பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கான இந்தியாவின் ஆதரவு குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
  • v  பொருளாதார குற்றவாளிகளைப் பிடிக்க பிரதமர் மோடி 9 அம்ச  அறிக்கை :
13 வது, ஜி20 மாநாடு 2018 இல் பிரதமர் மோடி பொருளாதார குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான  9 அம்ச  அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.  அவற்கின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
o    பொருளாதார குற்றங்களை செய்து விட்டு தப்பி ஓடுகிற குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஜி-20 நாடுகள் வலுவான, செயல்படத்தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

o    பொருளாதார குற்றவாளிகள் தங்கள் நாடுகளில் நுழைவதை தடை செய்யவும், அடைக்கலம் தராமல் இருக்கவும் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.
o    பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை கண்டறிவதற்கான பணியை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
o    பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்களை விரைவாக சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
o    பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக உரிய நேரத்தில், முழுமையான தகவல் பரிமாற்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு நிதி நடவடிக்கை பணிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக்குழு பொருளாதார குற்றவாளிகள் என்பதற்கான இலக்கணத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • v  2022-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
o    முன்னதாக  "2022-இல் ஜி 20 மாநாட்டை இத்தாலி நடத்துவதாக இருந்தது. இந்தியாவுக்காக அந்நாடு அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளது. அந்த ஆண்டில் இந்தியா 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • v  2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
  • v 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-ரஷியா-சீனா முத்தரப்பு பேச்சுவார்த்தை :  
o    ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி, இந்தியா-ரஷியா-சீனா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை 30-11-2018 அன்று நடைபெற்றது.
o    இந்த முத்தரப்பு சந்திப்பானது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக நடைபெற்றது.
o    இச்சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர், ஐ.நா. மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வலியுறுத்தினர். 
o    சர்வதேச மாநாடுகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும், இந்தியா-ரஷியா-சீனா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும் மூன்று நாடுகளின் தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
o    சர்வதேச சமூகத்துக்கு ஆதாயமளிக்கும் ஐ.நா., உலக வர்த்தக அமைப்பு, உலகளாவிய நிதி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளை சீரமைக்கவும், பலப்படுத்தவும் வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
o    பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் திறந்த உலகப் பொருளாதாரம் ஆகியவற்றின் ஆதாயங்களை, உலகளாவிய வளர்ச்சிக்கானதாக அவர்கள் குறிப்பிட்டனர். சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான அமைதி-ஸ்திரத்தன்மையை ஒருங்கிணைந்து ஊக்குவிப்பதற்கு தகுந்த கால இடைவெளியில் கலந்தாலோசனை செய்யவும் பிரதமர் மோடி, அதிபர் புதின், அதிபர் ஜின்பிங் ஒப்புதல் தெரிவித்தனர்.
o    அத்துடன், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், அமைதியை ஊக்குவிக்கவும் தேவையான ஒத்துழைப்பை பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றின் மூலம் பலப்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
  • v  “Kimberley Process Certification Scheme” எனப்படும் சர்வதேச வைர வியாபார ஒழுங்குமுறை (regulates trade in rough diamonds) அமைப்பின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  30-11-2018 அன்று பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற , இவ்வமைப்பின் 15 வது கூடுகையில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
v  இந்தியா மற்றும் ஹாங்காங் (Kong Special Administrative Region)  இடையே  இரட்டை வரி தவித்தல் ஒப்பந்தம் 30 நவம்பர் 2018 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொருளாதாரம்

  1. v  வங்கிகளுக்கான ’நிகர நிலையான நிதி விகிதம் (Net stable funding ratio (NSFR)) விதிமுறைகளை  வரும் 1 ஏப்ரல் 2020 முதல் அமல்படுத்தவுள்ளதாக  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
o    நிகர நிலையான நிதி விகிதம்  என்பது ‘இருப்பிலுள்ள நிலையான நிதி (Available amount of stable funding) மற்றும் ‘தேவையான நிலையான நிதி (Required amount of stable funding)ஆகியவற்றிற்றைக் கருத்தில் கொண்டு வரையறுக்கப்படுகிறது.
o    வங்கிகளுக்கான ’நிகர நிலையான நிதி விகிதம் (Net stable funding ratio (NSFR))    வின் சூத்திரம் வருமாறு,
இருப்பிலுள்ள நிலையான நிதி/ தேவையான நிலையான நிதி  100%

மாநாடுகள் / கூடுகைகள்

  • v  15 வது இந்தியா சுகாதாரக் கூடுகை (India Health Summit)  29-30 நவம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.  ’முன்னுடதாராணமான மாற்றத்தில் இந்திய சுகாதாரத்துறை (Indian Healthcare – A Changing Paradigm) எனும் தலைப்பில் , இந்த கூடுகையை  ‘இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian industry (CII)) நடத்தியது.
  • v  13வது ,  CII அக்ரோ டெக் இந்தியா (13th CII Agro Tech India)  கூடுகையை 01-12-2018 அன்று சண்டிகாரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் துவக்கி வைத்தார். ’விவசாயத்தில் தொழில்நுட்பம் : விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் (Technology in Agriculture: Increasing Farmer’s Income) எனும் தலைப்பிலான இந்த கூடுகையை பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுடன் இணைந்து மத்திய வேளாண் அமைச்சகம்   நடத்தியது.
  • v  இந்தியாவின் முதல் ‘சர்வதேச உள்நாட்டு திரைப்பட திருவிழா (international indigenous film festival)   பிப்ரவரி 2018 ல் ஒடிஷாவின் புவனேஷ்வர் மற்றும் பூரி நகரங்களில் நடைபெறவுள்ளது.

முக்கிய தினங்கள்

  • v  உலக கணினி எழுத்தறிவு தினம் - டிசம்பர் 2
  • v  70 வது இந்திய ஆயுதப் படைகள் கொடி நாள் (Armed Forces Flag Day) - டிசம்பர் 07, 2018 
  • v  இந்திய ஆயுதப்படைகள் வாரம் -  டிசம்பர் 1-7
  • v  எல்லைப் பாதுகாப்புப் படையின் 54 வது எழுச்சி தினம் (Raising Day) - டிசம்பர் 1

அறிவியல் & தொழில்நுட்பம்

  • v  கூகிள் ஹேங்க் அவுட் (Google Hangouts) சேவையை 2020 ஆம் ஆண்டுடன் நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.   குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
       கூ.தக. :
o    Google Hangouts சேவை 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
o   Google Hangouts க்கு முன்னர் வழக்கத்திலிருந்த Google Talk சேவை 2015 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்

  • v  டாடா மோட்டார்ஸ் தேசிய சீனியர் சாம்பியன் ஷிப் 2018 போட்டியில், 
o    மகளிர் 57 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் வினேஷ் போகட்   தங்கம் வென்றதுடன்  6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
o    மகளிர் 62 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ஹரியாணாவின் பூனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
o    65 கிலோ பிரிவில் அனிதா 4-0 என்ற புள்ளிக்கணக்கில் கீதிகா ஜாக்கரை வென்று தங்கம் வென்றார்.
o    50 கிலோ பிரிவில் இந்து செüதரி, 53 கிலோ பிரிவில் சீமா, 55 கிலோ பிரிவில் பிங்கி, 59 கிலோ பிரிவில் சரிதா, 68 கிலோபிரிவில் நவ்ஜோத் கெüர், 72 கிலோபிரிவில் கிரண் பிஷ்னோய், 76 கிலோபிரிவில் சுதேஷ் சாம்பியன் பட்டம் வென்றனர்.
o    அணிகள் பிரிவில் ரயில்வே விளையாட்டுவாரியம் 188 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது, ஹரியாணா, தில்லி ஆகியோர் இரண்டு, மூன்றாவது இடங்களையும் பெற்றனர்.
  • v  சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி கூட்டமைப்பின்  (International Shooting Sport Federation) ‘ஃபுளூ கிராஸ் (Blue Cross) விருதைப் பெறும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையை   இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்திரா பெற்றுள்ளார்.

2-12-2018 current affairs in tamil

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!