நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 4

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. பொருத்துக (இந்தியாவின் அண்டைநாடுகள்)
    (1) பாகிஸ்தான் (a) வட மேற்கு
    (2) ஆப்கானிஸ்தான் (b) மேற்கில்
    (3) வங்காள தேசம் (c) கிழக்கு
    (4) நேபாளம், பூடான், சீனா (d) வடகிழக்கில்
    1. c d b a
    2. d b c a
    3. b a c d
    4. a b c d

  2. புகழ்பெற்ற மலை வாழிடங்களில் தவறாக இடம்பெற்றுள்ளது.
    1. சில்வாசா
    2. நைனிடால்
    3. குல்மார்க்
    4. பாகல்கம்

  3. தவறான பொருத்தம்
    1. பங்கார் - பழைய வண்டல்படிவு
    2. பாகர் - மென்மையான படிவுகள்
    3. காடர் - புதிய வண்டல்படிவு
    4. தராய் - சதுப்பு படிவு

  4. மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் கணவாய்களில் தவறாக இடம்பெற்றுள்ளது.
    1. தால்காட்
    2. போர்காட்
    3. பாலக்காட்டுகணவாய்
    4. செங்கோட்டை கணவாய்

  5. கீழ்கண்டவற்றில் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க
    1. கேரளா - பொன்னம்
    2. மத்திய பிரதேசம் - ஜீனம்
    3. ஒடிசா - பொடு
    4. அஸ்ஸாம் - ஜீம்

  6. பொருத்துக
    (1) காரிப்பயிர்கள் (a) நெல், சோளம், சணல், கரும்பு
    (2) ராபி பயிர்கள் (b) கோதுமை, புகையிலை, பருப்பு தாணியங்கள்
    (3) சையத் பயிர்கள் (c) பழங்கள், காய்கறிகள்
    (4) பணப்பயிர்கள் (d) கரும்பு, பருத்தி, சணல், தேயிலை
    1. a b c d
    2. d a c b
    3. d b a c
    4. a b d c

  7. இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு (ICAR)
    1. 1927
    2. 1928
    3. 1829
    4. 1929

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. நீலப்புரட்சி - கடல் பொருட்கள்
    2. மஞ்சள் புரட்சி - தானிய வகைகள்
    3. பொன் புரட்சி - பழங்கள் உற்பத்தி
    4. வெள்ளி புரட்சி - முட்டை

  9. கோடையில், வடகிழக்கு இந்தியாவில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்.
    1. வெப்பமண்டல பருவக்காற்று
    2. ஜெட் காற்று
    3. நார்வெஸ்டர்ஸ் (கால்பைசாகி)
    4. பின்னடையும் பருவக் காற்று

  10. பொருத்துக
    (1) ஆப்பிள் (a) கேரளா
    (2) கரும்பு (b) மேற்கு வங்காளம்
    (3) ரப்பர் (c) உத்திரபிரதேசம்
    (4) சணல் (d)இமாச்சல பிரதேசம்
    1. d c a b
    2. d b c a
    3. d b a c
    4. a b c d



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!