TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

Your Ad Spot

TNPSC Current Affairs 07 January 2020

TNPSC Current Affairs 07-01-2020

தமிழ்நாடு

 • தமிழக சட்டப்பேரவையின் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 06-01-2020 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்: (நன்றி : இந்து தமிழ்திசை)
 • மாமல்லபுரத்திற்குச் சிறப்புச் சுற்றுலா நிதி வழங்க பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ரூ.563.30 கோடிக்கான மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
 • ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு சுமார் ரூ.7,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தல்.பெண்ணையாற்றுப் படுகையில், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே, நீர்த்தேக்கம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதலின்றி கர்நாடக அரசு பெண்ணையாற்றுப் படுகையில் நீர்த்தேக்கம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தல்.
 • காவிரி தெற்கு - வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
 • சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இந்த ஆண்டு பயிரிடும் பரப்பளவு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது.
 • தமிழக உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • சேலம் தலைவாசலில் ரூ.1,000 கோடி மதிப்பிலான கால்நடை ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனத்திற்கு விரைவில் ஒப்புதல்.
 • மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே ரூ.1.20 கோடி மற்றும் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டி முடிக்கப்பட உள்ளன.
 • நாகை வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ளது.
 • இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை.
 • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
 • கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடிகிறது.
 • முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கொசு வலை வழங்கப்படும்.
 • மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் சேவை வழங்க ரூ.1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • 2019-2020 நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு.
 • ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ காவலன் செயலி திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
 • அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒப்புயர்வு கல்வி நிறுவனம் ஆன பின்னரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில சட்டத்தில் இயங்கும்.
 • கல்லூரி இடைநிற்றல் மாணவர்களில் 1 லட்சம் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
 • தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தகுதியான பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன’’.
 • 2019-ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலமாக 10.5 லட்சம் நபா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 501 கோடி அளவிலான முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆளுநர் உரையின் போது தெரிவித்துள்ளது.

இந்தியா

 • ஆரோக்கிய சஞ்சீவனி (‘Arogya Sanjeevani’) என்ற பெயரில் புதிய  மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை  1 ஏப்ரல் 2020 முதல் அமல்படுத்த  வேண்டியது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கட்டாயம் என காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (Insurance Regulatory & Development Authority of India(IRDAI)) அறிவித்துள்ளது.
  • இந்த ’ஆரோக்கிய சஞ்சீவனி’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் இருக்கலாம் எனவும், காப்பீட்டிற்கான காலம் ஓராண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 18-65 வரையிலான எந்த ஒரு நபரும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
கூ.தக. : இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம்  1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் ஹைதராபாத் நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக சுபாஸ் சி. குந்தியா (Subhash C. Khuntia)  உள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

 • நேபாள அரசு அதிகாரிகளுக்கு இந்தியாவில் ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி : நேபாளத்தில் ஊழலைத் தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் 21 போ் கொண்ட குழுவுக்கு இந்தியா பயிற்சி அளிக்கிறது.குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் ‘மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு’ தொடா்பான பயிற்சி திட்டத்தில், நேபாளத்தின் ‘அதிகார, துஷ்பிரயோகம், ஊழல் தொடா்பான விசாரணை ஆணையத்தின்’ (சிஐஏஏ) அதிகாரிகளுக்கு இரண்டாம் கட்டமாக அளிக்கப்படும் பயிற்சி இதுவாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

 • கினியா பிசாவு (Guinea-Bissau) நாட்டின் அதிபராக உமாரோ மொக்தர் சிசோசோ எம்பாலோ (Umaro Mokhtar Sissoco Embalo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு

 • இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக உள்ள ’இர்ஃபான் பதான் (Irfan Pathan) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக 4-1-2020 அன்று அறிவித்துள்ளார்.  இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் .
 • ரோகித் ஷர்மா கிரிக்கெட் ஸ்டேடியம் (“Rohit Sharma Cricket stadium”) என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஹைதராபாத் நகரில் அமைப்பதற்கு 3-1-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

 • The Cuckoo’s Nest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சேதுமாதாவன்
 • 'தேசம்மா' என்னும் நூலின் ஆசிரியர் - க.அரவிந்த் குமார் (வடசென்னை மக்களின் வாழ்வியல் மற்றும் கலாசாரம் பற்றி பேசக் கூடிய புத்தகம்)

விருதுகள்

 • அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் 2019 6-1-2020 அன்று வழங்கப்பட்டன.
  • சிறந்த படமாக முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ ஹாலிவுட் படம் தேர்வானது.  இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டிஸ் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.
  • உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த ஜோகுயின் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.
  • அதே போல் சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெல்வேகருக்கு வழங்கப்பட்டது.
  • சோனி பிக்சர்ஸ் தயாரிப்பான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் சிறந்த இசை மற்றும் நகைச்சுவை படமாக தேர்வாகி விருதுகளை பெற்றது.
  • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜோக்கர் படத்திற்காக ஹில்டர் குனாடோட்டிருக்கு கிடைத்துள்ளது.
 • கனடா தமிழ் இலக்கிய தோட்டம் 2019-ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளா் சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

 • Project NETRA” விரிவாக்கம் - NEtwork for space object TRacking and Analysis (விண்வெளியிலுள்ள பொருட்களின் நகர்வுகளை ஆராய்வதற்கான இந்திய விண்வெளிக் கழகத்தின் திட்டம்)


No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot