நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 17 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 17 ஜனவரி 2019

TNPSC Current Affairs 17 January 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழகம்  
  • 2018 ஆம் ஆண்டில், காசநோய் பாதிப்பில் தமிழகம் 6-ஆம் இடத்தில்  உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
    • கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை வேரறுக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு  சேலம் மாநகராட்சி சார்பில் சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-1-2019 அன்று திறந்து வைத்தார்கள்.  
    • கூ.தக. : தமிழக அரசினால் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய மணிமண்டபங்கள் மற்றும் திருவுருவசிலைகள்
      • சிவாஜிகணேசன் - சென்னை
      • ராமசாமி படையாச்சியார் - கரூர்  
      • இசை மேதை நல்லப்பசாமி -நெல்லை மாவட்டம் விளாத்திகுளத்தில்  நினைவுச்சின்னம்
      • பாரத மாதா நினைவாலயம் -  பாப்பாரப்பட்டி, தர்மபுரி
      • சிவந்தி ஆதித்தனார் - திருச்செந்தூர்
  • ஜெர்மன் தொழில்நுட்ப வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழகத்துக்கான புதிய வீட்டுவசதி கொள்கை உருவாக்கப்பட உள்ளது. நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப, வீட்டுவசதி, உறைவிட கொள்கையை உருவாக்க, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இதன்படி, தமிழகத்துக்கான புதிய வீட்டுவசதி, உறைவிட கொள்கை உருவாக்கப்படும் என, 2017 - 18ல், அரசு அறிவித்ததைத் தொடர்ந்து புதிய வீட்டுவசதி மற்றும் உறைவிட கொள்கை உருவாக்குவது குறித்து, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.., மற்றும் நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அடங்கிய, உயர் நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின்  மூலம் துறை வாரியாக பெறப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, ஜெர்மன் தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி கிடைத்ததும், புதிய கொள்கை இறுதி செய்யப்படும்.
இந்தியா
  • சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியல் 2019 ல்,  இந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 25 இந்திய பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் வந்துள்ளன. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூப் ஆப் சயின்ஸ் 14-ஆவது இடத்திலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மும்பை 27-ஆவது இடத்திலும் உள்ளன. இந்த 2 பல்கலைக்கழகங்களும் கடந்த ஆண்டு வகித்த இடங்களில் இருந்து ஓரிடம் பின்தங்கியுள்ளன. முதல் 5 இடங்களில் 1 முதல் 4 இடங்களை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஷிங்குவா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.  இந்த பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • ஷாக்‌ஷம் 2019’ (Saksham 2019) என்ற பெயரில் மத்திய பெட்ரோலிய  பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (Petroleum Conservation Research Association (PCRA)) நாடு தழுவிய விழிப்புணர்வு பரப்புரை 16-1-19 அன்று  புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஒரு மாத வருடாந்திர நிகழ்வின் மூலம் எரிபொருள் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன.
  • 9வது ‘சர்வதேச நுண் நீர்பாசன மாநாடு’ (International Micro irrigation conference) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 16-18 ஜனவரி 2019 தினங்களில் ‘நுண் நீர்ப்பாசனம் மற்றும் நவீன வேளாண்மை’  (“Micro Irrigation and Modern Agriculture”) எனும் மையக்கருத்தில் நடைபெறுகிறது.
  • கும்ப மேளா 2019  15 ஜனவரி 2019 ல் தொடங்கி 4 மார்ச் 2019 வரையில்  உத்தரப்பிரதேச மாநிலம் ‘பிரயாக்ராஜ்’ (Prayagraj) நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூடுமிடத்தில் நடைபெறுகிறது.
    • கூ.தக. : கும்ப மேளா நிகழ்வு யுனெஸ்கோ அமைப்பினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொட்டுணரத்தக்கதல்லாத கலாச்சார பாரம்பரியமாக  (intangible cultural heritage) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • முதல் ‘ஆமைகள் திருவிழா’ (Turtle Festival)  ஒடிஷாவின் பூரி-யில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் ‘ஆலிவ் ரிட்லி ஆமைகள்’ (olive ridley turtles) வகை ஆமைகளின் பாதுகாப்பதகாகும்.
  • ஜெய் கிஷான் ரின் முக்தி யோஜனா’ ( ‘Jai Kisan Rin Mukti Yojana’ ) என்ற பெயரில் ரூ.50,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • உலக விமானப் போக்குவரத்து கூடுகை 2019’ (Global Aviation Summit 2019)  15 ஜனவரி 2019 அன்று மும்பையில் நடைபெற்றது.
நியமனங்கள்
  • உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

விருதுகள்
  • அமைதிக்கான காந்தி விருது 2015 - 2017 :  கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி,
    • 2015-ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான காந்தி விருதை கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு செயல்படும் விவேகானந்த கேந்திரம் அமைப்பு பெறுகிறது. ஊரக மேம்பாடு மற்றும் கல்வித் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது.
    • 2016-ஆம் ஆண்டு விருதை, அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் அக்ஷய பாத்திரம் அமைப்பு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது.
    • ஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வரும் ஏகாய் அபியான் அறக்கட்டளைக்கு 2017-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்துவரும் யோஹெய் சசாகவா அமைப்புக்கு 2018-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான காந்தி விருது வழங்கப்படுகிறது.
    • கூ.தக. :
      • பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் அடங்கிய குழு இந்த விருது வழங்கும் முடிவை மேற்கொண்டது. கடந்த 1995 முதல்சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
      • அமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தி இந்து இலக்கிய பரிசுகள் 2018’ (Hindu Literary Prize 2018) :
    • புனைவு பிரிவு (Fiction)  - நீலம் சரண் கவுர் (Neelum Saran Gour),   Requiem in Raga Janki என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    • புனைவில்லாத பிரிவு (non-fiction) - மனோரஞ்சன் வியாபாரி , Interrogating my Chandal Life: An Autobiography of a Dalit என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    • இளைய உலக சிறந்த புனைவு  புத்தக பரிசு (The Hindu Young World-Good Books Award for best book Fiction)  - வெனிதா கோயல்கோ (Venita Coelho), Boy No: 32 என்ற புத்தகத்திற்காக
    • இளைய உலக சிறந்த புனைவில்லாத  நூலுக்கான பரிசு (The Hindu Young World-class Good Books Award for best book non-fiction) - மம்தா நைனி , ’A Brush with Indian Art’  என்ற புத்தகத்திற்காக
    • இளைய உலக  சிறந்த பட புத்தகக் கதை (The Hindu Young World-Good Books Award for best picture book story) - விநாயக் வர்மாவின் ‘Angry Akku’ எனும் புத்தகத்திற்காக
  • உலகின் ஏழு மிக உயர்ந்த  சிகரங்கள் மற்றும் எரிமலைகளை ஏறியுள்ள   உலகின் இளம் வீரர் எனும் பெருமையை கல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது  சத்யரப் சித்தாந்தா பெற்றுள்ளார்.
பொருளாதாரம்
  • மின்னணு முறையில் (-ஃபைலிங்) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை மேலும் மேம்படுத்த இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ரூ.4,242 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை   ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, வரிபிடித்தம் செய்த தொகை வரிசெலுத்துவோர் திரும்பப் பெற குறைந்தது 63 நாள்களாகும். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த பிறகு, 2 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. புதிய நடைமுறைப்படி, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த பிறகு ஒரே நாளில் நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வரிபிடித்த தொகையில் ஒரு பகுதி கூடிய விரைவில் வரிசெலுத்துவோர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
கூ.தக. : வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு இந்த நிதியாண்டில் இதுவரை திருப்பி அளிக்கப்பட்ட தொகை ரூ.1.83 லட்சம் கோடியாகும்.
  • இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (Export-Import Bank of India - EXIM Bank) மறுமூலதனத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி,
    • இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் மறுமூலதனம் செய்வதற்கு வசதியாக, ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய அரசு மறுமூலதன பத்திரம் வெளியிடும். இந்த தொகை 2018-19 ஆம் நிதியாண்டில் 4,500 கோடி ரூபாயும், 2019-20 நிதியாண்டில் 1,500 கோடி ரூபாயும் இந்த வங்கியில் மறுமூலதனம் செய்யப்படும்.
    • இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மூலதனத்தை 10 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையே, சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 16-1-2019 அன்று ஓப்புதல் வழங்கியது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் சுரங்க பாதுகாப்பு தலைமை இயக்குநர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிம்தார்ஸ் (சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்)  இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும்.
  • இம்பெக்ஸ் 2018-19’ (IMBEX 2018-19) என்ற பெயரில்  இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கிடையேயான  கூட்டு இராணுவ ஒத்திகை சண்டிகாரின் சண்டிமண்டிர் பகுதியில் 14 ஜனவரி 2019 அன்று தொடங்கியது.
விளையாட்டு
  • உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர்  எனும் பெருமையை சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் பெற்றுள்ளார்.   தில்லியில் நடைபெற்ற  17-ஆவது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சக வீரர் டிகே.சரமாவை தோல்வியுறச் செய்து இந்த சிறப்பைப் பெற்றார். குகேஷுக்கு தற்போது வயது 12 ஆண்டுகள், 7 மாதங்கள் 17 நாள்கள் ஆகும்.  கடந்த 2002-இல் உக்ரைனின் செர்ஜி கார்ஜகின் தனது 12 ஆண்டுகள், 7 மாதங்களில் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்ததன் மூலம் உலகின் முதல் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : இதற்கு முன்னர், சென்னையின் மற்றொரு வீரர் பிரகனந்தா 12 ஆண்டுகள், 10மாதங்களில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றதன் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டராக  அறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, குகேஷ் இவரது சாதனையை முறியடித்துள்ளார்.
  • கேலோ இந்தியா யூத் போட்டிகளில் 50 மீ துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப் பதக்கம் வென்றார்.ஹரியாணாவின் ஷிரின் கோத்ரா வெள்ளியையும், மேற்கு வங்கத்தின் ஆயுஷ் வெண்கலமும் வென்றனர்.   
கூ.தக. : மத்திய விளையாட்டு அமைச்சகம்,சாய் சார்பில் புணேயில் கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2019 நடைபெற்று வருகின்றது.
  • இந்திய  பெண்கள் குத்துச்சண்டை அணியின்  தலைமைப் பயிற்சியாளராக முகமது அலி காமர் (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!