நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 1


  1. இந்தியாவில் எப்போதிலிருந்து பூஜ்ய நேரம் எனும் முன்னறிவிப்பின்றி கேள்வி கேட்பதற்கான நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    1. 1962
    2. 1963
    3. 1964
    4. 1952

  2. பாராளுமன்றக் கூட்டுத் தொடர் பற்றிய கருத்துகளில் தவறான பொருத்தம்
    1. பட்ஜெட் கூட்டத் தொடர் - (பிப்ரவரி – மே)
    2. மழைக்கால கூட்டத்தொடர் -(ஜீலை - செப்டம்பர்)
    3. குளிர்கால கூட்டத் தொடர் -(நவம்பர்- டிசம்பர்)
    4. இளவேனிற்கால கூட்டத் தொடர்-(ஜனவரி- மார்ச்)

  3. கீழ்கண்டவைகளில் தவறான பொருத்தம்
    1. பண மசோதா பற்றி கூறும் ஷரத்து - மக்களவை மட்டும்
    2. பாராளுமன்றத்தின் சுழி நேரம் - மாலை 5 மணிக்கு மேலான அலுவலர் நேரம்
    3. ஒரு வருடத்திற்கு எத்தனை முறை பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகின்றது - 3 முறை
    4. பட்ஜெட் பற்றி கூறும் ஷரத்து - 112

  4. பொருத்துக
    பொருள் ஷரத்து
    (a) லோக்சபா (1) 93
    (b) மக்களவை சபாநாயகர் (2) 81
    (c) பாராளுமன்ற கூட்டு கூட்டம் (3) 89
    (d) ராஜ்சபா தலைவர் (4) 108
    1. 1 2 3 4
    2. 2 3 4 1
    3. 2 1 4 3
    4. 3 4 3 1

  5. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. தற்போதைய மக்களவை சபாநாயகர் - மீராகுமார்
    2. தற்போதைய மாநிலங்களவை தலைவர் - வெங்கைய்யாநாயுடு
    3. மிக நீண்ட காலம் சபாநாயகராக பணிபயாற்றியவர் - பல்ராம் ஜாகர்
    4. சுதந்திர இந்தியாவின் முதல் சபாநாயகர் - ஜி.வி. மாவ்லாங்கர்

  6. பொருத்துக
    (a) மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு (1) இங்கிலாந்து
    (b) அரசு நெறிமுறைக் கோட்பாடு (2) இந்தியா
    (c) அடிப்படை உரிமைகள் (3) ரஷ்யா
    (d) அடிப்படை கடமைகள் (4) அமெரிக்கா
    (e) பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் (5) அயர்லாந்து
    1. 4 5 2 1 3
    2. 2 5 4 3 1
    3. 5 1 2 3 4
    4. 1 3 2 4 5

  7. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) அரசியலமைப்பின் பெரும் பகுதி இந்திய அரசு சட்டம் 1935ல் இருந்து எடுக்கப்பட்டது
    (2) நிர்வாகத்தின் சுதந்திர அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் அரணாக அமைந்துள்ளது.
    (3) இந்திய அரசு நிர்வாகம் மூன்றடுக்கு முறையைக் கொண்டுள்ளது
    1. 1,2 சரி, 3 தவறு
    2. 1,3 சரி, 2 தவறு
    3. அனைத்தும் தவறு
    4. 1,2,3 சரி

  8. “முகவுரை” பற்றி கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) முகவுரை ஜவஹர்லால் நேருவால் எழுதப்பட்டு, அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “குறிக்கோள் தீர்மானத்தை” அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
    (2) பெருபாரி (1960) ஒன்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் முகவுரையின் முக்கியத்துவத்தை ஏற்று கொண்ட போதிலும் அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல எனக் கூறியது.
    (3) கேசவானந்த பாரதி (1973) வழக்கில் உச்ச நீதிமன்றம் முந்தைய தீர்மானத்தை நிராகரித்து “” முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என தீர்ப்பளித்தது.
    (4) முகவுரை இதுவரை ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டது.
    1. 1,4 சரி, 2,3 தவறு
    2. அனைத்தும் சரி
    3. 1,2, சரி, 4 தவறு
    4. 1,2,3 சரி, 4 தவறு

  9. பொருத்துக.
    உள்ளடக்கம் பகுதிகள்
    (a) குடியுரிமை (1) IV
    (b) அடிப்படை கடமைகள் (2) XV
    (c) அடிப்படை உரிமைகள் (3) XX
    (d) அரசு வழிகாட்டு நெறிமுறைகள் (4) XVII
    (e) அரசியலமைப்பு திருத்தம் (5) XVIII
    (f) தீர்பாயங்கள் (6) IV-A
    (g) தேர்தல்கள் (7) II
    (h) அலுவல் மொழிகள் (8) III
    (i) நெருக்கடி நிலை வழிமுறைகள் (9) XIV-A
    1. 7 6 8 1 3 9 2 4 5
    2. 9 7 6 8 1 5 2 3 4
    3. 8 6 7 5 4 3 2 1 9
    4. 5 8 3 1 9 7 2 4 5

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கோபாலன் வழக்கு - 1950
    2. சங்கரி பிரசாத் வழக்கு - 1951
    3. பொம்மை வழக்கு - 1996
    4. மேனகா வழக்கு - 1978



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!