நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 12-15 January 2019

நடப்பு நிகழ்வுகள் 12-15 ஜனவரி 2019

தமிழ்நாடு

  • 69 வது தேசிய கவிஞர்களின் கருத்தரங்கு (National Symposium of poets) 10-1-2019 அன்று சென்னையில் அனைத்திந்திய  வானொலியின் ( All India Radio ) மூலம் நடத்தப்பட்டது.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க “ரோடியோ (ROADEO) எனப்பெயரிடப்பட்டுள்ள ரோபோ டிராபிக்போலீஸ் சென்னை காவல்துறையினரால்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களுக்கான ரூ.12 ப்ரிமீயம் செலுத்து ரூ.2 லட்சத்துக்கான ஒரு ஆண்டு காப்பீடு வசதி முதன்முறையாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா

  • “Womaniya on GeM” என்ற பெயரில் பெண் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை பல்வேறு அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வசதியை மத்திய வர்த்தக அமைச்சகம் 14 ஜனவரி 2019 அன்று தொடங்கியது.
  • 29-வது, இந்திய பெயிண்ட் மாநாடு 2019 ( Indian Paint Conference–2019) உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 11-13 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.
  • ஆமா காரே எல்.இ.டி.’ ( ‘Ama Ghare LED’ ) எனும் பெயரில் மாநிலத்திலுள்ள 95 இலட்சம் குடும்பங்களுக்கு தலா நான்கு  எல்.இ.டி விளக்குகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஒடிஷா அரசு 11-1-2019 அன்று தொடங்கியுள்ளது
  • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 1 மார்ச் 2019 முதல் தடைசெய்யப்படவுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
  • திரிஷ்னா இயற்கை எரிவாயு திட்டத்திற்கு (Trishna Gas Project) தேசிய வனவிலங்குகள் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்திலுள்ள  ‘திரிஷ்னா’ வன விலங்குகள் பாதுகாப்பகத்தில் இந்த எரிவாயு திட்டம்  மத்திய பொதுத்துறை எண்ணை நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation Limited) இன் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.    
  • தேசிய இளைஞர் பாராளுமன்ற திருவிழா 2019’ (National Youth Parliament Festival 2019 ) 12 ஜனவரி 2019 அன்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால்   புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.   ‘இந்தியாவின் குரலாக இருங்கள்’ மற்றும்    ‘தீர்வுகளை கண்டுபிடித்து கொள்கைகளுக்கு பங்களியுங்கள்’ “Be the Voice of New India” and “Find solutions and contribute to policy”.)  எனும் மையக்கருத்தில்  நடைபெறும் இந்த விழா  24 பிப்ரவரி 2019 வரையில் நடைபெறவுள்ளது.
  • சி.பி.ஐ. அமைப்பிற்கு தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரணைச் செய்ய வழங்கியிருந்த  அனுமதியை சட்டிஸ்கர் மாநில அரசு  10-1-2019 அன்று  திரும்ப பெற்றுள்ளது.  இதன் மூலம், சி.பி.ஐ. அமைப்பு  எந்த வித விசாரணை மேற்கொள்ள வேண்டுமானாலும்  அம்மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
    • கூ.தக. ஏற்கனவே ஆந்திரப்பிரதேச்ம் மற்றும் மேற்கு வங்காள அரசுகள் சி.பி.ஐ. அமைப்பிற்கு தங்களது மாநிலங்களில் வழக்குகளை விசாரணைச் செய்ய வழங்கியிருந்த அனுமதியைத் திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் 12-1-2019 அன்று ஒப்புதல் அளித்தார். முன்னதாக, "அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம்-2019க்கு (இட ஒதுக்கீடு மசோதா), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களுக்கு ஏற்கெனவே மொத்தமாக வழங்கப்படும் 50 சதவீத ஒதுக்கீட்டுடன், பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கும் வகையில் கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கப்படவுள்ளது.
  • 9வது நவீன விவசாயத்திற்கான சர்வதேச நுண் பாசன மாநாடு (International Micro Irrigation Conference on Modern Agriculture)  16-18 ஜனவரி 2019 தினங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்றது.
  • குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு,   ரூ.350 மதிப்புள்ள நினைவு நாணயத்தை பிரதமர் திரு. நரேந்திர  மோடி 13 ஜனவரி 2019 அன்று  வெளியிட்டுள்ளார்.
    • கூ.தக. : குரு கோவிந்த் சிங் பிறந்த தினம் - 5 ஜனவரி 1666
  • பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில்  14 ஜனவரி 2019  முதல் அமலுக்கு வந்துள்ளது.   இதன்மூலம் குஜராத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் சதவீதம் 59. 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் முன்பு அளித்த தீர்ப்பால் குஜராத்தில் இதுவரை 49.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுப்பதற்கான மசோதா மக்களவையில்  தேசியவாத காங்., கட்சியின், எம்.பி  சுப்ரியா சுலே -வினால தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின், ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், 'இ - மெயில்' மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை.  இதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது.இந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர் நல கமிட்டியை உருவாக்க வேண்டும்.மசோதா சட்டமானால், அலுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், இ - மெயில் தகவல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.
    • இது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது. கடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும்.மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • மக்களாட்சி பட்டியல் 2018 (EIU Democracy Index 2018) - ல் இந்தியா 41 வது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பு (Economist Intelligent Unit ) எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் நார்வே நாடு முதலிடத்தையும், 2,3,4,5 ஆம் இடங்களை முறையே ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளும் பெற்றுள்ளன.
  • சர்வதேச ஒட்டக விழா ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் 12,13 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.
  • சிக்கிம் மாநிலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை (One Family, One Job) என்ற திட்டத்தை அம்மாநில முதல்-மந்திரி பவன் சாம்லிங் 14-1-2019 அன்று தொடங்கி வைத்தார்.
    • கூ.தக. : சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், தரமான ஆய்வு இதழ் பட்டியலைக் கொண்ட கேர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு) (Consortium for Academic and Research Ethics (CARE)) அமைப்பை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உருவாக்கியுள்ளது.
  • புதிதாக 3 ‘எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் அமைப்பதற்கு  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இவற்றில், ஜம்முவின் சம்பாவிலுள்ள விஜய்நகரில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள அவந்திபுராவில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் மற்றும் குஜராத்தின் ராஜ்காட்டில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளன.
  • உலக திறன் கூடுகை 2019’ (Global Skill Summit 2019) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 10 ஜனவரி 2019 அன்று நடைபெற்றது.

உலகம்

  • மாசிடோனியா (Macedonia) நாட்டிற்கு ‘வட மாசிடோனிய குடியரசு (Republic of Northern Macedonia) என 11-1-2019 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • தைவானின் பிரதமராக சூ ஷெங் சாங் (Su Tseng-chang) நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • முதலாவது இந்தியா - மத்திய ஆசிய பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue ) உஷ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் 13 ஜனவரி 2019 அன்று நடைபெற்றது. இந்த கூடுகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் கலந்துகொண்டார்கள் . கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்த கூடுகையில் கலந்து கொண்டனர்.
  • நார்வேஜியா நாட்டின் பிரதமர் E.Ms.எர்ணா சோல்பெர்க் ( H.E.Ms.Erna Solberg) 7-9 ஜனவரி 2019 தினங்களில்  அரசுமுறை பயணமாக இந்தியா வருகை புரிந்தார்.
  • நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த சோடாகார்போ என்ற நிறுவனத்துடன் சென்னை ஐஐடி  புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் பயோ-மாஸ் வாயு உற்பத்தி, கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உருவாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும். அதோடு, ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர் பரிமாற்றமும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு (2020) இந்தியாவில் நடைபெறும் எனவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
  • இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மற்றும் டென்மார்க் இடையே கடற்சார் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கு வழி வகுத்தல், இரு நாடுகளும், தரமான கப்பல் தயாரிப்பை உறுதி செய்வதற்காக இரு தரப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் நிபுணத்துவம், வெளியீடுகள், தகவல், தரவு மற்றும் புள்ளிவிபரங்களை பகிர்ந்துக் கொள்ளுதல்;  பசுமை கடற்சார் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறையில் கூட்டுறவு; இந்திய கப்பல் பதிவிற்கு (ஐ.ஆர்.எஸ்.) அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற தகுதியை அளித்தல், கடற்சார் பயிற்சி மற்றும் கல்வித் துறைகளில் கூட்டுறவு;வணிக கப்பல் மற்றும் கடற்சார் போக்குவரத்து விஷயங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் நிலையான கூட்டுறவு; மற்றும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும், இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில், பரஸ்பரம் நன்மையளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கூட்டுறவினை மேலும் விரிவுபடுத்தும். 
  • இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர முறை வளர்ச்சிக்கான (Development of Advanced Model Single Window) புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10-1-19 அன்று ஒப்புதல் வழங்கியது. . இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2018, அக்டோபர், 3 அன்று கையெழுத்தானது.

பொருளாதாரம்

  • ‘ஐ.டி.எஃப்.சி (IDFC Bank) வங்கியின் பெயர் ’ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ( IDFC First Bank) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வங்கியின் தலைமையிடம் மும்பையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகக்து.
  • ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பின் மாநிலங்களில்  வருவாய் குறைவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண  பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையில்  7 நபர் குழு ஒன்றை ஜி.எஸ்.டி கவுண்சில் 13 ஜனவரி 2019 அன்று அமைத்துள்ளது.
  • இந்தியாவின் முதல் மாநிலமாக "அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் (Universal Basic Income) வழங்கும் திட்டத்தை சிக்கிம் மாநில அரசு  11 ஜனவரி 2019 அன்று தொடங்கியுள்ளது.

நியமனங்கள்

  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியில் தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தேசிய பங்கு சந்தை (National Stock Exchange of India) தலைவர் அசோக் சாவ்லா 11-1-2019 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்

முக்கிய தினங்கள்

  • தரைப்படை தினம் ( Army day) - ஜனவரி 15
  • தேசிய இளைஞர்கள் தினம் - ஜனவரி 12 |  சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
  • முன்னாள் படைவீரர்கள் தினம் (Armed Forces Veterans Day) - ஜனவரி 14
  • ஆர்மி விமான படை தினம் (Army Air Defence Day) - ஜனவரி 10

விருதுகள்

  • தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2019 :
    • திருவள்ளுவர் விருது (2019) - எம்.ஜி. அன்வர் பாட்சா
    • தந்தை பெரியார் விருது (2018) - சி.பொன்னையன்
    • அண்ணல் அம்பேத்கர் விருது (2018) - மருத்துவர் சி.ராமகுரு
    • பேரறிஞர் அண்ணா விருது (2018) - பேராசிரியர் மு.அய்க்கண்
    • பெருந்தலைவர் காமராசர் விருது (2018)  - பழ.நெடுமாறன்;
    • மகாகவி பாரதையார் விருது (2018) - பாவரசு திரு.மா.பாரதி சுகுமாரன்
    • பாவேந்தர் பாரதிதாசன் விருது (2018) - கவிஞர் தியாரூ
    • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ( 2018 ) - முனைவர்்ு.கணேசன்
    • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - சூலூர் கலைப்பித்தன்
  • நாஞ்சில் நாடன் விருது 2019 தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது 2019  :   சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டும் நோக்கில், ஆண்டுதோறும் பிலிப் கோட்லர் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த விருது அளிக்கப்படுகிறது. மக்கள், லாபம் மற்றும் கோள் ஆகியவற்றுக்கு இந்த விருது முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த விருது ஆண்டுதோறும் தேசிய தலைவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த விருதினைப் பெறும் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்துள்ளது.  நாட்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்காகவும், நாட்டில் பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த தலைமைப் பண்புக்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
    • நவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தையென அறியப்படும் பிலிப் கோட்லர் பெயரில் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்  

  • மலேசியாவில் நடைபெற்ற ’குழந்தைகளுக்கான கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் 2019’ ( Kids’ Golf World Championship) போட்டிகளில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின்   கூர்கானைச் சேர்ந்த கார்த்திக் சிங் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம்,  உலகளாவிலான கோல்ஃப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மிகவும் இளைய இந்தியர் எனும் பெருமையை கார்த்திக் சிங் பெற்றுள்ளார்.
  • ‘பிரீமியர் பேட்மின்டன் லீக் 2019’ (Premier Badminton League (PBL) 2019 ) போட்டியின் இறுதியாட்டத்தில் பெங்களூரு ராப்டர்ஸ் அணி மும்பை ராக்கெட்ஸ் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
  • விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், 19-வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி  சாம்பியன் பட்டம் வென்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • K2-288Bb” என்ற பெயரில் பூமியைப் போல இருமடங்கு பெரிய கோளை அமெரிக்காவின் ‘நாசா’ கண்டுபிடித்துள்ளது.
  • பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுவரை அறியப்படாத நிலவின் இருண்ட பகுதியை  ஆராய “குவேகியாவ்” என்ற செயற்கைக்கோளை சீனா கடந்த மே 2018 மாதம் விண்ணில் செலுத்தியது.  இந்த நிலையில், இதுவரை அறியப்படாத நிலவின் இருண்ட பகுதியை 360 டிகிரி கோணத்தில் - அதாவது எல்லா திசைகளையும் உள்ளடங்கிய முழு பரிமாணப் படத்தை, அந்த செயற்கைக்கோள் வழியாக சாங் இ-4 விண்கலம் தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!