Current Affairs 22 December 2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
- எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு :
- சாகித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் 21-12-2018 அன்று புதுச்சேரியில் காலமானார்.
- புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
- தினமணி கதிரில் இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான வானம் வசப்படும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்தப் புதினம் புதுவை வரலாற்று ஆய்வாளர் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது.
- தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி : (ஆதாரம் : தினமணி, 22-12-18)
- தமிழகத்தின் மின்சாரத் தேவையில் 75 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின் உற்பத்தி நிலையங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படக்கூடிய நிலை உள்ளதால், மாசு ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று காற்றாலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டிலேயே காற்றாலைகள் மூலமாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகளால் 8,100 மெகா வாட் நிறுவுத்திறன் உள்ளது. சூரிய சக்தி மின்சாரம் 2,200 மெகாவாட் அளவுக்கும், நீர் மின் திட்டங்களால் 2,300 மெகாவாட் அளவுக்கும் உற்பத்தி ஆகிறது. காற்றாலை மின்சாரம் மே முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே உற்பத்தி ஆகிறது. சூரிய மின் உற்பத்தியானது காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே முழுமையாக உற்பத்தி செய்ய முடியும். இரவு, பகல் அனைத்து நேரங்களிலும் முழுமையான மின் உற்பத்தி அளிப்பது நீர், அனல் மின் நிலையங்கள் மட்டுமே.
- 5 ரூபாய் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் மறைவு : வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) 19-12-2018 அன்று காலமானார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தவர். மருத்துவம் படித்து முடித்தவுடன் 1971-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை எளிமையான கட்டமைப்பில் தொடங்கினார். தொடக்கத்தில் இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ஜெயச்சந்திரன் அதன் பின்னர் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது. சிச்சைக்காக வரும் நோயாளிகள் தாமாக முன்வந்து தந்தால்தான் அதையும் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. கைராசி மருத்துவர் என பெயர் பெற்ற ஜெயச்சந்திரன் பல கிராமங்களுக்குச் சென்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
இந்தியா
- “பிரதான் மந்திரி டிஜிட்டல் சாக்ஷார்தா அபியான்” (Pradhan Mantri Digital Saksharta Abhiyan (PMGDISHA) : 2016-2017 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களிலுள்ள மக்களுக்கு ‘கணிணி அறிவை’ (Digital Literacy) வழங்குவதாகும், டிசம்பர் 2018 வரை இத்திட்டத்தின் மூலம் 1.58 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம், மார்ச் 2019 க்குள் மொத்தம் 6 கோடி மக்களுக்கும் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ’ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பு திட்டம்’ (Asiatic Lion Conservation Project) என்ற புதிய திட்டத்தை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் 20-12-2018 அன்று வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு 97.84 கோடி செலவில் அமலாக்கம் செய்யப்படும் இத்திட்டத்தின் மொத்த செலவினத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் 60 : 40 என்ற விகிதத்தில் ஏற்றுக்கொள்ளும்.
- ’உலக மூலிகை காடு திட்டத்தை’ (World Herbal Forest Project) பதஞ்சலி நிறுவனமும் ஹரியானா மாநிலமும் இணைந்து சண்டிகரிலுள்ள மோர்னி மலைப் பகுதியில் துவங்கியுள்ளன.
- நாடெங்கிலுமுள்ள கணினிகளின் பயன்பாட்டைக் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு நபரின் தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் மட்டுமல்ல, கணினியில் உள்ள தகவல்களையும் உளவு பார்க்க இவ்வமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அமைப்புகளின் விவரம் வருமாறு, மத்திய உளவுத் துறை (The Intelligence Bureau), போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau), அமலாக்கத் துறை (Enforcement Directorate), மத்திய நேரடி வரி விதிப்புத் துறை (Central Board of Direct Taxes) ,வருவாய் புலனாய்வுத் துறை (Directorate of Revenue Intelligence), மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) (Central Bureau of Investigation), தேசிய புலனாய்வுத் துறை (National Investigation Agency), கேபினட் செகரேடியட் (ரா) (Cabinet Secretariat (R&AW), காஷ்மீர், வட-கிழக்கு அசாம் மாநிலங்களின் சிக்னல் புலனாய்வு இயக்குநரகம் Directorate of Signal Intelligence, தில்லி காவல்துறை ஆணையர் (Commissioner of Police, Delhi)
- அந்த அனுமதியின்படி, நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கண்காணிப்பது, கணினிகள் மூலம் பரிமாறப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடைமறிப்பது, தகவல்கள் அனுப்புவதை தடை செய்வது, அந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்வது உள்ளிட்ட பணிகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளலாம்.
- இந்த 10 அமைப்புகளும், எந்த கணினியையும் உளவு பார்க்கவும், கண்காணிக்கவும், ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை பறிமுதல் செய்யவும், அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட தகவல்களை ஆராயவும் முடியும். இதுவரை தகவல்களை கண்காணிக்க மட்டுமே அதிகாரம் பெற்றிருந்த நிலையில், தற்போது தகவல்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விசாரணை அமைப்புகளுக்குத் தேவைப்படும் நேரத்தில், தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர் மற்றும் கணினியின் உரிமையாளர் ஆகியோர் அனைத்துவித தொழில்நுட்ப வசதிகளையும் செய்து தந்து ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின், 'ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு' குறியீட்டில், தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
- 2015, செப்டம்பரில், ஐக்கிய நாடுகளவை 'சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு' என்ற குறியீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதில், 16 இலக்குகள் அடிப்படையில், பல்வேறு சமூகங்களின் பொருளாதாரம், கலாசாரம், வளர்ச்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த, குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்கும், 'நிதி ஆயோக்' அமைப்பு, மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து, இந்தாண்டு, முதன் முறையாக, இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது. மாநில அரசுகளிடம், நான்கு பிரிவுகளில் போதுமான புள்ளி விபரம் இல்லாததால், 12 இலக்குகள் அடிப்படையில், ஐ.நா., மற்றும் சர்வதேச பசுமை வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன், குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தையும், கேரளா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மாநிலங்களின் செயல்பாடுகளை மதிப்பிட உதவும் இந்த குறியீடு, இனி ஆண்டுதோறும் வெளியிடப்படும் என, நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- பொதுத் துறையைச் சேர்ந்த, பேங்க் ஆப் பரோடா உடன், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க, வங்கி இணைப்பு நடவடிக்கைக்கான சிறப்பு குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டுமென டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.
- கடல் மட்டம் 2100ம் ஆண்டுக்குள் 34.6 அங்குலம் உயரும் : ஐ.நா. அமைப்பில் பருவகால மாற்ற திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை இந்தியா அளித்துள்ளது. இதில், கடல் மட்டம் 1990ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அங்குலம் அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த தகவலை, மக்களவையில் மத்திய சுற்று சூழல் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு உறவுகள்
- மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறியதற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பை மலபார் ஹில் பகுதியில் முகமது அலி ஜின்னா 1930-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீடு உள்ளது. அந்த வீடு சீரமைக்கப்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இப்போது பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
- சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் விருது அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழக முனைவர் யீபெங் லியு மற்றும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜாக் தோர்ன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
- தேசிய கணித தினம் - டிசம்பர் 22
விளையாட்டு
- அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.