Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS
☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 22 January 2020

TNPSC Current Affairs 22-01-2020
தமிழ்நாடு
 • முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 • தமிழக அரசின் முதல்வா் விருதுக்கு 3 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.  குடியரசு தின விழாவில் வழங்கப்படும் தமிழக காவல் துறையின் கீழ்  சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கான தமிழக முதல்வா் விருதுகளில்,   இந்த ஆண்டு, கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் கீழ் செயல்படும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையம் முதலிடத்துக்கும், திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம் இரண்டாமிடத்துக்கும், தருமபுரி மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாமிடத்துக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
 • தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் தமிழாசிரியா்களுக்கு இலக்கிய - இலக்கணம் மற்றும் பேச்சுத் தமிழ் குறித்த 10 நாள் பயிலரங்கம்   தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரில் நடைபெற்றது . டா்பன் நகரில் 80 ஆண்டுகளாகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் மியா்பேங்க் தமிழ்ப் பள்ளிச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தமிழாசிரியா்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் 123 தமிழாசிரியா்களும், இளந்தமிழ் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கத்தில் 85 மாணாக்கா்களும் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

இந்தியா

 • இந்தியாவின், 71வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார்.
 • அப்பல்லோ மருத்துவமனையின் 'ஹெல்த் கிரெடிட் கார்டு' திட்டம்  : அப்பல்லோ மருத்துவமனை குழுமம், 'பஜாஜ் பின்சர்வ்' நிறுவனத்துடன்இணைந்து, 'ஹெல்த் கிரெடிட் கார்டு' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.   இந்த அட்டை பெற, 21 முதல், 61 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபர் வருமானம், மாதம் குறைந்தது, 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்க வேண்டும். காசோலை'ஹெல்த்' அட்டை பயனாளிகள், 4 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். அவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப, 12 மாத காலத்திற்குள், மாதந்திர தவணையில் செலுத்த வேண்டும்.
 • இந்தியாவில் முதன்முறையாக விவசாய நில குத்தகை கொள்கையை உத்தரகாண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்தின் படி, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தை 30 வருட குத்தகைக்கு கொடுப்பதன் மூலமாக அந்த நிலத்திற்கான வாடகை பெறுவார்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில், விவசாயம், தோட்டக்கலை, மூலிகைகள், பருவகால காய்கறிகள், பால் உற்பத்தி, தேயிலைத் தோட்டம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றிற்கான நிலங்களை குத்தகைக்கு விடுவதில் உள்ள தடைகள் இந்த நடவடிக்கையால் நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் எந்த ஒரு தனியார் நிறுவனமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ கிராமங்களில் பண்ணை நிலங்களை குத்தகைக்கு எடுக்கலாம். அதிகபட்சம் 30 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடலாம்.
 • உபோ் ஈட்ஸ் (Uber Eats) வா்த்தகத்தை கையகப்படுத்தியது ஸோமாட்டோ (Zomoto) : வலைதள உணவு விநியோக சேவை நிறுவனமான உபோ் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வா்த்தகப் பிரிவை   ஸோமாட்டோ  நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
 • இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில், இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதியும் இனி இடம்பெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் முயற்சி மூலம், அமெரிக்காவின் சாண்டிகோவைச் சோ்ந்த குவால்கம் மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிப்களை இனி வெளியிட உள்ளது. அதன் மூலம், இந்தியாவில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில், இஸ்ரோ சாா்பில் விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் 7 ஐ.ஆா்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதி, புவி இருப்பிட வசதி (இருக்குமிடத்தை அறியும் வசதி) உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
  • அத்துடன், அமெரிக்காவின் ஜிபிஎஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, ரஷியாவின் குளோநாஸ், சீனாவின் பிடவ் உள்ளிட்ட செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ”பரிக்‌ஷா பி சார்ச்சா 2020’ (‘Pariksha Pe Charcha 2020‘) என்ற பெயரில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான  பிரதமர் மோடி அவர்களின் ஆலோசனை மற்றும் ஊக்கப்படுத்தும் நேரலை பேச்சு நிகழ்வு 20-1-2020 அன்று நடைபெற்றது.
 • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை  விஷாகப்பட்டிணம், அமராவதி மற்றும் குர்னூல் ஆகிய இடங்களில் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
 • பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான சட்டம் இயற்றுவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  அமைச்சர்கள் குழு ஒன்று 19-1-2020 அன்று அமைக்கப்பட்டுள்ளது.
கூ.தக. :
 • 1997 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பணியிடத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான விஷாகா வழிகாட்டு நெறிமுறைகளை (Vishaka guidelines) வெளியிட்டது.  விஷாகா vs இராஜஸ்தான் மாநில அரசு வழக்கின் முடிவில் இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.
 • ஜகதீஷ் சரண் வர்மா குழு (Jagdish Sharan Verma committee) 2012 ஆம் ஆண்டில், டில்லியில் நடைபெற்ற நிர்பயா கூட்டுக் கற்பழிப்பு நிகழ்வையொட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவானது,   ‘உள் புகார் குழுக்கள்’ அமைக்கப்படுவதற்கு பதிலாக, பணியாளர் தீர்ப்பாயம் (employment tribunal) அமைக்கப்படுவதை வலியுறுத்தியது.
 • விஷாகா வழிகாட்டு நெறிமுறைகளே, பின்னர் ‘பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் (பாதுகாப்பு, தடுப்பு மற்றும் குறைதீர்ப்பு) சட்டம், 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013.) ஆக உருவாக்கப்பட்டது.  இந்த சட்டமானது, பணியிடங்களில் ‘உள் புகார் குழுக்கள்’ ( internal complaints committee (ICC)) அமைக்கப்படுவதை கட்டாயமாக்கியது.
 • நிரஞ்சன் பட் குழு ( Niranjan Bhat panel) : மத்தியஸ்தத்திற்கான சட்டத்தை  (mediation law) உருவாக்க  புகழ்பெற்ற மத்தியஸ்தர்  நிரஞ்சன் பட் தலைமையில் ’மத்தியஸ்தம் மற்றும் திட்ட சமரச குழு’  (‘Mediation and Project Conciliation Committee (MCPC)’ ) எனும்  குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
 • இந்திய சா்வதேச தோல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
 • பெண்கள் பாதுகாப்பிற்கான ‘Very Good Morning’ (VGM) எனும் மொபைல் செயலியை  ஐ.ஐ.டி, வாரணாசியின் மாணவர்கள் மிரிதியுஞ்சய் சிங் (Mrityunjay Singh ) மற்றும் பிரியா ராய் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.  பெண்கள், தங்களுக்கு ஆபத்து நேரிடும் சூழலில், இந்த மொபைல் செயலியை நிறுவிய மொபைல் ஃபோன்களிலுள்ள  பவர் பட்டனை மூன்று முறை அழுத்தினாலே ,  அந்த மொபைல் போன் இருக்கும் இடத்தின் முகவரி  அருகிலுள்ள காவல்துறை அவசர எண்ணிற்கு அனுப்பப்படும்.
 • ’தொழில் நிறுவனங்களின்’ கார்பன் வெளியீட்டு குறைப்பு பட்டியலில் உலக அளவில், இந்தியா 5 வது இடத்தைப் பெற்றுள்ளது.  ‘Carbon Disclosure Project’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ’கார்பன் குறைப்பு திட்ட’ (Carbon Disclosure Project) அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • இந்தியா-நேபாளம் இடையேயான எல்லைப் பகுதியில், ஜோக்பானி-பீரத்நகா் (Jogbani – Biratnagar) எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள  இரண்டாவது சோதனைச் சாவடியை பிரதமா் நரேந்திர மோடியும், நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலியும் காணொலிக்காட்சி வாயிலாக 21-01-2020 அன்று  கூட்டாகத் திறந்துவைத்தனா்.

சர்வதேச நிகழ்வுகள்

 • இன்டர்போல் அமைப்பின் முன்னாள் தலைவர் மெங் ஹாங்வெய்- க்கு 13½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 • அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் வரும் ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் இப்படை, அமெரிக்க விண்வெளி படையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம்

 • இந்தியாவின் 1% செல்வந்தர்கள் (2,153 நபர்கள்) 70%  மக்கள்தொகையின் (953 மில்லியன் மக்களின்)  மொத்த செல்வத்தை விட 4 மடங்கு செல்வங்களைக் கொண்டுள்ளதாக, ’ Oxfam International ’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
 • 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா , சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் பெற்றுள்ளன.  ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு அமைப்பு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. :
 • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு 16% வளர்ச்சியடைந்து 49 பில்லியன் டாலர் எனும் அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட United Nations Conference on Trade and Development (UNCTAD) அமைப்பின் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
 • ”Vodafone m-pesa” எனப்படும் டிஜிட்டல் பேமண்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை 21-1-2020 அன்று இந்திய ரிசர்வ் வங்கி  ரத்து செய்துள்ளது.

நியமனங்கள்

 • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் (State Bank of India (SBI)) மேலாண் இயக்குநராக செல்ல ஸ்ரீநினிவாசலு செட்டி (Challa Sreenivasulu Setty) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • மேலும், கனரா வங்கியின் மேலாண் இயக்குநராக  லிங்கம் வென்கட் பிரபாகர், பாஃங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மேலாண் இயக்குநராக அடானா குமார் தாஸ்  மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் மேலாண் இயக்குநராக சஞ்சிவ் சதா - வும்  20-01-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு

 • இந்திய விளையாட்டுத்துறையின் ஆலோசகர் குழுவில் ஹர்பஜன் சிங், ஸ்ரீகாந்த் சேர்ப்பு . இந்திய விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதமாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 2015-ல் ஆரம்பிக்கப்பட்டது அகில இந்தியா விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). டிசம்பர் 2015 முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான இக்குழுவின் முதல் பணிக்காலத்தில் சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றார்கள். இந்நிலையில் ஏஐசிஎஸ் அமைப்பின் புதிய குழுவில் சச்சின், ஆனந்த் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஹர்பஜன் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆலோசகர் குழுவின் எண்ணிக்கை 27-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. லிம்பா ராம், பி.டி. உஷா, தீபா மாலிக், அஞ்சலி பக்வத் போன்றோர் தற்போதைய ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

புத்தகங்கள்

 • ’The Gateway’: A Social Commentary on Safety of Senior Citizens’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் - ஹரிஹரன் பாலகோபால்
 • ’Human Dignity – A purpose in perpetuity’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் - அஸ்வனி குமார்
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments