Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS
☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 23,24 February 2019

தமிழ்நாடு
 • வேலூர் மாவட்டத்திற்கு 'வெப்' ரத்னா விருது (Web Ratna – District) : கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த, வேலுார் மாவட்டத்திற்கு, 'வெப்' ரத்னா தங்க விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடந்த விழாவில், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை,வேலுார் மாவட்ட கலெக்டர் S.A. ராமனுக்கு (S.A. RAMAN)வழங்கினார்.
 • காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 22-2-2019 அன்று அடிக்கல் நாட்டினார்.  74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 393 கோடியே 74 லட்சம்   மதிப்பீட்டில்  இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
 • தூத்துக்குடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ள கடலோர காவல்படை மாவட்ட தலைமையகத்தை தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.  இந்த நிலையம், இந்தியாவின் 16-வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னையை அடுத்து இரண்டாவது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
 • ”www.tenancy.tn.gov.in” எனும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்ட நடைமுறைகளுக்கு தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது.  இந்த இணையதளத்தில்  சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இணைய சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், வாடகை அதிகார அமைப்பின் மூலம் ஒப்பந்தப் பதிவு எண் அளிக்கப்படும். இதன்மூலம், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • கூ,தக : மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வருவாய் கோட்ட அளவில், அதிகார அமைப்பு ஏற்படுத்தப்படும்.  அதனைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படுவார். சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்: இந்தப் புதிய சட்டப்படி, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகை விடுபவர் மூன்று மாத வாடகையை முன்பணமாகப் பெற முடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

 • தெலங்கானா மாநிலத்திலுள்ள 2 ஏக்கர் வரையில் விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, மத்திய அரசின் உதவித் தொகையை (ரூ.6000) தவிர்த்து, கூடுதலாக ரூ.10,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
 • ”குஷி” (Khushi - ஒடியா மொழியில் மகிழ்ச்சி என்று பொருள்படும்) எனும் திட்டத்தின் கீழ்  6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் 17.25 இலட்சம் வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.
 • ‘காலியா’ (KALIA - Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற பெயரில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.
 • நாட்டின், முதல் புல்லட் ரயில் திட்டம் - மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரையில் அமைக்கப்படவுள்ளது.
 • மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு பிப்ரவரி 26, 27 தேதிகளில் புது தில்லியில் நடக்கிறது.

உலகம்

 • ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் , ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி பணியாற்றினார், இவர்  அக்டோபர் 2018 ல்  தனது ராஜிநாமா முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 • "வேலாயத் 97” (Velayat 97) என்ற பெயரில் ஈரான் கடற்படையின் வருடாந்திர இராணுவப்பயிற்சி வளைகுடா பகுதியிலிருந்து இந்தியப்பெருங்கடல் பகுதி வரையில் நடைபெற்றது.
 • சூடான் நாட்டில் வரும் ஓராண்டு முழுவதுமான அவசர நிலைப் பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் ஃபசிர் 22-2-2019 அன்று அறிவித்துள்ளார்.
 • ”RTGS dollar” எனும் புதிய கரன்சியை  ஜிம்பாவே நாடு அமல்படுத்தியுள்ளது.
 • சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் வருகிற ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
 • உலகின் பணக்கார விலங்கு : பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வசித்துவரும்  ‘சவ்பெட்’ என பெயர்  பெண் பூனை ரூ.1,400 கோடி சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார விலங்கு எனும் பெருமையைப் பெற்றுள்ளது.  உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட் (85) சமீபத்தில் மரணமடைந்துள்ளார். பிரான்ஸில் வசித்து வந்த இவர் தனது உயிலில்  தனது சொத்தில் ஒரு பகுதியை தனது செல்ல வளர்ப்பு  பிராணியான ‘சவ்பெட்’ என பெயர்  பெண் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
 • 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட “பெர்னாண்டினா”  என்று அழைக்கப்படும் ராட்சத ஆமை இனம்   காலபோகோஸ் தீவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • ’பெரிஷீட்’ (“Beresheet”) என்ற பெயரில் செயற்கைக் கோளை இஸ்ரேல் நாடு நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்த செயற்கைக் கோளானது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம்  ஏவப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • சிந்து நதி ஒப்பந்தம் 1960 -ன் தற்போதைய நிலைமை :
  • சிந்து நதி அமைப்பானது, சிந்து நதி, ஜீலம், செனாப், ரவி, பீயஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.  இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளினால் பெருமளவு தண்ணீரும், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் சிறிய அளவு தண்ணீரும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
  • 1960 ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சிந்துநதி ஒப்பந்தத்தின் கீழ் ராவி, சட்லஜ் மற்றும் பியாஸ் (கிழக்கு ஆறுகள்) ஆகியற்றின் மூலம் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF)    இந்தியாவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டது.  135 மில்லியன் ஏக்கர் அடி (MAF) பரப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
  • மேலும், மேற்கத்திய நதிகளில் நீர்மின்சக்தி திட்டங்களை அமைப்பதற்கும் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை :
 • இந்தியாவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கிழக்கத்திய ஆறுகளை சிறப்பாகப் பயன்படுத்தும் வண்ணம் சட்லஜ் ஆற்றின் குறுக்கே  ‘பக்ரா அணைத் திட்டமும்’ , பீயஸ்  ஆற்றின் மீது ‘போங்’ மற்றும் ‘ பாண்டோ’ அணைகளும், ராவி ஆற்றின் குறுக்கே ‘தேய்ன்’ அணையும் கட்டப்பட்டுள்ளன.   இவற்றுடன் பீயஸ் - சட்லஜ் இணைப்பு , மதோபூர்  - பீயஸ் இணைப்பு , இந்திரா காந்தி நாகர் திட்டம் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தியாவிற்உ வழங்கப்பட்டுள்ள கிழக்கு ஆறுகளின் பங்கில் 95% தண்ணீர் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும்  ராவி நதியிலிருந்து   உதிரியாக பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி இந்தியாவின் பயன்பாட்டிற்கு மாற்றுவதற்காக   ஷாபுர்காண்டி திட்டம் (Shahpurkandi project)  ,  உஜ் பன்னோக்கு திட்டம் (Ujh multipurpose project) , இரண்டாவது ராவி - பீயஸ் இணைப்பு திட்டம் (2nd  Ravi Beas link below Ujh) ஆகியவைச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.  ஆதாரம் : http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1565906
 • இந்தியா - ஏசியான் பிராந்திய கடலோர பாதுகாப்பு மாநாடு 2019 (Regional Maritime Safety Conference 2019) 19-20 பிப்ரவரி 2019 தினங்களில் மும்பையில் நடைபெற்றது.
 • அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் ‘மவுரிசியோ மாக்ரி’ (Mauricio Macri) மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக 17-19 பிப்ரவரி 2019 தினங்களில் இந்தியா வருகை புரிந்தார்.

பொருளாதாரம்

 • புதிதாகத் தொழில் துவங்குவோருக்கான 'ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் விவரம் : புதுமையான தொழில் வாய்ப்புகளை ஆதரித்தால், பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்ற நோக்கத்தில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு, 2016 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. தற்போது, 'ஸ்டார்ட அப்' கம்பெனிகளுக்கான விதிகளில், தளர்வு செய்துள்ளது. புய விதிகளின் படி,  ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தியாவில், ஏழு ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பது, 10 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.  ஆண்டு விற்பனை, 25 கோடி என்பது, 100 கோடியாக மாறியிருக்கிறது. 

முக்கிய தினங்கள்

 • உலக சிந்தனை தினம் (World Thinking Day ) - பிப்ரவரி 22  | மையக்கருத்து (2019) - தலைமைத்துவம் (Leadership)

விருதுகள்

 • ’ஸ்வஸ்த் இம்மியூனைஸ்டு இந்தியா’ (Swasth Immunised India) திட்டத்திற்கான விளம்பர தூதுவராக கரீனா கபூர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள  ’ஸ்வஸ்த் இம்மியூனைஸ்டு இந்தியா’ திட்டமானது, 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நோய் எதிரிப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக   நியூஸ்18 ஊடக நிறுவனம் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் (Serum Institute of India) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்டுள்ள பரப்புரையாகும்.

விளையாட்டுக்கள்

 • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் யூத் டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
 • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா உலக சாதனை : ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 252.9 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று  புதிய உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்பு சீனாவின் ஷாவ் ரௌஜு 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே உலக சாதனையாக இருந்தது.
 • புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியில், காலிக்கட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி வென்றுள்ளது.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments