Type Here to Get Search Results !

TNPSC Current Affairs 18-20 January 2019

0
TNPSC Current Affairs 18-20  January 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

 • தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு 19-1-2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, தமிழகத்தை உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர்விடமாகவும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என்பது புதிய தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையின் தொலைநோக்கு இலக்கு ஆகும். தமிழகத்தில் துடிப்பான புதிய தொழில் சார்ந்த சூழலை உருவாக்குவதன் மூலம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் புதிய தொழில்களும், 10 உலகளாவிய உயர் வளர்ச்சி புதிய தொழில்கள் உள்பட பல்வேறு தொழில் அம்சங்கள் வளம்பெறும்.
 • தமிழகத்தில் ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா தருமபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடியில் அமைக்கப்பட்டு வருகிறது. . ரூ.20 கோடி  மதிப்பில் அமைக்கப்படவுள்ள  உணவுப் பூங்காவில் 120 சிறு, குறு உணவு தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை ஜிஎஸ்இ அவிக்னா நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
 • எண்ணூர் துறைமுகம், மாமல்லபுரம் இடையே சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதற்கு ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியில் 18-1-2019 அன்று கையெழுத்தானது. இந்தியாவின் சார்பில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் மகோபாத்ராவும், ஜப்பான் தரப்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜிகா) டெல்லி தலைமை பிரதிநிதி காட்சுவோ மேட்சுமோட்டோவும் கையெழுத்திட்டனர். எண்ணூர் துறைமுகத்தையும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தையும் இணைக்கிற வகையில் 133.65 கி.மீ. தொலைவுக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.  இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிலம் எடுத்தல் உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்து சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 420 கோடி கடன் உதவியை ஜப்பான் வழங்குகிறது. இதில் ஜப்பான் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு கடன் உதவி என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்து 470 கோடி கிடைக்கிறது. ரூ.950 கோடி, இந்திய–ஜப்பான் ஒத்துழைப்பு செயல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.
 • தமிழகம், குஜராத்தில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • சென்னையில் 23-24 ஜனவரி 2019 தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முழக்கமாக “முதலீட்டாளர்களின் விருப்பம் (Investors Choice)” என்ற சொற்றடர் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் முழக்கமாக, ”தமிழ்நாடு முதலீட்டாளர்களின் சொர்க்கம்” என்ற வாசகம் முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • ஆடுதுறை 53 புதிய நெல் ரகம் அறிமுகம் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, 105 முதல் 110 நாள்கள் வயதுடைய குறுகிய கால நெல் ரகம். காவிரி பாசனப் பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்து நெல் பயிரிடப்படும் பகுதிகளுக்கும் குறுவை மற்றும் கோடை பருவங்களில் பயிரிட ஏற்ற உயர் விளைச்சல் ரகம் இது. இந்தப் புதிய நெல் ரகமானது, ஏடிடீ 43 மற்றும் ஜெஜிஎல் 384 கலப்பிலிருந்து வம்சாவளித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ரகம் 105 - 110 நாள்களில் சராசரியாக ஹெக்டேருக்கு 6,334 கிலோ மகசூலும், அதிகபட்ச மகசூலாக ஹெக்டேருக்கு 9,875 கிலோ மகசூலும் தர வல்லது. மேலும், கச்சிதமான செடி அமைப்பும், மிதமான கச்சித அமைப்புடைய அடர்ந்த கதிர்களையும், நெருக்கமான நெல் மணிகளையும் கொண்டது.  
 • எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவம் பொறித்த 5 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு நாணயங்களை முதல்ர் எடப்பாடி கே.பழனிசாமி 17-1-19 அன்று வெளியிட்டார். 

இந்தியா

 • 'டிஃப்போ பாலம் (Diffo Bridge) :  அருணாச்சல் பிரதேச மாநிலத்திலுல்ள சிபு(Chipu) ஆற்றின் மேல் கட்டப்பட்டுல்ள 426 மீ தொலைவிலான டிஃப்போ பாலத்தை 18-1-2019 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நாட்டிற்கு அற்பணித்தார்கள்.
 • 2வது ‘உலக ஆரஞ்சு பழத் திருவிழா (World Orange Festival) 18-21 ஜனவரி 2019 தினங்களில் , ‘ஆரஞ்சு பழங்களின் நகரம்’ ( city of Oranges) என அழைக்கப்படும் நாக்பூர் நகரில் நடைபெற்றது.
 • கோயம்பத்தூர் நகரை அடுத்து, நாட்டின் இரண்டாவது  ‘இராணுவ கண்டுபிடிப்பு மையம் (defence innovation hub) மஹாராஷ்டிர மாநிலம் நாஷிக் நகரில் அமைக்கப்படவுள்ளது.
 • உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டை மூன்றாவது மாநிலமாக உத்தரப்பிரதேசம் 18-1-2019 அன்று அமல் படுத்தியுள்ளது.
  • இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியுள்ள முதல் மற்றும் இரண்டாவது மாநிலங்கள் முறையே குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 1901 ஆம் ஆண்டு முதலான இந்திய வானிலை வரலாற்றில், 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆறாவது மிகவும் குளிரான ஆண்டு எனவும், உலகளவில் நான்காவது மிக குளிரான ஆண்டாகவும் இருந்ததாக  இந்திய வானியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
  • கூ,தக : இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு முதல் மிகக் குளிரான ஐந்து ஆண்டுகளின் பட்டியல் வருமாறு, 2016 (+0.72 degree Celsius), 2009 (+0.56 degree Celsius), 2017 (+0.55 degree Celsius), 2010 (+0.54 degree Celsius) and 2015 (+0.42 degree Celsius)
 • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி (திருத்த) சட்டம், 2019’ (Right of Children to Free and Compulsory Education (Amendment) Act, 201) க்கு குடியரசுத்தலைவர் 10-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியதால் அன்று முதல் அச்சட்ட திருத்தம்  அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.  இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்,  ஐந்து மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கு சீரியமுறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.  ஒரு குழந்தை  இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், இரு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.  இடைநிலைக் கல்வி முடியும் வரையில், எந்த குழந்தையும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படலாகாது என்பவைகளாகும்.
 • 10வது, இந்திய ரப்பர் கண்காட்சி - 2019 (India Rubber Expo – 2019) 17-19 ஜனவரி 2019 தினங்களில் மும்பையில் நடைபெற்றது.
 • 'இந்தியாவின் முதல் லித்தியம் அயன் ஜிகா தொழிற்சாலையை (Lithium Ion Giga Factory) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிர்க்கல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited (BHEL)) மற்றும் LIBCOIN தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கவுள்ளன.  இதன் ஒட்டு மொத்த திறன் 30ஜிகா வாட் (GWh) ஆக இருக்கும் எனத் தெரியவருகிறது.
 • ஐ.என்.எஸ். கோஹஸா ( INS Kohassa ) :  வட அந்தமானிலுள்ள சிப்பூர் கடற்படை விமான தளம் (Naval Air Station (NAS) Shibpur)   ஐ.என்.எஸ். கோஹஸா ( INS Kohassa ) எனப் பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது. ‘கோஹஸ்ஸா’ எனப்படுவது , அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்துவரும்,  அருகிவரும் வெள்ளை நிற கடல் கழுகுவின் பெயர் ஆகும்.
 • 9 வது ”துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு 2019” (Vibrant Gujarat Global Summit-2019) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18-20 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.   இம்மாநாட்டில்,  உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் மேதகு திரு. ஷாப்கட் மிர்ஜியோயெவ் , மால்டா பிரதமர் டாக்டர் ஜோசஃப் மஸ்கட், செக் குடியரசின் பிரதமர் திரு. ஆன்ட்ரேஜ் பாபிஸ் மற்றும் டென்மார்க் நாட்டின் பிரதமர் திரு. லார்ஸ் லோக்கே ராஸ்முசேன் ஆகிய உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
 • இந்திய திரைப்படத்தின் தேசிய அருங்காட்சியகத்திற்கான (National Museum of Indian Cinema) புதிய கட்டடத்தை பிரதமர் மோடி, மும்பையில்  01.2019 அன்று  திறந்து வைத்தார்.
 • உன்னதி (UNNATI - Unispace Nanosatellite Assembly & Training programme) என்ற பெயரில் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) மூலம் நுண் செயற்கைக் கோள் தயாரிப்பதற்கான பயிற்சி திட்டம் பெங்களூருவில் 17-1-2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு சிறு செயற்கைக் கோள்களை உருவாக்குதல் பற்றிய பயிற்சி வழங்கவிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் , மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் பயிற்சியில், முதல் கட்டமாக, 17 நாடுகளிலிருந்து 30 நபர்கள் பங்கேற்கிறார்கள்.
 • தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டம் (Deendayal Disabled Rehabilitation Scheme (DDRS)) : 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் மறுவாழ்விற்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது கடந்த 1 ஏப்ரல் 2018 முதல் மறுசீரமைக்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டுவருகிறது.
 • மகள்களைக் காப்போம், மகள்களைக் கற்பிப்போம் திட்டம் (Beti Bachao Beti Padhao (BBBP) / Save the daughter, educate the daughter) : பிரதமர் மோடி அவர்களால் 22 ஜனவரி 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் குறைந்துவரும் குழந்தைகள் பாலின விகிதத்தை ( child sex ratio  (CSR))  மேம்படுத்துவதாகும்.  இதன்படி,  நாடெங்கிலுமுள்ள, குழந்தைகள் பாலின விகிதம் குறைவாகவுள்ள மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த திட்டமானது    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம்,  சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்களின் கூட்டு  ஒத்துழைப்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது குறப்பிடத்தக்கது.
 • குஜராத் மாநிலத்தில், எல்&டி நிறுவனத்தின் சார்பில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை பிரதமர் நரேந்திர மோடி 19-01-2019 அன்று தொடங்கி வைத்தார். "கே-9 வஜ்ரா' என்ற வகையிலான பீரங்கிகள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த பீரங்கிகள் தானாகவே நகர்ந்து செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தின்படி இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017-ஆம் ஆண்டில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்திய ராணுவத்துக்காக ரூ.4,500 கோடி மதிப்பில் 100 "கே-9 வஜ்ரா' பீரங்கிகளை எல்&டி நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.
  • குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஹஸிரா என்ற இடத்தில் இந்த ஆலை அமைந்துள்ளது. பீரங்கிகள் மட்டுமன்றி, எதிர்தாக்குதலுக்கான பிற தளவாடங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன. ஒப்பந்த விதிகளின்படி, வஜ்ரா பீரங்கிகள் 42 மாதங்களுக்குள்ளாக இந்திய ராணுவத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
  • முன்னதாக, பீரங்கிகளுக்கான தொழில்நுட்பத்தை பெறுவது தொடர்பாக தென்கொரியாவின் ஹான்வா நிறுவனத்துடன் எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • பீரங்கி விவரம்: வஜ்ரா பீரங்கி 50 டன் எடை கொண்டதாகும். இது 47 கிலோ எடை கொண்ட குண்டுகள் மூலம் 43 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்கும் வல்லமை உடையதாகும். இந்த பீரங்கி நாலா பக்கமும் திரும்பி தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் உடையது. மொத்தம் தயாரிக்க வேண்டிய 100 பீரங்கிகளில் ஏற்கெனவே 10 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 • வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் (Voter Helpline) மொபைல் செயலி : 'ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன்' என்ற பெயரில், அனைத்து தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய,   செயலியை மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. ஓட்டர் ஹெல்ப்லைன் - மொபைல் ஆப்'பில், வாக்காளர் அட்டை எண் அல்லது பெயர், தொகுதி விபரங்களை பயன்படுத்தி, எளிதாக, வாக்காளர் பட்டியல் விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.ஓட்டுச்சாவடி அமைவிடம், பாகம் எண், பாகத்தின் பெயர்கள், வரிசை எண் விபரங்கள் தெரிய வரும். தேர்தல் தேதி விபரத்தை வெளியிடவும், தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், எப்படி, யார், என்ன, எங்கு, எப்போது, ஏன் என்ற தலைப்புகளில், வாக்காளர்களின், 51 வகையான கேள்விகளுக்கு, பதில் பெறும் வகையில், 'மொபைல் ஆப்' வடிவமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், படங்களை, இதில் பார்க்க முடியும்.நாடு முழுவதும் நடக்கும், தேர்தல் நடவடிக்கை, ஒவ்வொரு வாக்காளரின் இல்லத்துக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், இந்திய தேர்தல் கமிஷனால், இந்த, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
 • பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. 

உலகம்

 • ஸ்வீடன் நாட்டின் பிரதமராக ‘ஸ்டீஃபன் லோஃப்வென்’ (Stefan Lofven) இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ‘குரூப்-77’ ( Group of 77 (G-77)) அமைப்பின் தலைமைப் பொறுப்பை 15-1-2019 அன்று முதல் பாலஸ்தீனம் ஏற்றுள்ளது
  • கூ.தக. : 1964 ல் 77 வளர்ந்துவரும் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஜெனீவா நகரில் தோற்றுவிக்கப்பட்ட ’குரூப்-77’  அமைப்பில் தற்போது, 134 வளரும் நாடுகள் உறுப்பினர்களாக உல்ளன.
 • கவி நீதியரசர் (“Poetic Justice”) என அழைக்கப்படும் ஆசிஃப் கோஷா , பாகிஸ்தான் நாட்டின் 26 வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தனது நீதிமன்ற தீர்ப்புகளில் பல்வேறு இலக்கியங்களை  குறிப்பிடுவதனால் ’கவி நீதியரசர்' எனவும் அழைக்கப்படுகிறார்.
 • உலகின் முதல், மனித உரிமைகளுக்கான பிரத்தியேக தொலைக்காட்சி சேனலை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் (International Observatory of Human Rights (IOHR)) தொடங்கியுள்ளது.
 • ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • உளவுத்துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக இந்திய - அமெரிக்கர் ராஜா கிருஷ்ணமூர்த்தி  நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் இந்த செல்வாக்கு மிகுந்த பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

 • இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே கலை மற்றும் கலாச்சாரத்துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு நல்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 18-1-2019 அன்று செய்யப்பட்டுள்ளது.
  • கூ.தக. மங்கோலியாவின் தலைநகரம் - உலான்பதார்(Ulaanbaatar) , தற்போதைய அதிபர் - கால்ட்மாகின் பட்டுல்கா (Khaltmaagiin Battulga), நாணயம் - மங்கோலியன் டோக்ரோக் (Mongolian tögrög)
 • 7 வது , ’ஏசியான் - இந்தியா சுற்றுலா அமைச்சர்கள் கூடுகை (ASEAN-India Tourism Ministers meeting), வியட்நாமின் ‘ஹா லாங் நகரில்( Ha Long City) 18-1-2019 அன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கெ.ஜெ.அல்ஃபோன்ஸ் அவர்கள் கலந்துகொண்டதுடன் இணை தலைவராகவும் செயல்பட்டார்.
 • இந்தியா-அமெரிக்க உத்தி சார் கூட்டு மன்றத்தின் தலைவர் (US-India Strategic Partnership Forum) - திரு. ஜான் சாம்பர்ஸ்  (John Chambers)
 • யுரேனியம் கொள்முதல் செய்வதற்காக இந்திய அரசு உஸ்பெகிஸ்தானுடன் ஒப்பந்தம் : இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  கஜகஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, நமீபியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியா யுரேனியத்தை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

 • HDFC Standard Life Insurance’ நிறுவனம் தனது பெயரை ’ HDFC Life Insurance ‘ என மாற்றம் செய்துள்ளது.
 • லாட்டரி சீட்டுகளின் மீது ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்துவதற்காக எட்டு மாநில அமைச்சர்களின் குழு ஒன்றை , மஹாராஷ்டிர நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவா (Sudhir Mungantiwa) தலைமையில்  ஜி.எஸ்.டி. கவுண்சில் அமைத்துள்ளது.
 • ரூ.20,000 மேல் உள்ள அசையா சொத்துகளை ரொக்கப் பரிவர்த்தனை மூலம் வாங்கினால், வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ரியல் எஸ்டேட், அசையா சொத்துகள் வாங்குவது உள்ளிட்ட துறைகளில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்க வருமான வரிச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் விதிகள், ஜூன் 1, 2015-இல் இருந்து கணக்கில் கொள்ளப்படவுள்ளது. அதன்படி, விவசாய நிலங்கள் போன்ற ரியல் எஸ்டேட் விஷயங்களில், பரிவர்த்தனை தொகை ரூ.20,000-க்கு மேல் இருந்தால் காசோலையாகவோ அல்லது மின்னனு வடிவத்திலோ தான் அந்த பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளப்படவேண்டும். இதன்மூலம், விதிகளை மீறி ரூ.20,000-க்கு மேல் இருக்கும் பணப்பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொண்டால், வருமான வரிச் சட்டப்பிரிவு 271டி-இன் படி ரொக்கப் பணத்தை பெறும் விற்பனையாளருக்கு அல்லது முன்பணமாக பெற்று அதனை ரொக்கமாக திருப்பிக் கொடுப்பவருக்கு ரொக்கத் தொகைக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரி அடுத்த மாதம் முதல் நோட்டீஸ் அனுப்பவுள்ளார். விற்பனையாளர், நிலத்தை பெறுபவர் என இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.

நியமனங்கள்

 • உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா பதவியேற்பு : கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 18-1-19 அன்று பதவியேற்றுக் கொண்டனர்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியம் குழு, கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்தது.
  • கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • உச்சநீதிமன்றத்துக்கு மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இவர்கள் இருவரும் புதிதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம், தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.

விருதுகள்

 • இந்திய அரசின் ‘காந்தி அமைதி பரிசு 2018’ (Gandhi Peace Prize for 2018) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யோகாய் சஷாகவா ( Yohei Sasakawa ) பெற்றுள்ளார்.  இவர், உலக சுகாதார அமைப்பின் தொழுநோய் ஒழிப்பிற்கான தூதுவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கூ.தக. : 2017 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு, கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி சேவை வழங்கி வரும் ‘ஏகல் அபியான்’ (EkalAbhiyan) எனப்படும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
 • ஜப்பான் பரிசு 2019 ( Japan Prize ) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரத்தன் லால் ( Dr. Rattan Lal ) க்கு அவரின், உயிரி தயாரிப்பு மற்றும் சுற்றுசூழல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
 • இந்திய அமெரிக்கர் குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது : அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த  கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு  "இன்டியானா' நாளிதழ் கெளரவித்துள்ளது.அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே வெள்ளையின மக்கள் காட்டிய  பாகுபாட்டை களைவதற்காக போராடிய ரோசா பார்க்ஸ் என்ற பெண்மணியின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்  

 • 16வது ‘டாடா மும்பை மாரத்தான் (Tata Mumbai Marathon) நிகழ்வின் (20 ஜனவரி 2019) விளம்பரத்தூதுவராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
 • இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டியில் ஏசி மிலனை வீழ்த்தி ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • Epsilon – 4 rocket’ ஏவுகணையின் மூலம் ஏழு செயற்கைக்கோள்களை ஜப்பான் நாடு விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
 • இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.  

Post a Comment

0 Comments