நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 21 January 2020


TNPSC Current Affairs 21 January 2020

தமிழ்நாடு
  • தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசு முடிவு :
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அங்கு 6 புதிய தொழில் நிறுவனங்களை அமைக்க 20-1-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • அந்த வகையில் துறைமுக நகரமான தூத்துக்குடியில் அல்கெராபி என்ற நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை நேற்று வழங்கியது.
  • இதேபோல் சீனாவைச் சேர்ந்த வின்டெக் என்ற நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் மின்சார கார்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலையும் அமைச் சரவை நேற்று வழங்கியது.
  • தஞ்சை விமான படைத்தளத்தில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் 21-01-2020 அன்று  தொடங்கி வைத்தார்.
    • சுகோய் ரக போர் விமானங்கள் இயக்குவதற்கு வசதியான படைத்தளமாக கடந்த 2013-ம் ஆண்டு இந்த தளம் தரம் உயர்த்தப்பட்டது. சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்துடன் பிரமோஸ் ஏவுகணையை இணைப்பது தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வு வெற்றி பெற்றதையடுத்து இந்த ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடத்தப்பட்டது.
    • தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய்-30 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்னிந்தியாவில் 2-வது படை தளமாக தஞ்சை விமானப்படை தரம் உயர்ந்துள்ளது.
    • இதற்காக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ‘டைகர் சார்கிஸ்’ என பெயரிடப்பட்ட எண்-222 என்ற புதிய விமானப்படை அணி உருவாக்கப்பட்டுள்ளது.
கூ,தக. :
  • தஞ்சை மேலவஸ்தாசாவடியில் விமானப்படை தளம் உள்ளது. இந்த தளம் 1940-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இந்த விமானப்படை தளம் செயல்பாட்டில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் இந்தப் படைத்தளம் கைவிடப்பட்டது. இந்நிலையில், 1980 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தில் மீண்டும் விமானப் படை நிலையம் தொடங்குவதற்கான பணி தொடங்கப்பட்டது. கடந்த 2013, மே 27ஆம் தேதி விமானப் படை நிலையமாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
  • ஜல்லிக்கட்டு விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டங்களைத் தொடா்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் நீதிபதி ராஜேஸ்வரன் தனது விசாரணை அறிக்கையை 20-01-2020 அன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தாா்.
பின்னணி :
  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கோரி, கடந்த 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த போராட்டங்களைத் தொடா்ந்து சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் தொடா்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
தெரிந்து கொள்ளுங்கள் !!!
“ஃபோஸ்டெரா” (FOSTeRA - Fostering Technologies in Rural Area)  என்ற பெயரில் இந்தியாவின் முதல் ஊர்ப்புற வி.பி.ஓ (வணிக செயல்முறை ஒப்பந்த சேவை) (Business process outsourcing (BPO))  2007 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின், சென்னத்தூர் பஞ்சாயத்தில்  அம்மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு முகமையின் (District of Rural  Development Agency (DRDA)) மூலம் தொடங்கப்பட்டது.

இந்தியா

  • ”மா பிகு’ (Magh Bihu) எனும் அறுவடைத்திருவிழா அஸ்ஸாம் மாநிலத்தில் 15-01-2020 அன்று கொண்டாடப்பட்டது.
  • முதலாவது ‘கிரிஷி மந்தான் 2020’ (Krishi Manthan 2020) எனப்படும், ஆசிய அளவிலான வேளாண்மை தொடர்பான வர்த்தகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு கூடுகை    16-17 ஜனவரி 2020 தினங்களில் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடைபெற்றது.  இந்த கூடுகையை ஆமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம், (Indian Institute of Management Ahmedabad (IIMA).) நடத்தியது.
  • 28 புது தில்லி புத்தகக் கண்காட்சி 2020 , 4-12 ஜனவரி 2020 தினங்களில் ’காந்தியடிகள் : எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ (‘Gandhi: TheWriters’ Writer’) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.
  • ’உலக சமுதாய போக்குவரத்து பட்டியல் 2020’ (Global Social Mobility Index 2020) ல் இந்தியா 76 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF) ) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே டென்மார்க், நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘மத்திய மாநில நீர்வளத் துறைகளுக்கான திறன் இலக்குகளைப் பற்றிய ஆய்வறிக்கையில்’ (‘Central and state governmental water departments based on their efficiency targets for 2019’) குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளதுதமிழ்நாடு 13 வது இடத்தைப் பெற்றுள்ளது. (2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 33 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது)
  • பாஜக தேசிய தலைவராக, ஜெ.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தேசியத் தலைவர் பதவிக்கு ஜெ.பி. நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவின் சார்பில் கடல்சார் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு மையம் (maritime research coordination centre) இலங்கையில்  அமைக்கப்படவுள்ளது.   இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசர்க அஜித் தோவல் மற்றும் இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே இடையே 19-1-2020 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களின் மாநாடு 2020 (Conference of Speakers and Presiding Officers of the Commonwealth (CSPOC) 2020)  6-10 ஜனவரி 2020 தினங்களில் கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்றது.   இம்மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

பொருளாதாரம்

  • நடப்பு நிதியாண்டில் (2019-2020) இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மதிப்பிட்டுள்ளது.இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கடந்த அக்டோபரில் மதிப்பிட்டிருந்த நிலையில், அதனை தற்போது குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

  • ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருதான ’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது (Order of Australia honour) இந்தியாவின் கிரண் மஜீம்தார் ஷா (Kiran Mazumdar-Shaw )  எனும் பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • சென்னை ஓபன் செஸ் போட்டியில் ஜாா்ஜியாவின் கிராண்ட்மாஸ்டா் மைக்கேல் செட்ஷிவிலியை சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவா் ஹா்ஷவா்த்தன் தோல்வியுறச் செய்துள்ளார்.
  • கேலோ இந்தியா யூத் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிா் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
  • சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் தரவரிசையில், பேட்டிங் பிரிவில் விராட் கோலி 886 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரோஹித் சா்மா 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டனா். பந்துவீச்சில் இந்திய நட்சத்திரம் ஜஸ்ப்ரீத் பும்ரா 764 புள்ளிகளுடன் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளாா்.
  • ரோம் ரேங்கிங் மல்யுத்த சா்வதேச போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ரவிக்குமாா் தாஹியா ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
  TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums

ADMISSION GOING ON !!!

Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!