TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 21 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 21 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 21-12-2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz
தமிழ்நாடு
  • நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில்  20-12-2018 அன்று துவக்கப்பட்டது. இந்த விற்பனை மையத்தின் மூலமாக, முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு என்று கூடுதல் கட்டணம்,வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த  படங்களாக, பரியேறும் பெருமாள், 96 தேர்வு செய்யப்பட்டன. இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.
  • 2018 ஆண்டில் திறம்பட செயலாற்றிய காவல்நிலையங்களின் பட்டியலில், நாட்டிலேயே எட்டாவது சிறந்த காவல்நிலையமாக தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலில், முதலாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் காலு காவல்நிலையமும், இரண்டாவது இடத்தில் கேம்ப்பெல் பே காவல்நிலையமும் உள்ளது. 3 - வது இடத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் ஃபராக்கா காவல்நிலையமும், நான்காவது இடத்தில் புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் உள்ளது.
  • தமிழக மீனவர்களுக்கு “நேவிக்” (NavIC - Navigation with Indian Constellation)) அம்சம் செயல்படுத்தப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘நேவிக்’ எனப்படுவது ,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், எட்டு செயற்கைக்கோள்களின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘இந்திய பிராந்திய போக்குவரத்து செயற்கைக்கோள் முறைமையாகும் (Indian Regional Navigation Satellite System). 

இந்தியா

  • யுனெஸ்கோ (UNESCO) -வின்  ‘சர்வதேச் கடல்சார் பயிற்சி மையம்’  (International Training Centre for Operational Oceanography) , ஹைதராபாத்தில் அமைக்கப்ப்பட்டுள்ளது. 
  • தொழில் முனைவு தர வரிசைப் பட்டியல் 2018 (Start-up Ranking 2018)  -ல் சிறந்த மாநில ( best performer) அந்தஸ்தை குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. மத்திய தொழில் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில்,  உயர் திறன் (top performers) பிரிவில் முதல் நான்கு இடங்களை முறையே கர்நாடகா, கேரளா , ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பெற்றுள்ளன.  
  • தமிழ்நாட்டிற்கு ‘வளரும் மாநில’ (Emerging States) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
  • 22 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது.  ஜம்முகாஷ்மீர் அரசியலமைப்பின் 92 வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த குடியர்சுத்தலைவர் ஆட்சியானது, கடந்த 1996 க்கு பின்னர் தற்போது அமலாகியுள்ளது. ஜம்முகாஷ்மீரில் முதல் முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி கடந்த 1986 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . 
  • இந்தியாவில் 4 மில்லியன்  பணியாளர்களை டிஜிட்டல் திறன்களில் பயிற்றுவிக்க  நாஸ்காம் அமைப்பு (National Association of Software and Services Companies (NASSCOM)) மற்றும் ஐ.ஐ.டி , சென்னை  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 
  • மெயின்ஸ் தேர்வுக்கு …நதி நீர் பிரச்சனைகள் http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1556784

வெளிநாட்டு உறவுகள்
  • அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா 20-12-2018 அன்று  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியா -சீனா திரைப்பட விழா 22-24 டிசம்பர் 2018 தினங்களில்  புது தில்லியில் நடைபெறுகிறது. 

விளையாட்டு
  •  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டபிள்யூ வி ராமனை பிசிசிஐ நியமித்துள்ளது.
  • சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா தரவரிசையில், 2018-ஆம் ஆண்டு நிறைவில் பெல்ஜியம் அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில்,  முதல் 10 இடங்களில் முறையே பெல்ஜியம், பிரான்ஸ், பிரேஸில், குரோஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், உருகுவே, ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் அணிகள் உள்ளன.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) - டிசம்பர் 20 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.