நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 10 January 2020

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 10-01-2020

Download PDF

தமிழ்நாடு
  • தற்கொலையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு (National Crime Records Bureau (NCRB)) வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தற்கொலையில்  மகாராஷ்டிரா முதலிடத்தையும், மேற்குவங்கம் மூன்றாம் இடத்தையும்,  மத்திய பிரதேசம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிக்கை இந்தி, சமஸ்கிருதம், உருது உட்பட  24  மொழிகளில்  தமிழக அரசின் தொல்லியல் துறையின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளன.
  • எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாப்பாத்தி 61 பிரதமரிடம் 'கிரிஷி கர்மான்' என்ற முன்னோடி விவசாயி விருதைப் பெற்றுள்ளார்.
  • சென்னை- அந்தமான் இடையே ரூ.1, 224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் 9-1-2020 அன்று தொடக்கி வைத்தாா்.
    • அந்தமான்- நிகோபா் தீவுகளுக்கு இணைய தள வசதியை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து போா்ட் பிளேயா் வழியாக கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கப்பட உள்ளது.
    • பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.1,224 கோடி செலவிலான இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போா்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், காா் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்கப்பட உள்ளன.
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் நடத்தப்படும் புத்தகக் காட்சிக்கு இனி வரும் ஆண்டுகளில் தமிழக அரசு சாா்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி 9-1-2020 அன்று சென்னையில் 43 -ஆவது புத்தகக் காட்சியை  தொடக்கி வைத்த போது அறிவித்துள்ளார்.

இந்தியா

  • ஹென்லே பாஸ்போர்ட் பட்டியல் 2020” (Henley Passport Index 2020) ல் இந்தியா 84 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில்  முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான்(1), சிங்கப்பூர்(2) மற்றும்  ஜெர்மனி (3) & தென் கொரியா (3)  ஆகியவை பெற்றுள்ளன.
  • பொருளாதார நுண்ணறிவு அமைப்பு (Economist Intelligence Unit) வெளியிட்டுள்ள உலகின் மிகவும் வேகமாக வளரக்கூடிய  முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன,   அதாவது, கேரளாவைச் சேர்ந்த  மலப்புறம் முதலிடத்தையும், கோழிக்கோடு நான்காம் இடத்தையும், கொல்லம் 10 வது இடத்தையும் பெற்றுள்ளன.
  • 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருளாதாரக் குற்றங்களில் மிக அதிக அளவு பொருளாதாரக் குற்றங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளதாக  தேசிய குற்ற ஆவண அமைப்பின் ( National Crime Record Bureau  (NCRB)) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பட்டியலில் 2,3,4 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பீகார் மாநிலங்கள் பெற்றுள்ளன.
    • மேலும், 2018 ஆம் ஆண்டில், பெண்களுக்கெதிரான குற்றங்களிலும் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • மாதவ்பூர் மேளா (Madhavpur Mela) என்ற பெயரிலான பாரம்பரிய  வருடாந்திர திருவிழா  குஜராத் மாநிலம் போர்பந்தர் மாவட்டத்தில் 2 ஏப்ரல் 2020 ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ளது.   கிருஷ்ணர் மற்றும் ருக்மணி   அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து குஜராத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் நினைவாக அனுசரிக்கப்படும் இந்த நிகழ்வை,  குஜராத் மாநிலத்துடன்   அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஷோராம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய  8 வடகிழக்கு மாநிலங்களும் இணைந்து கொண்டாடவுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • மிலான் 2020” (MILAN 2020) என்ற பெயரில் 41 நாடுகளின் கடற்படைகள் பங்கு பெறும் சர்வதேச பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வு  மார்ச் 2020 ல் விஷாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • Tongxin Jishu Shiyan Weixing -5 (TJSW-5) ” என்ற பெயரில் புதிய தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா தனது ’Long March-3B’ ராக்கெட்டின் மூலம் 7-1-2020 அன்று விண்ணில் செலுத்தியது.

பொருளாதாரம்

  • 2019-20 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சிக்கான கணிப்பை 6% த்திலிருந்து 5% ஆக உலக வங்கி குறைத்து மதிப்பிட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas / NRI Day) - ஜனவரி  9  ( இந்திய சுதந்திரப்போராட்டத்திலி பன்கேற்க, மகாத்மா காந்தியடிகள்  தென் ஆப்பிரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு திரும்பிய 9 ஜனவரி 1915 தினத்தின் நினைவாக கொண்டாடப்படுகிறது.)

நியமனங்கள்

  • லோக்பால் அமைப்பின் உறுப்பினர் நீதியரசர் திலிப் பாபாசாகேப் போஸ்லே (Dilip Babasaheb Bhosale) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இவர் 27-03-2019 அன்று  லோக்பால் தலைவராக உள்ள நீதியரசர் பினாக்கி சந்திர கோஷ் அவர்களால்  லோக்பால் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். லோக்பால் அமைப்பில் அதிகபட்சமாக 8 உறுப்பினா்கள் இடம்பெற வேண்டும். அவா்களில், 4 போ் நீதித் துறையைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.
  • பொதுத்துறை நிறுவனமான, ‘வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு நிறுவனத்தின் (Housing and Urban Development Corporation) மேலாண் இயக்குநராக நாகராஜ் 8-1-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 25 ஏப்ரல் 1970 ல் தொடங்கப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது.

விளையாட்டு

  • 7 வது ”தேசிய பனி ஹாக்கி பெண்கள் சாம்பியன்ஷிப்” (National Ice Hockey Championship Women trophy) போட்டியில் லடாக் யூனியன் பிரதேச அணி கோப்பையை வென்றுள்ளது.

விருதுகள்

  • இங்கிலாந்து நாட்டின் உயரிய குழந்தைகள் இலக்கிய விருதான ‘கோஸ்டா குழந்தைகள் விருது 2019” (Costa Children’s Award) இந்திய வம்சாவழி எழுத்தாளர் ஜஸ்பிந்தர் பிலான் (Jasbinder Bilan) எழுதிய ‘Asha and the Spirit Bird’  என்ற நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.

PORTAL ACADEMY –ன்   TNPSC குரூப் 1 2020 மற்றும் குரூப் 2/2A  2020 தேர்வுகளுக்கான  தேர்வு வகுப்புகள் (TEST BATCH) 15-01-2020 முதல் தொடங்கவுள்ளது.  
 ☞ 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்  |  GS-175 +  APTITUDE-25 )
TNPSC குரூப் 1, 2 புதிய பாடத்திட்டத்தின் படி,   புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்கள் மற்றும் முக்கிய பிற பாடப் புத்தகங்களிலிருந்து தரமான கேள்விகள்
 தமிழ் & ENGLISH MEDIUMS  | EXPLANATION FOR MATHS / APTITUDE QUESTIONS
தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES)  பயிற்சி செய்யலாம் . 
முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்ய  மற்றும்  TEST SCHEDULE  , FEE DETAILS பற்றி அறிய PORTAL ACADEMY இணையதளத்தைப் பார்வையிடவும்.  WWW.PORTALACADEMY.IN     |   8778799470

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!