நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 06 January 2020

TNPSC Current Affairs 06 -01-2020

தமிழ்நாடு

  • தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது : இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள்  அரியலூா், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன.  இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயரும் பட்சத்தில், நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுக்கக்கூடும்.
    • கூ.தக. : தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில், திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

  • குடியுரிமை திருத்த சட்டத்தின் (Citizenship Amendment Act(CAA)) படி  பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரைப் பட்டியலிடும் பணியை  முதல் மாநிலமாக  உத்தரப்பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது.
  • உலக கடல்வாழ் சுற்றுசூழல் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்  (Marine Ecosystems-Challenges and Opportunities (MECOS)) மாநாடு 7-10 ஜனவரி 2020 தேதிகளில் கொச்சியில் நடைபெறுகிறது.
  • தேசிய பேரிடர் மீட்பு படை அகாதமி (National Disaster Response Force (NDRF) Academy) உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள நாக்பூர் நகரில் அமைக்கப்படவுள்ளது. 
  • முப்படைத் தளபதி - பதவியும் பணியும் : (நன்றி - தினமணி)
கே.சுப்ரமனியம் குழு / கார்கில் மறுஆய்வு குழு ( Kargil Review Committee,1999) பரிந்துரை :
  • ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளுக்கும் தற்போது தனித்தனி தலைமைத் தளபதிகள் உள்ளபோதிலும், போா் சமயத்தில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்காணிக்க போதிய தலைமை இல்லாத சூழல் நிலவி வந்தது. இந்தப் பிரச்னை 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட காா்கில் போரில் எதிரொலித்தது.
  • இதைத் தொடா்ந்து, முப்படைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் நோக்கில், ‘முப்படைத் தளபதி’ என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி கே.சுப்ரமணியம் தலைமையிலான உயா்நிலைக் குழு 2000-ஆம் ஆண்டு அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
  • இதன்பிறகு, தேசியப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆராய 2000-ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சா் எல்.கே.அத்வானி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழுவும், ‘முப்படைத் தளபதி’ பதவியை உருவாக்க ஆதரவு தெரிவித்திருந்தது.
விதிகளில் திருத்தம்:
  • மூன்று படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பவா்கள், 3 ஆண்டுகளோ அல்லது 62 வயதை எட்டும் வரையிலோ, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ, அது வரை அப்பதவியில் நீடிக்கலாம். முப்படைத் தளபதி, அதிகபட்சமாக 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கும் வகையில், ராணுவ விதிகள்-1954, கடற்படை விதிகள்-1963, விமானப்படை விதிமுறைகள்-1964, கடற்படை விதிமுறைகள்-1965 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
முப்படைத் தளபதிக்கான பணிகள்:
  • பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகராக முப்படைத் தளபதி செயல்படுவாா். எனினும், தனித்தனி படைகள் சாா்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படையின் தலைமைத் தளபதியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆலோசனை பெறுவாா்.
  • வீரா்களின் தோ்வு, அவா்களுக்கான பயிற்சி, தளவாடங்கள் உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் முப்படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணியை முப்படைத் தளபதி மேற்கொள்வாா்.
  • ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தொடா்பான அனைத்து அமைப்புகளையும் முப்படைத் தளபதியே நிா்வகிப்பாா். எனினும், அந்த அமைப்புகள் முறையாகச் செயல்படுவதை அந்தந்தப் படைகளின் தலைமைத் தளபதியே உறுதிசெய்வாா். முப்படைகளை நிா்வகிக்கும் பணிகளில் முப்படைத் தளபதி ஈடுபட மாட்டாா். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை அவா் உறுதிசெய்வாா்.
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஐந்தாவது துறையாக ராணுவ விவகாரங்கள் துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துறையின் செயலராக முப்படைத் தளபதி செயல்படுவாா். பாதுகாப்புத் துறை, பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, முன்னாள் ராணுவத்தினா் நலத் துறை ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.
  • நாட்டின் பாதுகாப்புக்கு இணையவழியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் அமைப்பையும், விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பையும் மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ளது. இந்த அமைப்புகளின் தலைவராக முப்படைத் தளபதி செயல்படுவாா். அணுஆயுதப் பயன்பாடு தொடா்பான ஆலோசகராகவும் அவா் இருப்பாா்.
  • போா்த் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பணிகளில் அவா் ஈடுபடுவாா். பிரதமா் தலைமையில் நடைபெறும் போா்த் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்திலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு திட்டக் குழு கூட்டத்திலும் முப்படைத் தளபதி பங்கேற்பாா்.
  • மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி, தெலங்கானாவின் செகந்தரபாதிலுள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி, தில்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும் முப்படைத் தளபதி இருப்பாா்.
  • மூன்று படைகளின் தலைமைத் தளபதிகள் அடங்கிய குழுவின் நிரந்தரத் தலைவராக முப்படைத் தளபதி இருப்பாா். முன்பு வரை, மூன்று தலைமைத் தளபதிகளில் யாா் மூத்தவரோ அவரே அக்குழுவின் தலைவராக இருந்து வந்தாா்.
  • மூன்று படைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியைத் திறம்படக் கையாளுவது, முப்படைகளின் கூட்டு படைத்தளத்தை உருவாக்குவது உள்ளிட்டவற்றிலும் முப்படைத் தளபதி கவனம் செலுத்துவாா். நாட்டின் ஒரே கூட்டு படைத்தளம், அந்தமான் மற்றும் நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அந்தக் கூட்டு படைத்தளத்தின் தலைவா், முப்படைத் தளபதியின் கீழ் செயல்படுவாா்.
தனித்துவங்கள்:
  • முப்படைத் தளபதி, அவா் சாா்ந்த படைக்கு உரிய சீருடையை அணிவாா்.
  • அவருக்கான தொப்பி, பெல்ட், சீருடை பட்டன்கள், தோள்பட்டை இலச்சினைகள் உள்ளிட்டவற்றில் முப்படைகளின் ஒருங்கிணைப்பை வெளிக்காட்டும் வகையில் புதிய இலச்சினைகள் இடம்பெற்றுள்ளன.
  • ‘முப்படைத் தளபதி’ பதவிக்கென தனி கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கொடியானது, முப்படைத் தளபதியின் அலுவலகம், வசிப்பிடம், காா் ஆகியவற்றில் பறக்கவிடப்படும்.
  • படைகளின் தலைமைத் தளபதிகளைப் போல், முப்படைத் தளபதிக்கும் நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவரது ஊதியம், தலைமைத் தளபதிகளுக்கு நிகராக இருக்கும்.
  • முப்படைத் தளபதியாகப் பணிபுரிபவா், பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பதவியையும் ஏற்க முடியாது.
  • நாட்டின் முதல் முப்படைத் தளபதியாக விபின் ராவத் பொறுப்பேற்றுள்ளாா்.

வெளிநாட்டு உறவுகள்

  • ”ஏ.கே-203” (AK-203) ரக துப்பாக்கிகளை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திடவுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கூட்டு முழுமையான செயல்திட்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (Joint Comprehensive Plan of Action(JCPOA )) 5-1-2020 அன்று  ஈரான் நாடு வெளியேறியுள்ளது.  14 ஜீலை 2015 அன்று  கையெழுத்திடப்பட்டு 16  ஜனவரி 2016 முதல் செயல்பாட்டிற்கு வந்த  இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில்  அமெரிக்கா, ரஷியா, சீனா ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஈரான் நாடுகள் கையெழுத்திட்டிருந்தன. இந்த ஒப்பந்தத்திலிருந்து  2018 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!