நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 31 January 2019

தமிழகம்
  • ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம்  அறிவித்துள்ளது.
  • இலங்கைத் தமிழ் எழுத்தாளர் .சாந்தனுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது  வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியின் பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த். இவரது நினைவாக சார்க் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது அறிவிக்கப்பட்டது. 
  • ஆரோக்கிய பாரத பயண திட்டத்தில் சிறந்த மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. மதுரை மற்றும் சிவகாசிக்கு சிறந்த மாவட்டத்துக்கான விருதும் கிடைத்திருக்கிறது.
    • கூ.தக. : மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினத்தை முன்னிட்டு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) சார்பில் கடந்த அக்டோபர் 2018 மாதம் ‘ஆரோக்கிய பாரத யாத்திரை’ எனும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ஒவ்வொரு மாவட்டமாக, மாநிலமாக கடந்து சென்றது. செல்லும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக உணவு பாதுகாப்புத்துறையும் பாதுகாப்பான உணவு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
  • சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை குறுகிய நாட்களுக்குள் தானாக பட்டியலிடும் நடைமுறை பிப்ரவரி 4-ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்த முறையின் மூலம் தாக்கல் செய்த 3 முதல் 7 நாட்களுக்குள் மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளன.
  • இந்தியாவின் முதல் புவியியல் குறியீடு பொருட்கள் விற்பனையகம்” (Geographical Indication (GI) store) மத்திய உள்நாட்டு விமான அமைச்சகத்தின் மூலம் கோவா டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் 29-1-2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • தென் இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான கூடுகை 2019 (South India MSME summit 2019) 17 ஜனவரி 2019 அன்று பெங்களூருவில் நடைபெற்றது.
  • எஃகு உற்பத்தியில் உலகளவில் ஜப்பானை வீழ்த்தி இந்திய இரண்டாவது இடத்தை 28-1-2019 அன்று அடைந்துள்ளது. உலகளவில் எஃகு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், 3,4, மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே ஜப்பான், அமெரிக்கா  மற்றும் தென்கொரியா நாடுகள் உள்ளத்யு குறிப்பிடத்தக்கது .
பொருளாதாரம்
  • ஹஜ் பயணத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியானது 18% த்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உலகம்
  • ஆபர்’ (‘Aber’) என்ற பெயரில் பொது டிஜிட்டல் பணத்தை (common digital currency )   ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி மத்திய வங்கி இணைந்து 29-1-2019 அன்று வெளியிட்டுள்ளன.
விருதுகள்
  • மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு காரட் பரிசு ‘ (Carnot prize) அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்   பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் இவ்விருது,  பியூஸ் கோயல் அவர்களின் மின்சாரத்துறையின் சீர்திருத்தங்கள், கிராமப்புற மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தந்தமை போன்ற நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
  • இந்தியாவின் மாலத்தீவு நாட்டிற்கான தூதுவராக சஞ்சய் சுதிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
  • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் (World Leprosy Eradication Day) - ஜனவரி 30 | மையக்கருத்து(2019) - வேறுபாடுகள், களங்கங்கள்,காற்புணர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வருவோம் (ending discrimination, stigma, and prejudice)
  • தேசிய தியாகிகள் தினம் (National Martyr’s Day or Sarvodaya Day) - ஜனவரி 30 (மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட தினம்)







Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!