நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 05 January 2020

TNPSC Current Affairs 05-01-2020

தமிழ்நாடு

  • முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ( H. Pandian ) 4 ஜனவரி 2020 அன்று காலமானார். இவர் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக 1985 முதல் 1989 ஆண்டுகளில் பணியாற்றினார்.

இந்தியா

  • 'காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் கமிஷனின்’ (Khadi and Village Industries Commission (KVIC) முதல் பட்டு பதனிடும் ஆலை (Silk Processing Plant) குஜராத் மாநிலம் சுரேந்த்ரநகர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. குஜராத்தின்  படோலா சேலைகள் தயாரிப்பிற்காக இந்த பட்டு பதனிடும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கூ.தக. : 'காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் கமிஷனின்’ தலைமையிடம் மும்பையில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக வி.கே.சாக்‌ஷேனா என்பவர் உள்ளார்.
  • ’புதிய, வளரும் , திட்டமிட்ட தொழில்நுட்பங்கள்’ (New, Emerging and Strategic Technologies (NEST)) பிரிவு என்ற பெயரில்  புதிய பிரிவு,  5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சார்ந்த வெளிநாட்டு விவகாரங்களை கையாள்வதற்காக  மத்திய  வெளியுறவு அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் ‘நன்னீர் ஆமைகள் மறுவாழ்வு மையம்’ (turtle rehabilitation centre) பீகாரின் பஹல்பூர் காட்டில்  திறக்கப்படவுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 95 புலிகள் இறந்துள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வீடு கட்டுவதற்கு தேவையான மணலை முன்பதிவு செய்வோரின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கும்  திட்டத்தை ஆந்திர மாநில அரசு 2-1-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரா் பீம்சந்திர ஜனா (107) 3-1-2020 அன்று காலமானார். 1930- ஆம் ஆண்டில் தனது 17-ஆவது வயதில் முதன்முறையாக ஆங்கிலேயா்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட இவர், சுதேசி இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார், அதற்காக அவா் ஹிஜ்லி, அலிபூா் சிறைகளில் அடைக்கப்பட்டார். வங்காளத்தின் மற்ற சுதந்திர போராட்ட வீரா்களால் பீம் சந்திர ஜனா ‘நானு’ என்று அழைக்கப்பட்டார்.
  • அயோத்தி விவகாரங்கள், அதுதொடர்பான கோர்ட்டு தீர்ப்புகள் ஆகியவற்றை கவனிக்க கூடுதல் செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான அனைத்து விவகாரங்களையும் இனி அவர்களே கவனிப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    • ஜியானேஷ் குமார் ஏற்கனவே காஷ்மீர், லடாக் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மத்திய அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையில் அவர் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.
    • ஏற்கனவே 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் உள்துறை அமைச்சகத்தில் ‘அயோத்தி தனிப்பிரிவு’ ஒன்று இயங்கியது. அயோத்தி பிரச்சினை தொடர்பாக லிபெரான் கமிஷன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததும் அது கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

  • கியூபா நாட்டில் சூரிய ஆற்றல் பூங்கா அமைப்பதற்காக  ரூ.500 கோடி (75 மில்லியன் அமெரிக்க டாலர்)  கடனுதவி  இந்தியாவின் எக்சிம் வங்கி (Export-Import (Exim)Bank) யின் மூலமாக வழங்கப்படவுள்ளது.
    • கூ.தக. : 1 ஜனவரி 1982 ல் தொடங்கப்பட்ட எக்சிம் வங்கியின் தலைமையிடம் மும்பையில் உள்ளது. இதன் தற்போதைய மேலாண் இயக்குநராக டேவிட் ராஷ்குன்கா (David Rasquinha) உள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

  • ’பாட்டில்பிஷ்’ (Paddlefish) எனப்படும் சீனாவின் யாங்ஷே நதியில் வாழ்ந்த 22 அடி நீளம் வரை வளரக்கூடிய மீன்வகை அழிந்த மீன் இனமாக   சீன அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிமிஞ்சிய மீன்பிடித்தலே இந்த மீன்வகையின் அழிவிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக பிரைய்லி தினம் (World Braille Day) - ஜனவரி 4  (கண் பார்வையற்றோருக்கான , ஆறு புள்ளிகளைக் கொண்ட, பிரையிலி எழுத்து முறையை கண்டுபிடித்த  ‘லூயிஸ் பிரய்லி’ (Louis Braille) அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
  
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!