நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 24 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 24 டிசம்பர் 2018

தமிழ்நாடு

  • 28வது இந்திய நாட்டிய விழா காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பென்ஜமின் ஆகியோர் 23-12-2018 அன்று தொடங்கி வைத்தனர். ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும். 
    • கூ.தக. : இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 1992-ம் ஆண்டு மிகச்சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது.
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும், மூத்த தமிழறிஞருமான க.ப.அறவாணன் (77) 23-12-2018 அன்று காலமானார். க.ப.அறவாணன் தஞ்சாவூர் மாவட்டம், கடலங்குடி எனும் கிராமத்தில் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும், அருணாசலம் எனவும் அமைந்திருந்தன. பின்னாளில் அறவாணன் என மாற்றிக் கொண்டார்.
    • முக்கிய படைப்புகள் : தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், தொல்காப்பியக் களஞ்சியம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றைய நாள்காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள்வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்பு நூல்களாக "அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்', "செதுக்காத சிற்பங்கள்', "சொல்ல முடிந்த சோகங்கள்', "நல்லவங்க இன்னும் இருக்காங்க', "கண்ணீரில் மிதக்கும் கதைகள்' என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தியா

  • தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுவோருக்கு சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • இந்தியாவின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமுமான , அஸ்ஸாமில் அமைக்கப்பட்டுள்ள போகி பீல் பாலம் 25 டிசம்பர் 2015 அன்று பிரதமர் மோடி அவர்களால் நாட்டிற்கு அற்பணிக்கப்படுகிறது. 94கிமீ நீளம்கொண்ட இந்த பாலத்திற்கு, வாஜ்பாய் பிரதமரமாக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார்.
  • ஒடிசாவில் பைகா கிளர்ச்சியின் நினைவாக பிரதமர் மோடி அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஒன்றை 24-12-2018 அன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • இங்கிலாந்து நாட்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவில் முதன்முறையாக ஒடிசாவில் கடந்த 1817ம் ஆண்டு பைகா கிளர்ச்சி ஏற்பட்டது என பரவலாக கூறப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அரசின் கிழக்கிந்திய கம்பெனி கொண்டு வந்த வருவாய் அமைப்புக்கு எதிராக ஒடிசாவில் பண்ணை சமூகத்தினர் கடந்த 1800ம் ஆண்டு தொடக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அங்கு குர்டா அரசரின் படை தளபதியாக இருந்த பக்ஷி ஜகபந்து பித்யாதர் என்பவர் தலைமையில் பைகாக்கள் கொண்ட ராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது பைகா கிளர்ச்சி (பைகா பித்ரோ) என அழைக்கப்படுகிறது. ஒடிசாவின் கஜபதி என்ற ஆட்சியாளர்களின் கீழ் பைகாக்கள் என்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில், பைகா கிளர்ச்சியின் நினைவாக அஞ்சல் தலை ஒன்று மற்றும் நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
  • இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ : கர்நாடகாவில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவின் கோடீஸ்வர எம். எல்.ஏ  எனும் பெருமையை பெற்றுள்ளார். 8 ஆம் வகுப்பு வரையே படித்துள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி ஆகும்.
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி 24-12-2018 வெளியிட்டுள்ளார்.
  • 'பிரதான் மந்திரி மாற்று வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana) எனப்படும் பெண்களுக்கான மகப்பேறு பலன்களுக்கான திட்டத்தினை 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே ஆந்திரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் பெற்றுள்ளன.
    • கூ,தக. : 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'பிரதான் மந்திரி மாற்று வந்தனா யோஜனா’ வின் மூலம் ஆண்டொன்றுக்கு 51.70 இலட்சம் கற்பிணிப் பெண்கள் பயன்பெற்றுவருகின்றனர். இந்த திட்டத்திற்கான செலவினத்தை மத்திய மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் ஏற்றுக்கொள்ளும். (வட கிழக்கு மற்றூம் இமாலய மாநிலங்களில் 90:10 விகிதம்)
  • அஸ்ஸாமின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பாடகி திபாலி போர்தாகூர் (Dipali Borthakur) 21-12-2018 அன்று காலமானார்.

உலகம்

  • இந்தோனேஷியாவில் அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து சுமத்ரா தீவையொட்டி ஏற்பட்ட சுனாமி அலை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்துள்ளது. சுனாமி அலை சுமத்ராவின் தெற்குப் பகுதி மற்றும் ஜாவாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளை கடுமையாகத் தாக்கின. 
  • புருண்டி (Burundi) எனும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடு தனது தலைநகரை ’புஜீம்புரா (Bujumbura) விலிருந்து, ’கிடேகா (Gitega) வுக்கு மாற்றியுள்ளது

விருதுகள் / மரியாதகள்

  • வேதங்கி குல்கர்னி (Vedangi Kulkarni) : பூனேவைச் சேர்ந்த வேதங்கி குல்கர்னி எனும் 20 வயது பெண், மிதி வண்டியின்  மூலம் உலகை வேகமாகச் சுற்றி வந்த முதல் ஆசியர் எனும் பெருமையை 23-12-2018 அன்று பெற்றுள்ளார். அவர், 14 நாடுகளை , ஒரு நாளுக்கு 300 கி.மி வீதம் 159 நாட்களில் சுற்றி வந்துள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • அணு ஆயுதத்துடன் 4,000 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவில் 23-12-2018 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
    • கூ.தக. : அக்னி-4 ஏவுகணையின் முந்தைய பெயர் ”Agni II prime”

விளையாட்டு

  • ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த். ஹிமாசல பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
  • இந்திய வில்வித்தை சங்கத்தின் (Archery Association of India(AAI)) தலைவராக B V P ராவ் (B V P Rao) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!