Current Affairs 23-12-2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழகம்
- சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக ரூ.20196 கோடி கடனுதவிக்கான ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency (JICA)) இடையே செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில், மாதாவரம் - சோழிங்க நல்லூர் (35.67 கி.மீ.) மற்றும் மாதாவரம் - கோயம்பேடு (16.34கி.மீ.) ஆகிய இடங்களிடையே ரூ.40,941 கோடி செலவில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
- கூ.தக. : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் : பங்கஜ் குமார் பன்சால் (Pankaj Kumar Bansal)
இந்தியா
- இந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டுக்கான குறியீட்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.
- ஒவ்வொரு நாடும் பின்பற்றும் வகையில், நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐ.நா. மாமன்றம் வகுத்துள்ளது. இதில் 13 இலக்குகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வரிசைப்படுத்தும் "எஸ்டிஜி இந்தியா குறியீட்டை" நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. வளர்ச்சி-மேம்பாட்டுக்கான குறியீட்டெண் அடிப்படையிலான இந்த பட்டியலில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.
- எஸ்டிஜி இந்தியா குறியீட்டில் இமாச்சலப்பிரதேசமும், கேரளமும் 69 புள்ளிகளை பெற்றுள்ளன. தூய குடிநீர், துப்புரவு, மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்திற்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன. சிறந்த சுகாதாரம், பசிக்கொடுமை ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவத்தை எட்டுவது, தரமான கல்வி வழங்குவது தொடர்பாக கேரளம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கடுத்தபடியாக தமிழ்நாடு எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண்ணில் 66 புள்ளிகளை பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பு, தூய மற்றும் கட்டுப்படியாகக்கூடிய எரிசக்தி வழங்குவது தொடர்பான இலக்குகளை எட்டுவதில் தமிழகம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. மாநிலங்களின் முன்னேற்றத்தின் மூலமே, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா எட்ட முடியும் என்பதால், வளர்ச்சிக்கான போட்டியை உருவாக்க எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண் வெளியிடப்படுவதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான சர்வதேச தகவல் இணைவு மையத்தை (Information Fusion Centre – Indian Ocean Region (IFC-IOR)) 22 டிசம்பர் 2018 அன்று ஹரியானாவில் குருகிராமில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைத்தார்.
- டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.பி களுக்கான வருடாந்திரக் கூடுகை (Annual conference of DGPs, IGPs) 20-22 டிசம்பர் 2018 தினங்களில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் கேவடியா எனுமிடத்திலுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Unity) யின் அருகில் நடைபெற்றது.
வெளிநாட்டு உறவுகள்
- பாலிவுட் நட்சத்திரங்களான ராஜ் கபூர் மற்றும் திலீப்குமாரின் மூதாதையர்கள் வாழ்ந்த 25 இல்லங்களை பாகிஸ்தானின் கைபர்-பக்துன்வோ மாகாண அரசு வாங்கி அவற்றை தேசிய பாரம்பரிய சின்னமாக பராமரிக்க திட்டமிட்டுள்ளது.
- ஜப்பான் நாட்டின் கடற்படையின் JMSDF சாமிடார் (JMSDF (Japan Maritime Self-Defense Force) Samidare) போர்க்கப்பல் நல்லெண்ண பயணமாக 20-22 டிசம்பர் 2018 தினங்களில் கொச்சி துறைமுகத்திற்கு வந்துள்ளது.
உலகம்
- பாகிஸ்தான், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மத சுதந்திர மீறல்கள் கருப்புபட்டியலில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்து உள்ளது.
பொருளாதாரம்
- 23 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு : தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 22-12-2018 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அவற்றின் விவரம் வருமாறு,
- பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பவர் பேங்க் (மின் சேமிப்பகம்), மின்னணு கேமரா, விடியோ கேமரா, விடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட 7 பொருள்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.100-க்கும் அதிகமான கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
- 32 அங்குலம் வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், பவர் பேங்க் (மின் சேமிப்பகம்) ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- சரக்கு வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மார்பிள் கற்கள், கைத்தடி, சிமெண்ட் கற்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
- அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை பயணத்துக்கான செலவுகள், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி சாதனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
- பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், டின்னில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- உலகின், மிகப் பெரிய பங்குச் சந்தைகளில், ஜெர்மனியை விஞ்சி, இந்தியா, ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என புளும்பெர்க் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
- 68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், ஐ.ஓ.பி. அணி இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புத்தகங்கள்
- “A Rural Manifesto – Realising India’s Future through her Villages” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வருண் காந்தி
முக்கிய தினங்கள்
- தேசிய கணித தினம் (National Mathematics Day) டிசம்பர் 22 | கணித மேதை இராமானுஜரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
- கூ.தக. : ஹார்டி - இராமானுஜர் எண் (Hardy-Ramanujan Number) - 1729
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.