நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 11 January 2020

TNPSC Current Affairs 11-01-2020

தமிழ்நாடு

  • கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்,
  • தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு (Tamil Nadu Fisheries University) - தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU)) எனவும்,     தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு (Tamil Nadu Music and Fine Arts University),  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம்  (Tamil Nadu Dr. J.Jayalalithaa Music and Fine Arts University (TNMFAU) எனவும் பெயர்மாற்றம் செய்வதற்கான  மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் 9-1-2020 அன்று நிறைவேற்றப்பட்டன.

இந்தியா

  • உறவினர்களின் உதவி இல்லாமல் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களுக்கு வீட்டிற்கே ரேசன் மளிகை பொருட்களை தேடி சென்று வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • நாட்டில் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் : தேசிய குற்ற பதிவு ஆணையம் புள்ளி விவரங்களின் படி 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 152 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது நாட்டிலே மிக அதிகமானது ஆகும். தமிழகத்தை தொடர்ந்து மராட்டியம்  (135), உத்தரபிரதேசம் (127) ஆகியவை உள்ளன.
  • குடியுரிமை திருத்தச் சட்டம் 10 ஜனவரி 2020  முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதே இந்த திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
  • அரசியலமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா : மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
    • எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், வரும் ஜனவரி 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
    • இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப்பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.
  • 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய இணையதள ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) 10-01-2020 அன்று புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் தொடங்கப்பட்டது.
  • cybercrime.gov.in எனப்படும் ‘தேசிய இணையதள குற்றங்கள் ரிப்போர்டிங் போர்ட்டல் (National Cyber Crime Reporting Portal ) 10-01-2020 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால்  நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது. இந்த இணையதள சேவையின் மூலம் பொது மக்கள்  இணையதள குற்றங்கள் தொடர்பான  புகார்களை அளிக்கலாம்.       
  • தேசிய பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் (National Mission for Safety of Women (NMSW)) கீழ் நாடு முழுவதும் 1023 சிறப்பு துரித நீதிமன்றங்கள் (‘fast-track special courts)  அமைக்கப்படவுள்ளன.  24 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் அமைப்பக்கடும் இந்த துரித நீதிமன்றங்களின் மூலம் நாடு முழுவதும்  தேங்கியுள்ள 1.60 இலட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைக் குற்றங்களை விசாரிக்கவுள்ளன.
  • கார்பன் வெளியீட்டை குறைத்ததற்கான சர்வதேச அங்கீகாரத்தை இந்தியாவின்  நான்கு சர்வதேச விமான நிலையங்கள் பெற்றுள்ளன. அவையாவன.
    • நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் - மேற்கு வங்கம்
    • பிஜீ பட்நாயக் சர்வதேச விமான நிலையம் - ஒடிஷா
    • லால் பஹதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் - உத்தரப்பிரதேசம்
    • திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் - கேரளா
  • 23 வது, தேசிய இளைஞர் திருவிழா 2020 (National Youth Festival-2020) 12-16 ஜனவரி 2020 தினங்களில் ‘FIT YOUTH FIT INDIA’ என்ற மையக்கருத்தில்    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறுகிறது. 
  • தெற்கு மத்திய ரயில்வேயின் (South Central Railways)  முதல்  சூரிய சக்தியினால் இயங்கும் பிரிவு எனும் பெருமையை  ‘நந்தியால் - யெர்ரகுண்ட்லா பிரிவு (Nandyal-Yerraguntla section) பெற்றுள்ளது.  இந்த பிரிவின் கீழுள்ள 8 இரயில் நிலையங்களும், அவற்றின் மின் தேவையை சூரிய சக்தி மூலம் எதிர்கொள்கின்றது குறிப்பிடத்தக்கது.
  • உலகின் மிக உயரமான இரயில்வே பாலமான காஷ்மீரில் அமைக்கப்படும் ‘சீனப் இரயில்வே பாலம் (Chenab bridge)  டிசம்பர் 2021 ல் நாட்டிற்கு அற்பணிக்கப்படவுள்ளது.  இந்த திட்டத்தை ‘கொங்கன் இரயில்வே’ (Konkan railway) செயல்படுத்தி வருகிறது.  இந்த இரயில்வே பாலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள  ஈஃபிள் டவரை விட 35 மீட்டர் அதிக உயரமுள்ளதாக இருக்கும்.
  • சுதந்திர போராட்ட வீரர் ‘அஷ்ஃபாகுல்லா கான் (Ashfaqullah Khan) பெயரில்  உயிரியல் பூங்கா உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
  • அம்மா வாடி திட்டம் (Amma Vodi scheme) என்ற பெயரில் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக ஏழைத் தாய்மார்களுக்கு ஆண்டிற்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தை  ஆந்திரமாநில அரசு அறிவித்துள்ளது.  இம்மாதிரியான திட்டம் அமல்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவிடம் இருந்த 15 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.106 கோடி) மதிப்புள்ள 500 பேருந்துகளை இலங்கை வாங்க உள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினா்கள் என்ற அந்தஸ்தை இளவரசா் ஹாரியும், அவரது மனைவி மேகன் மாா்க்கலும் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

பொருளாதாரம்

  • எச்.டி.எஃப்.சி வங்கி (Housing Development Finance Corporation Limited (HDFC)) அப்பொல்லோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் (Apollo Munich Health Insurance) நிறுவனத்தை கையகப்படுத்தி, அதற்கு, எச்.டி.எஃப்.சி எர்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் லிமிடெட் (HDFC ERGO Health Insurance Ltd) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக இந்தி மொழி தினம் (World Hindi day) - ஜனவரி 10

விருதுகள்

  • முதலாவது ‘ முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய விருது (Muppavarapu Venkaiah Naidu National Award for Excellence)  எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும்,    ‘முப்பரபு தேசிய சமூக சேவை விருது’   (Muppavarapu National Award for Social Service)  குட்டா .முனிரத்தினம் (Gutta Muniratnam)  என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அறிவியல் தொழில்நுட்பம்

  • உலகின் முதலாவது 5G கணினி - “யோகா 5G” : லினோவா கூட்டு நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட  “யோகா 5G”  என்ற கணிணி, உலகின் முதலாவது 5G கணிணியாக கருதப்படுகிறது.

விளையாட்டு

  • ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்ட வூ ஷு : சீனாவின் வூ ஷு, 4ஆவது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. வூ ஷு விளையாட்டுப் போட்டி, முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ளது இதுவே முதன்முறை ஆகும்.  ஸ்வீட்சர்லந்து லோசங் நகரில்  நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் செயற்குழுவின் கூட்டத்தில் இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாவது கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகள் அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் 10 - 22 ஜனவரி 2020 தேதிகளில் நடைபெறுகின்றன.
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளின்    நான்கு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!