நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 25,26 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 25,26 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 25,26 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • இயல் விருது - விளக்கு விருது 2017-2018 : கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போல 2017-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர்கள் பா.வெங்கடேசனுக்கும், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமையம். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சாதி ஆணவக் கொலையைப் பற்றிய அவர் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு திருப்பதி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் ஆகிய நாவல்களை அவர் எழுதியுள்ளார். அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
    • அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருதை வழங்கி வருகின்றனர்.
    • 2017-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்காக புனைவு வரிசையில் எழுத்தாளர் பா.வெங்கடேசனும் அபுனைவு வரிசையில் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் ஆகிய நாவல்கள் முக்கியமானவையாகும்.
  • தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்து பட்டா வழங்க கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர். அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.ஊரகப் பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.
  • பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.  இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
  • இந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகம் (music museum) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறுவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சி அமைச்சர் K.பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

இந்தியா

  • இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் 2018 : போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் விப்ரோ அதிபர் அசிம்பிரேம்ஜி (ஒரு லட்சத்து 47 கோடி ரூபாய்) இரண்டாவது இடத்தையும், ஆர்சலர் மிட்டல் தலைவர், லட்சுமி மிட்டல் (1 லட்சத்து 28 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து 'டாப் -10'ல் இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பத்தினர், திலிப் சங்வி, குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
  • ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய , நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலை (India’s longest rail cum road bridge) இரண்டு அடுக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 25-12-2018 அன்று திறந்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 4.94 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் அடுக்கில் இரட்டை அகல ரயில் பாதையும், மேல் அடுக்கில் மூன்று வழிச் சாலையும் இடம்பெற்றுள்ளன.
    • கடந்த 1997-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தேவெ கெளடா இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் வாஜ்பாயால் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2007-ஆம் ஆண்டில் இதை தேசிய திட்டமாக அறிவித்தது. மொத்தத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் அருகேயுள்ள பொகீபில் என்னும் இடத்தில் இந்த இரட்டைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா நகரில் இருந்து அருணாசலப் பிரதேச மாநிலத்தின் நாஹர்லாகுன் நகருக்கு ரயிலில் செல்வதற்கான பயண நேரம் 10 மணி நேரத்துக்கும் மேலாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாகப் பதிவாகும் நிலநடுக்கத்தை தாங்கும் வல்லமை கொண்டது.
கூ.தக. : இந்தியாவின் நீளமான மேம்பாலங்கள்:
  • இந்தியாவின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ள பொகீபில் பாலம் பெற்றுள்ளது. இதில் மேல் அடுக்கில் மூன்று வழிச்சாலையும், கீழ் அடுக்கில் இரு அகல ரயில் பாதைகளும் உள்ளன. இதன் தூரம் 4.94 கி.மீ. ஆகும். நமது நாட்டில் ஈரடுக்கு மேம்பாலத்தில் இதுவே நீளமானது.
  • சாலை மட்டுமே உள்ள இந்தியாவின் நீண்ட பாலம் அஸ்ஸாமில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பூபேன் ஹசாரிகா என்ற பெயரிலான இந்தப் பாலம் லோஹித் ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு அடுத்த இடத்தை பிகாரில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலம் பிடித்துள்ளது. 1982-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 5.75 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திலும் சாலை மட்டுமே உள்ளது.
  • மூன்றாவது இடத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடல் பாலம் பிடித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 5.6 கி.மீ. தூரத்துக்கு 8 வழித்தடங்கள் உடையது.
  • முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்தில், 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி 24-12-2018 அன்று வெளியிட்டார்.
  • அந்தமான் நிகோபரில் உள்ள 3 தீவுகளின் பெயர் மாற்றம் : அந்தமான் நிகோபரில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகிய மூன்று தீவுகளுக்கும் முற ையே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு, சகித் தீவு, ஸ்வராஜ் தீவு என பெயர் மாற்றியமைக்கப்படுகிறது.
  • 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்த 98 வயது நிறைந்த சுலகிட்டி நரசம்மா காலமானார். கர்நாடகாவின் பெங்களூருவில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுலகிட்டி நரசம்மா (வயது 98). இவர் தனது கிராம பகுதியில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்துள்ளார். இவருக்கு 2018ம் ஆண்டு மார்ச் 20ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
  • இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India (CCI) ) தலைவர் - அசோக் குமார் குப்தா
  • சர்வதேச கீதா மஹோத்சவ் 2018 (International Gita Mahotsav, 2018) 7-23 டிசம்பர் 2018 தினங்களில் ஹரியானாவிலுள்ள குருஷேத்ராவில் நடைபெற்றது. பகவத் கீதையின் தோற்றத்தின் நினைவாக இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

  • வங்காளதேசத்திற்கான இந்திய ஹை கமிஷனராக ரிவா கங்குலி தாஸ் (Riva Ganguly Das) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய நல்லாட்சி தினம் (Good Governance Day) - டிசம்பர் 25 |  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம்

விளையாட்டு

  • கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018” (Club World Cup) ல் ரியல் மாட்ரிட் (Real Madrid) அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • சித்த மருத்துவ தினம் - டிசம்பர் 26 | அகத்தியரின் பிறந்த தினம்
  • தேசிய விவசாயிகள் தினம் (National farmers’ day) - டிசம்பர் 23 | இந்திய விவசாயிகளின் தலைவர் மற்றும் இந்தியாவின் 5வது பிரதமர் சரண் சிங் (Chaudhary Charan Singh) அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
  • தேசிய நுகர்வோர் தினம் (National Consumer Day) - டிசம்பர் 24 | மையக்கருத்து (2018) - நுகர்வோரின் புகார்களுக்கு சரியான நேரத்தில் தீர்வு காணல் (Timely Disposal of Consumer Complaints)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • Vespucci US Military Satellite” என்ற பெயரில் ஜி.பி.எஸ்-3 (Global Positioning System (GPS) III) செயற்கைக் கோளை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் அனுப்பியுள்ளது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!