நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 28 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 28 டிசம்பர் 2018

தமிழ்நாடு
  • லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9 ஜூலை 2018 -ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர். இந்த 3 பேர் கொண்ட தேர்வுக்குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
  • முன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் (Ranking of the Aspirational Districts), தேசிய அளவில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை கடந்த ஜனவரி 5, 2018-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, நாடு முழுவதும் 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
    • சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர்வளம், அனைவரையும் உள்ளடக்கியபொருளாதாரம், திறன் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு ஆகிய ஆறு வளர்ச்சிப் பணிகளில்ஜூன் 1, 2018-க்கும், அக்டோபர் 31, 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சியைஅதிகப்படுத்தியுள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்களின் இரண்டாவது தரவரிசைப்பட்டியலை நித்தி ஆயோக் 27-12-2018 அன்று வெளியிட்டது.
    • டாடா அறக்கட்டளை, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை நித்தி ஆயோகின் அறிவுசார் பங்குதாரர்களாக இணைந்து, வீடுதோறும் சென்று ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • மொத்தம், 111 மாவட்டங்கள் உடைய இந்த திட்டத்தில், தமிழகத்தின் விருதுநகர், முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஒடிசாவின் நபாடா, இரண்டாவது இடத்தையும், உத்தர பிரதேசத்தின், சித்தார்த் நகர் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.பீஹாரின் அவுரங்காபாத், ஒடிசாவின் கோராபுட் ஆகியவை, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தின் ராமநாதபுரம், இந்தப் பட்டியலில், 20வது இடத்தில் உள்ளது. 
  • "டிவ்ஜிங் திருவிழா” (Dwijing Festival) என்ற பெயரிலான கலாச்சாரத் திருவிழா அஸ்ஸாம் மாநிலத்தின் ஏய் ஆற்றின் (Aye river) கரையோரத்தில் 27 டிசம்பர் 2018 முதல் 7 ஜனவரி 2019 வரையில் நடைபெறுகிறது.
  • 26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (National Children’s Science Congress) , பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் (Science, Technology and Innovations for a clean, Green and Healthy Nation) என்ற மையக்கருத்தில் , ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் 27-12-2018 அன்று தொடங்கியது.
  • 2018 ஆம் ஆண்டில், அந்நிய முதலீட்டைப் பெறுவதில், சீனாவை இந்தியா மிஞ்சியுள்ளது. : 2018ம் ஆண்டில் 235 நிறுவனங்களின் மூலம் 76 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை இந்தியா ஈட்டியிருக்கிறது.
    • அண்டை நாடான சீனா, 32 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீட்டை ஈட்டியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவை முந்தியிருக்கிறது இந்தியா.
  • இந்தியாவில் இணையதள இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 50 கோடி என்ற மைல்கல்லை கடந்து 56 கோடியாக அதிகரித்துள்ளது. டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2016 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி 34 கோடியாக இருந்த இணையதள இணைப்பு பெற்றோர் எண்ணிக்கை   2018  செப்டம்பர் 30 ல் 56 கோடியை எட்டியது.
    • இணையதளம் பயன்படுத்துவோரில் 36 கோடி பேர் நகர்புறங்களிலுள், 19.4 கோடி பேர் கிராம புறங்களிலும் உள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகே இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இதே போன்று இணையதளம் பயன்படுத்துவோரில் 20 கோடி பேர் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆவர்.
    • 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கர்நாடகாவில் 58 சதவீதமும், தமிழகத்தில் 45 சதவீதமும், ஆந்திரா-தெலுங்கானாவில் 76 சதவீதமும், மகாராஷ்டிராவில் 56 சதவீதமும், குஜராத்தில் 70 சதவீதமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா 27-12-2018 அன்று நிறைவேறியது : இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது.
    • இது தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, ‘‘இந்த நடைமுறை சட்ட விரோதம்’’ என தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து,  கடந்த செப்டம்பர் 2018 மாதம் மத்திய அரசு ‘முத்தலாக்’ நடைமுறைக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வந்தது.  இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் கடந்த டிசம்பர் 17–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 27-12-2018 அன்று தாக்கல் செய்த மசோதா மீதான வாக்கெடுப்பில்,  மசோதாவுக்கு ஆதரவாக 245 ஓட்டுகளும், எதிராக 11 ஓட்டுகளும் விழுந்தன. ஆதரவு ஓட்டுகள் பெரும்பான்மையாக இருந்ததால் மசோதா நிறைவேறியது.இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சம், தடையை மீறி ‘முத்தலாக்’ நடைமுறையை பின்பற்றும் ஆணுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதுதான்.
  • ஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் : போலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி,
    • வாகன உற்பத்தியாளர்கள் 2019 ஏப்ரல் 1 முதல், தங்களது வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தி டீலர்களுக்கு விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள்-1989, உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் மறு உத்தரவு-2001 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
    • உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குரோமியம் அடிப்படையிலான ஒளிரும் பட்டைகள், வாகனத்தின் முன், பின் பதிவெண் தட்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதில் நிரந்தர அடையாள எண்ணானது, லேசர் ஒளிக்கற்றை மூலமாக பொறிக்கப்பட்டிருக்கும். அது தவிர்த்து, வாகனத்தின் உள்பக்கமாகவும் ஒளிரும் பட்டைகள் மூலமாக பதிவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். 
  • காலிஸ்தான் விடுதலைப்படைக்கு மத்திய அரசு தடை : பஞ்சாப் பிரிவினையை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி, பல்வேறு வன்முறை செயல்களால் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக விளங்கி வரும் காலிஸ்தான் விடுதலைப்படைக்கு  தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
  • NEIDS திட்டம் ( North East Industrial Development Scheme ) - என்பது, வடகிழக்கு மாநிலங்களில் தொழில்மயமாவதை துரிதப்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.  04.2017 முதல்  31.03.2022 வரையிலான காலக்கட்டத்தில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் தொழில் துவங்குவோருக்கு , அவர்தம்  தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான செலவில் 30%  (அதிகபட்சம் ரூ.5கோடி) மத்திய அரசின் உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • தேசிய அறிவு சார் சொத்துரிமை கொள்கை 2016 (National Intellectual Property Rights (IPR) Policy 2016) 12-5-2016 முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • தற்சமயம் செயல்பாட்டில் உள்ள தேசிய நீர்வழிப்போக்குவரத்து பாதைகள் (Operational National Waterways in the Country), அவை அமைந்துள்ள ஆறு மற்றும் மாநிலங்களின் விவரம்.
(தேசிய  நீர்வழி சட்டம், 2016 இன் படி அறிவிக்கப்பட்டுள்ள 111 தேசிய நீர்வழிகளில், மொத்தம் 13 நீர் வழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது)
  1. NW-1: Ganga-Bhagirathi-Hooghly River System (Haldia - Allahabad) - Uttar Pradesh, Bihar, Jharkhand, West Bengal
  2. NW-2: Brahmaputra River (Dhubri - Sadiya) - Assam
  3. NW-3: West Coast Canal (Kottapuram - Kollam), Champakara and Udyogmandal Canals - Kerala
  4. NW-4: Phase-1development of the stretch Muktiyala to Vijyawada of river Krishna - Andhra Pradesh
  5. NW-10 (Amba River) - Maharashtra
  6. NW-83 (Rajpuri Creek) - Maharashtra
  7. NW-85 (Revadanda Creek - Kundalika River System) - Maharashtra
  8. NW-91 (Shastri river–Jaigad creek system) - Maharashtra
  9. NW-68 – Mandovi – Usgaon Bridge to Arabian Sea (41 km) - Goa
  10. NW-111 – Zuari– Sanvordem Bridge to Marmugao Port (50 km) - Goa
   11.NW-73-   Narmada river- Gujarat &Maharastra
  1. NW-100- Tapi river - Gujarat
  2. NW-97 - Sunderbans Waterways (NW-97): Namkhana to AtharaBankiKhal in West Bengal -West Bengal (through Indo-Bangladesh Protocol Route)


வெளிநாட்டு உறவுகள்
  • பூடானுக்கு 4,500 கோடி இந்தியா உதவி : பூடான் பிரதமர் லோதே டிஸ்ஸரிங் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளதையடுத்து, இந்தியா- பூடான் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, பூடானுக்கு ரூ. 4,500 கோடி உதவி செய்ய இந்தியா ஒப்புதல் வழங்கியது. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுக்குள் இந்த நிதி வழங்கப்படும்.
 விளையாட்டு
  • இந்திய குத்துச்சண்டை தலைமைப் பயிற்சியாளராக சி.ஏ.கட்டப்பா (CA Kuttappa) நியமிக்கப்பட்டுள்ளார். 
விருதுகள் / மரியாதைகள்
  • திருமதி இந்தியா 2018 (Mrs. India My Identity Beauty Pageant 2018) பட்டத்தை மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திவ்யா படிதார் ஜோஷி (Divya Patidar Joshi ) வென்றுள்ளார்.
  • வளரும் மாவட்டங்கள் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, ‘மாற்றத்திற்கான சாம்பியன் விருது’ (Champions of Change) மணிப்பூர் முதலமைச்சர் N பைரன் சிங் (N Biren Singh) கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசின் அறிவியலறிஞர் விருது 2015 - 2017 : கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலத்தில் 29 தமிழக அறிவியலறிஞர்களுக்கான விருதுகளையும், சான்றிதழ்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 27-12-2018 அன்று வழங்கினார்.  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலமாக, தமிழக அறிவியலறிஞர் விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த விருதுகள், வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
    • கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அறிவியலறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
    • அதன்படி, 2015 ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருதுகள், எஸ். வின்சன்ட் (உயிரியல்), இ. முருகன் (வேதியியல்), ஆர். இராஜேந்திரன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ஜி. வைஸ்லின் ஜிஜி (பொறியியல் தொழில்நுட்பவியல்), வி. ரேணுகா தேவி (கணிதவியல்), எஸ். குமரவேல் மற்றும் கே. நாராயணசாமி (மருத்துவவியல்), ஆர். சத்தியமூர்த்தி (இயற்பியல்), எம். செல்வம் (சமூகவியல்), ஏ.வி. ஓம்பிரகாஷ் (கால்நடையியல்) ஆகியோருக்கும்;
    • 2016-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். நக்கீரன் (வேளாண்மையியல்), என். மதிவாணன் (உயிரியல்), ஆர். ரமேஷ் (வேதியியல்), எஸ். அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), எஸ். கண்மணி (பொறியியல் தொழில்நுட்பவியல்), ஆர். உதயகுமார் (கணிதவியல்), எஸ். வெற்றிவேல் செழியன் (மருத்துவவியல்), ஆர். ஜெயவேல் (இயற்பியல்), ஜி. ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோருக்கும்;
    • 2017-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட எம். ரவீந்திரன் (வேளாண்மையியல்), எம். மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), எஸ். கருப்புச்சாமி (வேதியியல்), எஸ். வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), பி. சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பவியல்), என். அன்பழகன் (கணிதவியல்), ஆர். லட்சுமி நரசிம்மன் (மருத்துவவியல்), கே. ஜெகந்நாதன் (இயற்பியல்), எஸ். கெளசல்யா (சமூகவியல்), ஏ.கே. திருவேங்கடன் (கால்நடையியல்) ஆகியோருக்கும் என மொத்தம் 29 அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

அறிவியல் தொழில்நுட்பம்
  • ”USTAAD” (Undergear Surveillance through Artificial Intelligence Assisted Droid) என்ற பெயரில் தானியங்கி இரயில் பழுது பார்க்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோவை இந்திய இரயில்வே தயாரித்துள்ளது.
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை 27-12-2018 அன்று ஒப்புதல் அளித்து உள்ளது.
    • கூ.தக. :இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த திட்ட தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • 3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இதுவாகும். திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள், மனிதர்கள் செல்லும் விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்த ககன்யான் திட்டத்திற்கு  ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!