Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS
☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 08 January 2020

TNPSC Current Affairs 08-01-2020

தமிழ்நாடு

 • சாரங் திருவிழா (Saarang cultural festival) : ”சென்னை நினைவுகள்” (‘Madras Memoirs.’) என்ற தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி-யின் வருடாந்திர கலாச்சார நிகழ்வான ’சாரங் திருவிழா’ 8-1-2020 ல் தொடங்குகிறது.
 • தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் 60 சதவீத வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்க வழி வகை செய்யப்படும் வகையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  
 • ஊடக நிறுவனங்களுக்கான சா்வதேச யோகா தின விருது (‘Antarrashtriya Yoga Diwas Media Samman’ )  சென்னை தூா்தஷன், தந்தி குழுமத்தைச் சோ்ந்த ஹலோ எஃப்.எம். வானொலி  ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன.   இவ்விருது மொத்தம் 30 ஊடக் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஜீன் 2019 ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த விருது,   ஊடகம் மூலம் யோகாவை சிறந்த முறையில் பரப்புரை செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியா

 • சுகன்யா திட்டம் (‘Sukanya’ project) என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா நகர காவல் துறை அமல்படுத்தியுள்ளது.
 • ஃபக்சா பறவைகள் திருவிழா 2020” (Buxa Bird Festival 2020) மேற்கு வங்காளத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் 7-9  ஜனவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.
 • துணை ராணுவ படைப் பிரிவுகளில், ரயில்வே பாதுகாப்பு படையில் தான், பெண்களின் பங்கு, 10 சதவீதம் என்ற அளவிற்கு அதிகமாக உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில், 80 ஆயிரம் பேர் உள்ளனர். அதில், எட்டாயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 • உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • "நஷீம்-அல்-பகிர் (‘Naseem-Al-Bahr’) என்ற பெயரில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையேயான 12 வது கூட்டு கடற்படை ஒத்திகை 5-1-2020 அன்று கோவாவொல் தொடங்கியது.

சர்வதேச நிகழ்வுகள்

 • வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் அறிவித்துள்ளார்.
  • கூ.தக. : இந்தியாவில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

 • சிறு நிதி வங்கியாக (small finance bank (SFB)) மாற்றப்பட்டுள்ள முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி ( urban cooperative bank (UCB)) எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவாலிக் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி லிமிடட் (Shivalik Mercantile Co-operative Bank Ltd ) பெற்றுள்ளது.
 • பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு 7-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
 • ' இ சக்தி' திட்டம் (EShakti Scheme) :    சுய உதவிக்குழுக்களின் வங்கி செயல்பாடுகளை கணினிமயமாக்குவதற்கான மத்திய அரசின்  நபார்டு வங்கி (Self Help Group) அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் .

நியமனங்கள்

 • டொமினிக்கா (Dominica) நாட்டிற்கான இந்தியாவின் தூதராக அருண் குமார் சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

 • விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான உலக தர மையம் (World- Class facility center) கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள சால்லகெரெ (Challakere) எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ளது.
கூ.தக. :
 • ரூ,2700 கோடி செலவில் ”விண்வெளி பயிற்சி மையம்” ( “House Space Flight Centre (HSFC)”) பெங்களூருவில் அமைக்கப்படவுள்ளது.
 • 2022 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் நான்கு இந்திய வீரர்களுக்கு ரஷியாவின் ‘யூரி காகரின் விண்வெளிவீரர்கள் பயிற்சி மையத்தில்” (Yuri Gagarin Cosmonaut Training Centre) பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • அனைத்து விதமான காற்று பதனாக்கிகளிலும் (Air Conditioner)  இயல்புநிலை குளிர் அளவீடு  (default temperature setting)  24 டிகிரி செல்சியஸாக  அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1 ஜனவரி 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 • 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் 7 வது அதிக வெப்ப ஆண்டாக (1901 ஆம் ஆண்டு முதல்)  இருந்ததாக இந்திய காலநிலை ஆராய்ச்சி துறை (India Meteorological Department (IMD) ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • உலகின் மிகவும் விஷத்தன்மை கொண்ட “இந்திய நாகத்தின் ( Indian cobra ) மரபணுவை பெங்களூருவைச் சேர்ந்த ‘சைஜீனோம் ஆராய்ச்சி அறக்கட்டளை’ ( SciGenome Research Foundation) மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து   பிரித்தெடுத்து வரிசைப் படுத்தியுள்ளனர்.  இதன் மூலம் , எதிர்காலத்தில்  அதிக விஷம் கொண்ட பாம்புக்கடிக்கு  மருந்துகள் கண்டுபிடிப்பது எளிதாகவுள்ளது.
 • ரப்லேசியா அர்னால்டி என்ற பெயரிலான உலகிலேயே மிகப்பெரிய பூ இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் மலர்ந்துள்ள பூவுக்கு ரப்லேசியா அர்னால்டி என பெயரிடப்பட்டுள்ளது.
  • ரப்லேசியா அர்னால்டி பூக்கும் செடிகள் ஒட்டுண்ணி தாவர வகையை சார்ந்தவை. இந்த பூவின் செடிகளுக்கு வேர்கள் இலைகள் எதுவும் கிடையாது.
  • இந்த பூவில் இருந்து அழுகிய இறைச்சியின் துர்நாற்றம் வீசும் என்பதால், இந்த மலர் துர்நாற்றமலர் என்றும் அழைக்கப்படுகிறது.

விளையாட்டு

 • முதலாவது, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2020 (Khelo India University Games 2020)   ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் (Kalinga Institute of Industrial Technology University)  22 பிப்ரவரி 2020 முதல் 1 மார்ச் 2020 வரையில் நடைபெறுகிறது.
 • இங்கிலாந்தில் நடைபெற்ற , 95 வது, ‘ஹேஷ்டிங்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் (Hastings International Chess title) மதுரையைச் சேர்ந்த மகேஷ் சந்திரன் பஞ்சநாதன் பட்டத்தை வென்றுள்ளார்.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments