நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 11 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 11 ஜனவரி 2019

தமிழ்நாடு

  • அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி) என்ற அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • கஜா புயலால் (16 நவம்பர் 2018) பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை 150 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள 133 ஒன்றியங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • 45 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி “ சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்” (Tourism and the Digital Transformation) எனும் கருத்துருவில் சென்னையில் 9-1-2019 அன்று தொடங்கியது.

இந்தியா

  • சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பறிக்கப்பட்டுள்ளது. இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ்  நியமிக்கப்பட்டுள்ளார்.  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நியமித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தற்போது, அலோக் குமார் வர்மா தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அலோக் குமார் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்துள்ளார். சிபிஐ இயக்குநர் ஒருவர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவி இழப்பது சிபிஐ வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் வெளியேறியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து தெலங்கானா, தில்லி, ஒடிஷா, கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலமும் விலகியுள்ளது.  மேற்கு வங்கத்தில் 2017-இல் இருந்து ”ஸ்வாஸ்திய சாதி திட்டம்” எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் குடிமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் சேவை அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், அடிப்படை மருத்துவக் காப்பீடாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
  • சத்தீஷ்கர் மாநில அரசு சி.பி.ஐ. அமைப்பிற்கு தடைவிதித்துள்ளது.  இது தொடர்பாக சத்தீஷ்கர் அரசு மத்திய உள்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், விசாரணை என்ற பெயரில் சத்தீஷ்கர் மாநிலத்திற்குள் நுழையும் சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக, மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறெங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ’உலகின் உயரமான சிவலிங்கம்’ என இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் வளாகத்தில் 111 அடி உயரத்தில்  அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம்  இடம்பெற்றுள்ளது.
  • நியூயார்க் டைம்சின் உலகில் சுற்றி பார்க்க சிறந்த 52 இடங்களின் பட்டியலில், இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம்  எனும் பெருமையை கர்நாடகாவின் ஹம்பி  பெற்றுள்ளது.   ஹம்பி 16 ஆம் நூற்றாண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் மரபு ஆகும். அதன் நன்கு பராமரிப்பு மற்றும் இங்குள்ள கல் கோயில்கள் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
  • ”E-NAM” அல்லது ”தேசிய விவசாய சந்தை” (National Agriculture Market)  திட்டம்  :   14 ஏப்ரல் 2016 ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் விவசாயப் பொருட்களை ஆன்லைன் வழியாக வணிகம் செய்வதற்கான வசதிகளை மத்திய அரசு செய்துள்ளது.
  • ”இண்டஸ் புட்ஸ் - 2” (INDUS FOOD-II) எனும் பெயரில் உணவு கண்காட்சி, ‘உலக உணவு சூப்பர் மார்க்கெட்’ (‘World Food Supermarket’) எனும் மையக்கருத்தில் 14-15 ஜனவரி 2019 தினங்களில் கிரேட்டர் நொய்டாவில் (உ.பி) நடைபெறுகிறது.
  • ”SSL Mumbai” சரக்குக் கப்பல்  :   ”இந்திய கண்டெய்னர் நிறுவனம்” (Container Corporation of India Ltd (CONCOR) ) எனும் இந்திய இரயில்வேயில் கீழ் செயல்படும் நிறுவனம் , ”SSL Mumbai”   என்ற தனது முதல்  சரக்கு கப்பல் சேவையை  காண்ட்லா துறைமுகத்திலிருந்து  10-1-2019 அன்று தொடங்கியுள்ளது. இந்த கப்பலானது,   காண்ட்லா துறைமுகத்திலிருந்து  தூத்துக்குடி துறைமுகம் வரை பயணிக்கவுள்ளது.
  • ”உலக திறன் கூடுகை 2019” (Global Skill Summit 2019)  எனும் கூடுகை ஜார்க்கெண்ட் மாநிலத்தின் ராஞ்சியில்  10-1-2019 அன்று நடைபெற்றது. 1 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ள  இந்த கூடுகையை ஜார்க்கெண்ட் மாநில  அரசு நடத்தியுள்ளது.
  • ”ரேணுகாஜி பல்நோக்கு திட்டம்” (Renukaji Multi Purpose Project) : தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரக்காண்ட் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களின் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கான இந்த திட்டம் தொடர்பாக, மேற்கண்ட ஆறு மாநிலங்களுக்கிடையே 11-1-2019 அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
    • ”ரேணுகாஜி பல்நோக்கு திட்டத்தின்” மூலம் யமுனா மற்றும் அதன் கிளை நதிகளான டோன்ஸ் (Tons) மற்றும் கிரி (Giri) ஆகியவற்றின் மீது அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம்,  உத்தர்காண்டில், யமுனா ஆற்றின் மீது  ’லக்வார் அணை’ (Lakhwar project ) திட்டமும், உத்தர்காண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள, ’டோன்ஸ்’ ஆற்றின் மீது  ‘கிஷாவு’ ( Kishau ) அணை திட்டமும், ஹிமாச்சல் பிரதேசத்தின் ’கிரி’ ஆற்றின் மீது  ‘ரேணுகாஜி’ (Renukaji) அணைத்திட்டமும்  செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவின் நீளமான “ஒற்றை லேன் எஃகு கேபிள் சஸ்பென்ஷன் பாலம்” (single lane steel cable suspension bridge ) அருணாச்சல் பிரதேசத்திலுள்ள சியாங் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது.
  • இந்திய வரலாற்றில் மிகப்பழமையான ’ராம ஜென்மபூமி மற்றும் பாபர் மசூதி’ வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகளடங்கிய அரசியலமைப்பு பெஞ்சை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ( Ranjan gogoi) மற்றும் நீதிபதிகள்  SA பாப்டே, NV ராமன், உதய்  U லலித் மற்றும்  DY சந்திராசத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் (Henley Passport Index) இந்தியா 79 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில் முதலிடத்தில் ஜப்பான் நாடு உள்ளது.
    • கூ,தக. : இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் 61 நாடுகளுக்கு முன் பயண விசா (pre-travel visa) இல்லாமல் பயணிக்க இயலும்.

உலகம்

  • வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ  இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • கூ.தக. வெனிசுலாவின் தலைநகர் - கராகஸ் (Caracas) , நாணயம் - பெட்ரோ (Petro (VEP)), போலிவார் சோபெரானோ (Bolívar Soberano(VES))
  • காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றுள்ளார்.
    • கூ.தக. : காங்கோ நாட்டின் தலைநகர் - பிரஸ்ஸாவில்லே (Brazzaville), நாணயம் - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் (Central African CFA franc)

வெளிநாட்டு உறவுகள்

  • ”SIDCOP” (Sino-Indian Digital Collaboration Plaza) - என்பது இந்தியா மற்றூம் சீனா நாடுகளின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஒத்துழைப்பு முயற்சி.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பிற்காக 3-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 10-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஈரானைச் சேர்ந்த ‘பாஷார்காட் வங்கி’ (Pasargad Bank) தனது கிளையை மும்பையில் திறப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதாரம்

  • ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான  வரம்பு ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும்.
கூ.தக. :  1 ஜீலை 2017 முதல் அமலுக்கு வந்துள்ள   சரக்கு மற்றும் சேவைகள் வரி    0%, 5%, 12%, 18% மற்றும் 28%  என்ற ஐந்து அடுக்குகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
  • ’சங்கர் டி குழு’ (Sankar De) :  இந்தியாவில் மூலதன்ச் சந்தையில் புதிய கொள்கை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ‘செஃபி’ (Securities and Exchange Board of India(SEBI)) அமைப்பு   சங்கர் டி (Sankar De) தலைமையில் ஆய்வுக்  குழு ஒன்றை அமைத்துள்ளது.

நியமனங்கள்

  • ’பேஷ்புக்’ (Facebook) நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு மேலாண் இயக்குநராக அஜித் மோகன் (Ajit Mohan) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊடக சுதந்திரத்திற்கான கூட்டமைப்பு (Alliance for Media Freedom (AFMF)) எனும் அமைப்பின் தலவராக நரசிம்மன் ராம் (Narasimhan Ram) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Bharatiya Pravasi Day or Non Resident Day) - ஜனவரி 9 
  • உலக இந்தி மொழி தினம் (World Hindi Day) - ஜனவரி 10  (1975 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால முதலாவது உலக இந்தி மாநாடு நடத்தப்பட்ட தினத்தின் நினைவாக கொண்டாடப்படுகிறது.) | கருத்துரு - “உலகளாவில் இந்தி மொழியை மேம்படுத்துவது’ (to promote the language at the global stage)
    • கூ.தக. : இந்தியாவில்  தேசிய இந்தி தினம் (National Hindi Diwas)  செபடம்பர் 14 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது (தேவனாகரி உருவிலான இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்).

விளையாட்டுக்கள்  

  • உலகின் நம்பர் ஒன் வீராங்கனை மேரி கோம் : சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.
    • கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டத்துடன் புதிய சாதனை படைத்தார். மேலும், 2018 காமன்வெல்த், போலந்தில் தங்கம், பல்கேரிய போட்டியில் வெள்ளி வென்றிருந்தார்.
    • 36 வயதான மேரிகோம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாததால் 51 கிலோ பிரிவில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட வேந்தர் கோப்பை- கிரிக்கெட் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் கர்நாடகமும், மகளிர் பிரிவில் கேரளமும் சாம்பியன் பட்டம் வென்றன.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ”J1820” எனப் பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கிய கருந்துளை ஒன்றை நாசா மற்றும் எம்.ஐ.டி (MIT) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த, பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள,  இந்த  கருந்துளையானது நட்சத்திரம் ஒன்றைச் சூழவுள்ள வாயுவை அகத்துறுஞ்சி, பின்னர் சுருங்கியுள்ளது.
  • கார்பன் டை ஆக்சைடை படிகப்படுத்தி ‘விண்வெளி எரிபொருளை’ (‘Space fuel’)  ஐ.ஐ.டி சென்னை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “We Are Displaced” என்ற பெயரில்  பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற சிறூமி மலாலா யூசாஃப் (Malala yousafzai) எழுதியுள்ள புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புத்தகம் அகதிகளாக வாழும் பெண் குழந்தைகளைப் பற்றியதாகும்.  இவர் எழுதியுள்ள பிற புத்தகங்கள் வருமாறு,
    • I am Malala: The Story of the Girl Who Stood Up for Education ( 2013)
    • Malala’s Magic Pencil (2017)
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!