Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

TNPSC Current Affairs 27 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 27 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 27 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • வன்னியர் சொத்து வாரிய மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 26-12-2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். வன்னியர் சமூகத்தினர் உருவாக்கிய பொது அறக்கட்டளைகளையும், சொத்துகளையும் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் தனி நலவாரியம் உருவாக்குவதற்கான மசோதா, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சொத்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கும், வன்னிய மக்களின் மேம்பாட்டுக்காக அதை பயன்படுத்துவதற்கும் இம்மசோதா வகை செய்கிறது.
  • ’இடையம்மன் திருவிழா’ (Heddaiyamman festival) எனப்படும் பாரம்பரிய பழங்குடியின திருவிழா  நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் பழங்குடி சமூகத்தினரால (Baduga community) 26-12-2018 அன்று கொண்டாடப்பட்டது.
  • DIPP ஸ்வச் பாரத் கிராண்ட் சேலஞ் விருதுகள் 2018 (Department of Industrial Policy and Promotion (DIPP) Swachch Bharat Grand Challenge Awards). மொத்தம் நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் முதலிடத்தை வென்ற அமைப்புகளின் விவரம் வருமாறு,
    • காற்று தூய்மை பிரிவு ( Air sector)  -  Maclec technical project laboratory pvt. Ltd of Delhi 
    • துப்புரவு பிரிவு (sanitation sector) -  Altersoft Innovations India Private Limited of Kerala (Cochin) 
    • கழிவு பிரிவு (waste sector) - Sanshodhan An E-Waste Exchange Private Limited of Telangana 
    • 4 நிர் பிரிவு (water sector) - REVY Environmental Solutions Pvt Ltd of Gujarat 

இந்தியா

  • ஆந்திர மாநிலத்துக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். நாட்டின் 25வது உயர்நீதிமன்றமாக செயல்படவுள்ள ஆந்திர உயர்நீதிமன்றம் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    • கடந்த 2014ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா என்ற புதிய மாநிலம் பிரிந்தது. இதையடுத்து, இவ்விரு மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட்டு வந்த ஐதராபாத் உயர்நீதிமன்றம் தெலுங்கானா எல்லையில் இருக்கிறது. இதுநாள் வரையில் இரண்டு மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றமும் ஐதராபாத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆந்திராவுக்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு அனுமதி அளித்தது. இந்நிலையில்,  ஜன.1 2019 முதல் ஆந்திர மாநிலத்துக்கான உயர்நீதிமன்றம் அமராவதியில் செயல்படத் தொடங்கும். இதில் 16 நீதிபதிகள் ஆந்திர மாநிலத்தின் நீதிமன்றத்திற்கும், 10 நீதிபதிகள் தெலுங்கானா மாநிலத்தின் நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேசத்திலுள்ள “குனோ” ( Kuno ), தேசிய பூங்காவாக  அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள கிர் சிங்கங்கள் (Gir lions) , இந்த  புதிய தேசிய பூங்காவிற்கு மாற்றப்படவுள்ளன.

உலகம்

  • இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கி உள்ளது.
  • மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா (marijuana and kratom) வளர்ப்பதை சட்டபூர்வமாக்கியுள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடு எனும் பெயரை தாய்லாந்து பெற்றுள்ளது. 25-12-2018 ல் இது தொடர்பான ஒப்புதலை அந்நாடு வழங்கியுள்ளது.
  • சர்வதேச திமிங்கல வேட்டை கமிஷனிலிருந்து ( International Whaling Commission (IWC) ) ஜப்பான் நாடு 24-12-2018 அன்று விலகியுள்ளது.
  • ’பிஷ்பார்டே மொபைல் செயலி’ (BizBarde App) என்ற பெயரில் துர்க்மெனிஸ்தான் நாடு , தனக்கான முதல்  குறுஞ்செய்தி செயலியை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில், ஃபேஷ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டு உறவுகள்

  • பால் தயாரிப்பு பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade (DGFT) ) தடை விதித்துள்ளது.  வரும் 23 ஏப்ரல் 2019 வரையில் இந்த தடை நீடிக்கும்.
    • கூ.தக. : பால் உற்பத்தி மற்றும் நுகர்வில் , உலகளவில் இந்தியா முதலிடத்திலுள்ளது. இந்தியாவில்  பால் உற்பத்தியில்  முதலிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலமும், இரண்டாம், மூன்றாம் இடங்களில் முறையே ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களும் உள்ளன.

பொருளாதாரம்

  • ஆர்பிஐ நிதி குறித்த நிபுணர் குழு: தலைவராக பிமல் ஜலான் நியமனம் :
    • ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலானும், துணைத் தலைவராக பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலர் ராகேஷ் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 பேர் அடங்கிய இக்குழுவில் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், ஆர்பிஐ மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களான பாரத் தோஷி, சுதீர் மன்கத், ஆர்பிஐ துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    • இந்த நிபுணர் குழு 90 நாள்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.
    • சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் எந்த அளவுக்கு நிதியை கையிருப்பு வைத்துள்ளன என்பது உள்பட பல்வேறு விஷயங்களை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்ய இருக்கிறது.
    • முன்னதாக, ஆர்பிஐ-யின் இருப்பில் உள்ள ரூ.9.69 லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, அதாவது ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ஆர்பிஐ மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தகக்து.

விருதுகள்

  • உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல் படைத்துள்ளார். இவர் சிறு வயது முதலே தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பலனாக தற்போது அவருக்கு 5.7 அடிக்கு தலை முடி உள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • செவ்வாய் கிரகத்தில் பெரிய பனிப்பள்ளத்தாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனும் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இவ்விண்கலமானது 2003 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தது.  செவ்வாய் கிரகத்தில் பெரிய பனிப்பள்ளத்தாக்கு இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோரோலீவ் என பெயரிடப்பட்டுள்ள 81.4 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட பகுதியிலேயே இந்த பனிப்பள்ளத்தாக்கு காணப்படுகின்றது. இப்பனிப்பள்ளத்தாக்கின் விட்டமானது சுமார் 2 கிலோ மீட்டர்கள் இருக்கிறது.
  • செவ்வாய்கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் நில அதிர்வுமானி : அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது. தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. தி இன்சைட் ரோபோ தன்னுடன் எடுத்துச்சென்ற நில அதிர்வுமானி (Seismometer) கருவியை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. நில அதிர்வுமானி என்பது நிலநடுக்கத்தின் வேகம் மற்றும் திறன் ஆகியவற்றினை அளக்கும் கருவி ஆகும். இக்கருவியானது செம்பின் நிறத்தில் காணப்படுவதுடன், 1.636 மீட்டர்கள் உயரமுடையதாகவும் இருக்கின்றது. இந்த  கருவியை நிலைநிறுத்தும் காட்சியையும் இன்சைட் ரோபோ படமெடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுகள்

  • இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார்.
  • உலக ஜீனியர் வாதத்திறமைக்கான சாம்பியன்சிப் போட்டியில் (World Scholar’s Cup - Junior Debate Championship) வென்றுள்ள முதல் இந்தியர் என்னும் பெருமையை  சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதி சாய் விஜய்கிரண் ( Aadi Sai Vijaykaran)  பெற்றுள்ளார். இவருக்கு  “Top Debater in the World”  என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன.
  • ’குழந்தைகளுக்கான ஜீனியர் கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப்’ (US Kids Jr Golf World Championship) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அர்ஜீன் பாடி (Arjun Bhati) வென்றுள்ளார்.
  • ICC Hall of Fame ல் புதிதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot