நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Group I & II 2020 Preliminary Exams Book List for Self Preparation (Tamil Medium - New Syllabus)


  பள்ளிப் பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரையில், 6 முதல் 12 வரையிலான பழைய மற்றும் புதிய புத்தகங்களுக்கு சம முக்கியத்துவம் கொடுத்து படிப்பது சிறந்தது.
  6-12 வரையிலான புதிய மற்றும் பழைய புத்தகங்களில்  எந்தெந்தப் பகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற விவரங்கள் எங்கள் TestSchedule   ல் வழங்கப்பட்டுள்ளன.

 அலகு 1 : பொது அறிவியல்
6-12 வரையிலான பாடப்புத்தகங்கள். (6 முதல் 10 வரையிலான அறிவியல் பகுதிகள் அனைத்தையும் படிப்பது நல்லது. 11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்  TNPSC பாடத்திட்டத்திற்கேற்ப தெரிந்தெடுத்து படிக்கவும்.)

அலகு  2 : நடப்பு நிகழ்வுகள்
  • தினமணி, தி இந்து நாளிதழ்கள்
  • www.tnpscportal.in  நடப்பு நிகழ்வுக் குறிப்புகள்

அலகு  3 : இந்தியாவின் புவியியல்
6 – 10 சமூக அறிவியல் புத்தகங்களிலுள்ள புவியியல் பாடப்பகுதிகள், 11-12 புவியியல் புத்தகங்கள்.

அலகு  4 : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள் (எந்தெந்த பகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற விவரத்திற்கு  , Test Schedule   பார்க்கவும்.)

இந்திய மற்றும் தமிழக பண்பாடு : 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய)  புத்தகம் முழுவதும்,  12 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் புதிய மற்றும் பழைய புத்தகங்கள்

அலகு 5 : இந்திய ஆட்சியியல்
  • 6-10 வரையிலான குடிமையியல் பகுதிகள், 11, 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகங்கள்.
  • இந்திய அரசியலமைப்பு - டாக்டர் க வெங்கடேசன்

அலகு 6 :  இந்தியப் பொருளாதாரம்
6-10 வரையிலான பொருளாதாரப் பகுதிகள் மற்றும் 11,12 ஆம் வகுப்பு பொருளாதாரம் புத்தகங்கள்

அலகு 7 :  இந்திய தேசிய இயக்கம்
  • 6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள்
  • இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு  - க.வெங்கடேசன் 

அலகு 8 :  தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் தமிழ் இலக்கிய வரலாறு   
  • 6-12 வரையிலான  புதிய மற்றும் பழைய தமிழ்  புத்தகங்களிலிருந்து (இலக்கணம் தவிர்த்து)  அனைத்து இலக்கிய  பகுதிகளும்.   மற்றும்  பின்வரும் ஏதேனும் ஒரு தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம்.  
  • தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – தேவிரா   (அல்லது)  தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்   (Free PDF available in www.TamilDigitalLibrary.In)     
  • தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் 
    • 6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள்
    • 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய)  புத்தகம்  & 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் புதிய மற்றும் பழைய புத்தகங்கள்
    • முற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க. வெங்கடேசன்    
    • தற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன் (மேற்கண்ட இரு புத்தகங்களையும் www.tnpscexambooks.com இணியதளத்தின் மூலம் வாங்கலாம்)

அலகு 9 :  தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழக அரசின் பள்ளிப் புத்தகங்கள் (குறிப்பிட்ட பகுதிகள்) , தமிழ அரசின் பல்வேறு துறை கொள்கை விளக்க குறிப்புக்கள், அரசு இணையதளங்கள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள்.

அலகு 10 :  திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

  • 6 முதல் 10 வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளி கணித பாடப் புத்தகங்களில்,  TNPSC திறனறிவு பாடத்திட்டத்திலுள்ள பகுதிகள் மட்டும். 
  • கணியன் (பாகம் 1,2) புத்தகங்கள் 
  • டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை முடிந்த வரை பயிற்சி செய்வது அவசியம்.

சாதாரணப் போட்டியாளருக்கும் வெற்றி பெறுபவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு “பயிற்சியே”!     

உங்களால் இயன்ற வரையில் முந்தைய குரூப் 1, 2  மற்றும் பிற துறைசார்ந்த (Degree Standard) தேர்வுகளின்   வினாத்தாள்களைப் பயிற்சி செய்யுங்கள். மேலும், TNPSC புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட மாதிரித் தேர்வுகளையும் உங்களால் இயன்றவரையில் பயிற்சி செய்யுங்கள்.

குறிப்பு : உங்களிடம் மேற்கூறிய அனைத்து பள்ளிப்பாடப் புத்தகங்களும் இல்லையென்றாலும்      கவலைப்படத் தேவையில்லை,  தமிழ் நாடு அரசின் புதிய பள்ளிப் பாடப்புத்தகங்களை http://tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்திலிருந்தும், பழைய புத்தகங்களை  https://www.tntextbooks.in/p/school-books.html இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம்  செய்து, படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். 


Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: hi sir...Today only surfed d website ..your gk materials very much helpful for exam prepartion.thanks for efforts sir..i got 165 in group2 last exam without preparation..i need general english and other material in english medium...you have any materials or books for reference to read..
    hi sir...Today only surfed d website ..your gk materials very much helpful for exam prepartion.thanks for efforts sir..i got 165 in group2 last exam without preparation..i need general english and other material in english medium...you have any materials or books for reference to read..
  2. Profile
    பெயரில்லா
    Said: Tamilnadu school books maaradhunala,,language syllabus mariduma indha muraye? Or late aaguma?
    Tamilnadu school books maaradhunala,,language syllabus mariduma indha muraye? Or late aaguma?
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!