-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 25, 26 February 2019

நடப்பு நிகழ்வுகள் 25, 26 பிப்ரவரி 2019

தமிழ்நாடு

 • ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் 106 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 81 ஏக்கர் நிலப்பரப்பில் பின்னலாடை தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, இந்த தொழிற்பூங்காவின் முதல் தொழிற்சாலை 25-2-2019 அன்று அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
 • ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள தமிழர் : ஆஸ்கர் விருது 2019 பெற்ற `period. end of sentence'  என்ற குறும்படத்தில்    கடந்த பல வருடங்களாகக் குறைந்த விலையில் பெண்களுக்கான நாப்கின்களைத் தயாரித்து வரும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம்  நடித்துள்ளார். 

இந்தியா

 • 14 வது விவசாய அறிவியல் மாநாடு (Agricultural Science Congress ) , ‘விவசாய மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள்’ (Innovations for Agricultural Transformation) எனும் மையக்கருத்தில் 20-23 பிப்ரவரி 2019 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
 • நாட்டிலேயே முதல் மாநிலமாக , பீகார் மாநிலத்தில் மது கடத்தலைச் சோதனையிட்டு கண்டுபிடிப்பதற்காக நாய்கள் படையினை  பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • ரூ.300 கோடி மதிப்பிலான ‘பெண்கள் வாழ்வாதார பத்திரங்களை’ (Women’s Livelihood Bond) உலக வங்கி, ஐ.நா. பெண்கள் அமைப்பு (United Nations Entity for Gender Equality and the Empowerment of Women(UN Women))  மற்றும்  இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI)) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.  இந்த திட்டத்தின் கீழ்,  இந்தியாவைச் சேர்ந்த  விவசாய , உணவு மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள்  ரு.50,000 முதல் ரூ.3 இலட்சம் வரையில்  13 % - 14%  வட்டியில் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும்.
 • ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ (Rail Drishti Dashboard) இணையதளம் : ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ‘ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ (raildrishti.cris.org.in) என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் 25-2-2019 அன்று  தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தை சாதாரண கம்ப்யூட்டர்கள், லேப்-டாப், மொபைல்போன், டேப்லட் என அனைத்து சாதனங்கள் மூலமாகவும் பயன்படுத்த முடியும். இதில், ரெயில்வேயின் வருமானம், வளர்ச்சி திட்டங்கள், பயணிகள் தெரிவித்த குறைகள், தீர்வுகள், பி.என்.ஆர். நிலவரம், விற்கப்பட்ட டிக்கெட் எண்ணிக்கை உள்ளிட்ட சேவைகளை எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் அறியலாம். ஒரு குறிப்பிட்ட ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். உணவு ‘ஆர்டர்’ செய்த பிறகு, ஐ.ஆர்.சி.டி.சி. சமையல் கூடங்களில் உணவு தயாராவது, பார்சல் போடப்படுவது ஆகியவற்றை நேரலையில் காணலாம்.
 • நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்துக்கான புதிய கட்டுப்பாடுகளை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி,
  • ஓர் உயர் கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், அந்தக் கல்வி நிறுவனம் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
  • தொடர்ந்து மூன்று சுற்றுகளிலும் 3.26 நாக் (தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சில்) புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
  • பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக இருந்தால், அங்கு வழங்கப்படும் படிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு படிப்புகளுக்கு என்பிஏ (தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், தேசிய உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆர்.எப்) ஒட்டுமொத்த தரவரிசையில் 100 ரேங்க்குகளுக்கு உள்ளும், குறிப்பிட்ட பிரிவு தரவரிசைப் பட்டியலில் 50 ரேங்க்குகளுக்குள்ளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • ஆசிரியர் - விகிதாசாரம் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்கவேண்டும்.
  • குறிப்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனத்தின் விரிவான திட்ட அறிக்கையையும், ஐந்தாண்டு திட்ட விவரத்தையும் கல்வி நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
 • பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக ‘1905’ எனும் இலவச தொலைபேசி அழைப்பு என்ணை உத்தரக்காண்ட் மாநில அரசு 23-2-2019 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
 • லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகள் பராமரிக்கும் உரிமையை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
 • ரூ.75,000 கோடியில் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தை உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் 24 பிப்ரவரி 2019 அன்று பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
  • 2 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித்தொகையாக, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படவுள்ளது. முதல் தவணைத் தொகையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பரிமாற்ற முறையில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
 • ஆர்டிஐ சட்டத்தின்கீழ் வாக்குப்பதிவு இயந்திரமும் ஒரு தகவல்தான்: தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ், வாக்குப்பதிவு இயந்திரமும் ஒரு தகவல்தான்; தேர்தல் ஆணையத்திடமிருந்து அதனை கோரி விண்ணப்பிக்க இயலும்' என்று மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

 • சூடான் நாட்டின் பிரதமராக மொஹமது தாகிர் ஆயாலா (Mohamed Tahir Ayala) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ”கோப்ரா கோல்டு” (Cobra Gold) என்ற பெயரில் 29 நாடுகள் பங்கு பெற்ற பன்னாட்டு இராணுவ ஒத்திகை தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. ஆசியா பசுபிக் பகுதி நாடுகளின்  இந்த கூட்டு இராணுவ ஒத்திகையை அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகள் இணைந்து நடத்தின.  இந்திய இராணுவமும் இந்த பயிற்சியில் பங்கேற்றது.   இப்பயிற்சியில் , இந்தியா முதல் முறையாக ‘பார்வையாளர்’ (‘Observer Plus) அந்தஸ்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 • சவுதி அரேபியா நாட்டின் முதல் பெண் தூதராக அந்நாட்டின் இளவரசியான ரீமா பிண்ட் பாண்டர் அல் சவுத் (அமெரிக்காவுக்கான தூதராக) நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

 • ’இந்திய திருவிழா’ ( ‘Festival of India’ ) ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் கலாச்சார நிகழ்வு நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் 19 பிப்ரவரி 2019 அன்று தொடங்கியது.  இந்த நிக்ழ்வின் நோக்கம் இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்க்கிடையேயுள்ள ஒற்றுமையை  இளைஞர்களிடையே கொண்டு சேர்ப்பதாகும். 

பொருளாதாரம்

 • வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் : புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக, ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இதேபோல், குறைந்த விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.மேலும், குறைந்த விலை வீடுகளுக்கான வரையறையையும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றியுள்ளது. அதன்படி, மாநகரங்களில் 600 சதுர மீட்டர் பரப்பளவிலும், சிறு நகரங்களில் 900 சதுர மீட்டர் பரப்பளவிலும், ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், குறைந்த விலை வீடுகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
 • CBIC - Central Board of Indirect Taxes and Customs (மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்)

விருதுகள்

 • 2015,2016,2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான ’காந்தி அமைதி விருது’ (Gandhi Peace Prize) பெறுவோர் விவரம்,
  • 2015 - விவேகானந்தா கேந்திரா, கன்னியாகுமரி (Vivekananda Kendra, Kanyakumari)
  • 2016 - அக்‌ஷய பாத்ரா தொண்டுநிறுவனம் மற்றும் சுலாப் இண்டர்நேசனல் அமைப்பு (Akshaya Patra Foundation and Sulabh International) 
  • 2017 - ஏகல் அபியான் தொண்டுநிறுவனம் (Ekal Abhiyan Trust)
  • 2018 - ஷ் யொஹாய் சஷாகவா (Sh Yohei Sasakawa)
 • ஆஸ்கர் விருதுகள் 2019 : (நன்றி : தினமணி)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 91-வது ஆஸ்கர் விருது விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரம் வருமாறு,
 • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை "இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்" படத்திற்காக ரெஜினா கிங் பெற்றுக்கொண்டார்.
 • சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஃபிரீ சோலோ(FreeSolo)' படத்திற்காக எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த ஒப்பனைக்கான விருது: 'வைஸ்' படத்திற்காக அதில் பணியாற்றிய கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது: 'பிளாக் பேந்தர்' படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. அதே படம் தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றது.
 • சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது: 'ரோமா' படத்திற்காக அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: 'போகிமியான் ரஃப்சோடி' படத்திற்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: 'போகிமியான் ரஃப்சோடி' படத்திற்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது: மெக்சிகோ நாட்டின் 'ரோமா' படத்திற்காக அதன் இயக்குனர் அல்போன்சோ கியுரான் பெற்றுக் கொண்டார்.
 • சிறந்த ஒலி கலவைக்கான விருது: ”போகிமியான் ரஃப்சோடி” படத்திற்காக பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: அல்போன்சோ கியுரானுக்கு ரோமா படத்திற்காக பெற்றார்
 • சிறந்த படத்தொகுப்புக்கான விருது: 'போகிமியான் ரஃப்சோடி' படத்திற்காக ஜான் ஓட்மேனுக்கு வழங்கப்பட்டது.
 • துணை நடிகருக்கான விருது: கிரீன் புக் படத்திற்காக நடிகர் மஹெர்ஷாலா அலிக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது: 'ஸ்பைடர் மேன் - இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்' படத்திற்காக பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ராட்னி ரோத்மேன், பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது: பாவோ படத்திற்காக டோமி ஷீ, பெக்கி நீமேன்-காப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது: ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் வரும் "ஷேலோ" பாடலுக்காக லேடி ககா, மார்க் ரான்சன், அந்தோணி ரொசாமெண்டோ, ஆண்ட்ரூ வையாட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
 • சிறந்த திரைக்கதைக்கான விருது: "கிரீன் புக்" படத்திற்காக நிக் வல்லேலொங்கா, பிரியான் கியூரி, பீட்டர் ஃபாரெலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான விருது: "ஸ்கின்" படத்திற்காக கை நேட்டிவ், ஜேமி ரே நியூமேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது: "ஃபர்ஸ்ட் மேன்" படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் உள்ளிட் 4 பேருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த பின்னணி இசைக்கான விருது: "பிளாக் பேந்தர்" படத்திற்காக லுட்விக் கொரான்சன்னுக்கு வழங்கப்பட்டது. வசூலில் சாதனை படைத்த "பிளாக் பேந்தர்" படத்துக்கு ஏற்கனவே, சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என இரு விருதுகளை வென்றுள்ளது. இதுவரை 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
 • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது: "பிளாக் கிளான்ஸ்மேன்" படத்திற்காக சார்லி வாச்செல், டேவிட் ராபிநோவிட்ஸ், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது: சிறந்த படமாக "கிரீன் புக்" தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏற்கனவே 2 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3-வது விருதை வென்றுள்ளது.
 • சிறந்த இயக்குநர் விருது: சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குநர் அல்போன்சோ குவாரன் வென்றுள்ளார்.
 • சிறந்த நடிகைக்கான விருது: தி ஃபேவரைட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஒலிவியா கோல்மேன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
 • சிறந்த நடிகருக்கான விருது: 'போகிமியான் ரஃப்சோடி' என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரமி மாலெக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
 • சிறந்த பாடலுக்கான விருது: ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் வரும் "ஷேலோ" பாடலுக்காக லேடி ககா, மார்க் ரான்சன், அந்தோணி ரொசாமெண்டோ, ஆண்ட்ரூ வையாட் ஆகியோருக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுக்கள்  

 • ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் (Asian Hockey Federation)   ‘2018 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது’  (2018 Player of the Year award) இந்தியாவைச் சேர்ந்த  மன்பிரீத் சிங்கிற்கும், ’2018 ஆம் ஆண்டின்  வளரும் விளையாட்டு வீரர் விருது’ (Rising Player of The Year) லால்ரெம்சியாமி (Lalremsiami) க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (Wrestling Federation of India (WFI)) தலைவராக பிரிஜ் பூசன் சரண் (Brij Bhushan Sharan)  மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி                      (International Olympic Committee (IOC)) தடை செய்துள்ளது.   தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு ( புல்வாமா பயங்கரவாத தாக்கலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வண்ணம்)  இந்திய அரசு விசா மறுத்ததையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் புதிய சாதனையுடன் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் 16 வயதே ஆன இந்திய வீரர் செளரவ் செளதரி. இதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். 


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.