நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 3rd December 2018 | நடப்பு நிகழ்வுகள் 3 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 3rd December 2018
☞   Previous Current Affairs Notes
☞  Today / Previous Current Affairs Quiz
தமிழ்நாடு
v  பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், '181' என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற, இலவச தொலைபேசி எண்ணை, நான்காண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது. சில வட மாநிலங்களில் மட்டுமே, இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. தற்போது, இந்த சேவை, தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.தமிழக சமூக நலத்துறை வாயிலாக, அக்டோபர் முதல், சென்னை, அம்பத்துாரில் உள்ள, 'அம்மா கால் சென்டர்' உதவியுடன், இந்த சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு, தகவல் தெரிவிக்கப்படும்.போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்வர்

வெளிநாட்டு உறவுகள்

v  “எக்ஸ் கோப் இந்தியா - 18” (Ex Cope India-18) என்ற பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகளின் கூட்டு இராணுவ ஒத்திகை மேற்கு வங்காளத்தின் காலைகுண்டா (Kalaikunda) மற்றும் பனகார்க் (Panagarh) விமானப்படைத் தளங்களில் 3 -14 டிசம்பர் 2018 தினங்களில் நடைபெறுகிறது.
v  இந்தியா - ஸ்பெயின் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
o    தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக இந்தியா, ஸ்பெயின் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
o    இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட மாட்டாது என ஸ்பெயினிடம் இந்தியா உறுதி அளித்துள்ளது.
o    எனினும், இரு நாடுகளும், அவரவர் சட்ட திட்டங்களின்படி, கைதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வது, பொதுமன்னிப்பு அளிப்பது, தண்டனையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
o    பரிமாற்ற நடவடிக்கையில் திருப்பி அனுப்படும் நபர் மீது, அவர் தண்டனை பெற்ற நாட்டில் எந்தவித குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக் கூடாது, அந்த நபர் ராணுவச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை இதில் பொருந்தும்.
o    தனது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக கைதி ஒருவர் விண்ணப்பிக்கும்போது, குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனையாவது அவருக்கு மிச்சம் இருக்க வேண்டும், அந்தக் கைதி எந்தக் காரணத்துக்காக தண்டனை பெற்றாரோ, அது அவர் சார்ந்த சொந்த நாட்டிலும் தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும்.
o    கைதிகளைப் பரிமாறுவது என்பது பரஸ்பரம் இரு நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு அல்லது வேறெந்த முக்கியமான விஷயங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையக் கூடாது. கைதிகளை திருப்பி அனுப்புகையில், அவரது வயது, மனநிலை, உடல்நிலை போன்ற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம்

v  அமெரிக்கா, சீனா வர்த்தகப்போர் நிறுத்தம் : அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால்,  இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஜனவரி 1 முதல் கூடுதல்வரி விதிப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவுடன் நடத்துகிற வர்த்தக பேச்சுவார்த்தை 90 நாட்களில் வெற்றி அடையாவிட்டால், திட்டமிட்டபடி நிறுத்தி வைக்கப்பட்ட வரி விதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
v  மெக்சிகோவின் புதிய அதிபராக   லோபெஸ் ஓப்ரடார் பதவி ஏற்றுள்ளார்.

மாநாடுகள் / கூடுகைகள்

v  போலந்து நாட்டின் “கோட்டோவைஸ்” (Katowice) நகரில்  ஐ.நா. பருவநிலை மாநாடு 02 டிசம்பர் 2018 அன்று துவங்கி 14 டிசம்பர் 2018 வரையில் நடைபெறுகிறது. 
o    ஐக்கிய நாடுகளவையின்  பருவநிலை மாநாடு அமைப்பினால் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) ஆண்டுதோறும்   ”பங்குதாரர்களின் மாநாடு” (Conference of the Parties (COP)) என்ற பெயரில்  ’பருவநிலை மாநாடு’ நடத்தப்பட்டுவருகிறது. இம்மாநாட்டில் சுமார் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
o    இவ்வாண்டில் நடைபெறும் இந்த மாநாடு இவ்வகையிலான  24 வது நிகழ்வாகும்.
o    போலந்து நாடு, மூன்றாவது முறையாக இம்மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 14 வது பருவநிலை மாநாடு 2008 ஆம் ஆண்டில் ‘போஷ்னான்’ (Poznan) நகரிலும், 19 வது மாநாடு , 2013 ஆம் ஆண்டில் ‘வார்ஷாவ்” (Warsaw) நகரிலும் நடைபெற்றது.
o    இமாநாட்டின் முக்கிய நோக்கம் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற  “பாரிஸ் மாநாட்டில்” எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலாகும்.  

நியமனங்கள்

v  இந்தியாவின் 23-வது  தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா (Sunil Arora)  02 நவம்பர் 2018 அன்று  பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார்.  இதற்கு முந்தைய இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்த ஓ.பி.ராவத்-ன் பதவி காலம் 01-12-2018 அன்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

v  சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities)  - டிசம்பர் 3  | மையக்கருத்து (2018) - மாற்றுத் திறன் கொண்டோரை மேம்படுத்துதல் மற்றும்  சமத்துவத்தை உறுதி செய்தல் (Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality)

விளையாட்டு

v  டாடா ஓபன் பாட்மிண்டன் - லக்ஷயா சென் சாம்பியன் :   மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்,  இந்திய வீரர் லக்ஷயா சென், உலக ஜூனியர் சாம்பியன் தாய்லாந்தின் குன்வலத் விதித்சர்னை  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
v  உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டியோன்டே வைல்டர் மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளார். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிரிட்டினின் டைசன் பியுரிக்கும், வைல்டருக்கும் இடையிலான இறுதி சுற்று டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


  
tnpsc tamil current affairs today pdf


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Barani
    Profile
    Barani
    Barani
    Said: Pls upload Daily CA in English also
    Pls upload Daily CA in English also
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!