நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 26,27 January 2020

TNPSC Current Affairs 26,27 January 2020

தமிழ்நாடு

  • தமிழக அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசை, காவல் துறை வென்றுள்ளது.
  • 'தமிழ் பல்கலை கழகத்தில், தமிழக அரசின், 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ராபர்ட் கால்டுவெல் பெயரில் இருக்கை அமைய உள்ளது,'' என, துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
  • ’ஹரித் ரத்னா விருது 2019’ (Harit Ratna Award 2019) தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் N குமார் -க்கு வழங்கப்பட்டுள்ளது. All India Agricultural Students Association (AIASA) எனும் அமைப்பினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தோடர் பழங்குடிகளின் ”மொற் பர்த் பண்டிகை” : நீலகிரியில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர், கோத்தர் என ஆறு பண்டைய பழங்குடிகளில் வசித்து வருகின்றனர்.
    • இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் மூவாயிரம் தோடர்கள் நீலகிரியில் மட்டுமே வசிக்கின்றனர்.எருமைகள் விருத்தியடைய வேண்டும், தங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என வேண்டி மார்கழி மாதம் இவர்கள் கொண்டாடும் பண்டிகை மொற் பர்த். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ கொண்டாடப்படுவது வழக்கம்.
  • தமிழக அரசின் குடியரசுத் தின சிறப்பு விருதுகள் 2020 :
    • காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் :  கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.  இவற்றை திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன்  ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் அமைச்சரின் விருது கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 2வது பரிசு திண்டுக்கல் காவல் நிலையம், 3வது பரிசு தரும‌புரி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
    • அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னிமலை குன்னாங்காட்டுவலசை சேர்ந்த யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
    • வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சாமர்த்தியமாக மீட்ட நாகை தீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
    • பொதுமக்கள் பிரிவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்களின், வினித் சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார், தனலட்சுமி, வினோதினி, இந்திராகாந்தி மற்றும் பழனியப்பனுக்கு வழங்கப்பட்டது.
    • கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருச்சியை சேர்ந்த ஷாஜ் முக‌மதுவுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பொதுமக்களிடையே மத நல்லுணர்வை ஏற்படுத்தியமைக்காக விருது வழங்கப்பட்டது.

இந்தியா

  • 'சிவ போஜனம்' (‘Shiv Bhojan’ ) என்ற பெயரில்  10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 26-1-2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • வருகிற 2024-ம் ஆண்டிற்குள் ரெயில்வே துறை 100 சதவீதம் மின்மயம் ஆக்கப்படும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார். இதனால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்க கூடிய மிக பெரிய முதல் ரெயில்வே துறையாக இந்திய ரெயில்வே இருக்கும்.
  • இந்தியாவின் முதல் ‘மின் கழிவு சிகிச்சையகம்’ (e-waste clinic) மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 24-1-2020 அன்று தொடங்கப்பட்டது.                                                                                                               3-வது உலக உருளைக்கிழங்கு மாநாடு (Global Potato Conference)  குஜராத்தின் காந்தி நகரில்  28–31 ஜனவரி  2020 தினங்களில் நடைபெற்றது.
  • ஒரே ஆண்டில் 15 இந்திய சுற்றுலா தலங்களை பார்வையிடும் நபர்களின் பயணச் செலவை ஏற்பதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • 11 வது இராணுவக்கண்காட்சி 2020 (DefExpo 2020) 5-9 பிப்ரவரி 2020 தினங்களில்  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறவுள்ளது.
  • ஒஷோனைப் பாதிக்கும் முக்கிய மாசுபடுத்தியான “HCFC-141 b” எனும் வேதிப் பொருளின் பயன்பாட்டை  இந்தியா முற்றிலும் தடை செய்துள்ளது.
  • ”போடோ ஒப்பந்தம்” (Bodo Agreement) : அஸ்ஸாம் மாநிலத்தின் போடோ மலைவாழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் போடோலாண்ட்  தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front of Bodoland (NDFB))  அமைப்பிற்கும் இடையே  27-1-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தின் படி போடோலேண்ட் பகுதி  அப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்களுக்காக சிறப்பு உரிமைகளுடன் இருக்கும்.  வெளியூரிலிருந்து அப்பகுதிக்கு செல்வோர் முன்னனுமதி பெறுவது அவசியமாகியுள்ளது.
  • ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான ராஜ்யசபா  உறுப்பினர்கள் குழு ,  நாட்டில் விற்பனையாகும் அனைத்து 'மொபைல்' போன்களிலும், சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச படங்கள் பகிர்வதை கண்காணித்து, தடுக்கும் 'ஆப்' வசதியை கட்டாயமாக்க வேண்டும்' என, ராஜ்யசபா குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
  • 17-ஆவது வருடாந்திர இந்திய மாநாடு , 15-16 பிப்ரவரி 2020 தினங்களில் அமெரிக்காவின் ஹாா்வாா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டினை ஹாா்வாா்டு பிசினஸ் ஸ்கூல், ஹாா்வாா்டு கென்னடி ஸ்கூல் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
  • இந்தியாவின் முதல் ‘மின் கழிவு சிகிச்சையகம்’ (e-waste clinic) மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 24-1-2020 அன்று தொடங்கப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

  • 71-ஆவது இந்திய குடியரசு தினத்தையொட்டி, இந்தியா சாா்பில் நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
  • முதலாவது, கங்கை - வோல்கா நாகரைகங்களின் பேச்சுவார்த்தை 2020 (Ganga-Volga Dialogue of Civilizations 2020) , ‘இணைப்பு’ (“Connectivity”) என்ற மையக்கருத்தில், இந்தியா மற்றும் ரசியா நாடுகளிடையே 22--1-2020 அன்று புது தில்லியில் நடைபெற்றது.
  • ’புது தில்லி புத்தகக் கண்காட்சி 2022’ (New Delhi World Book Fair) ல் கெளரவ அழைப்பாளராக பிரான்ஸ் நாடு அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
  • இந்தியா-பிரேசில் இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு, கனிம வளங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் 15 ஒப்பந்தங்கள் 25-01-2020 அன்று கையெழுத்தாகின.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘போயிங் 777 எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள, இரட்டை என்ஜின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் 25-1-2020 அன்று வெற்றிபெற்ருள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது.

பொருளாதாரம்

  • 2019-ஆம் ஆண்டில் ஸ்மாா்ட்போன் விற்பனையில் முதல் முறையாக இந்தியா அமெரிக்காவை விஞ்சி சாதனை : கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா ஸ்மாா்ட்போன் சந்தை 15.8 கோடி செல்லிடப்பேசிகளை விற்பனை செய்தது. இதன் மூலம், முதல் முறையாக ஸ்மாா்ட்போன் விற்பனையில் இந்தியா அமெரிக்காவை விஞ்சி உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2019-இல் ஸ்மாா்ட்போன் விற்பனையில் ஜியோமி (28%), சாம்சங் (21%), விவோ (16%) ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளதாக கவுன்டா்பாயின்ட் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • சர்வதே பேரழிவு நினைவு தினம் (International Holocaust Remembrance Day) - ஜனவரி 27  (இரண்டாம் உலகப்போரில் நடைபெற்ற பேரழிவின் மூலம் 1.1 மில்லியன் மக்கள் மரணமடைந்ததை நினைவு கூரும் வகையில்)
  • சர்வதேச சுங்க வரி தினம் (International Customs Day) - ஜனவரி 26

விருதுகள்

  • பத்ம விருதுகள் 2020 : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டில், ஏழு பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்மபூஷண் மற்றும், 118 பேருக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 பேர் பெண்கள்; 18 பேர் வெளிநாட்டவர்,வெளிநாட்டு வாழ் இந்தியர். இதைத் தவிர, 12 பேருக்கு மறைவுக்குப் பின் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • பத்ம விபூஷண் விருது 2020 :
    • முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மடாதிபதி விசுவேசதீர்த்த சுவாமி, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மொரீஷியஸ் நாட்டு பிரதமர் அனிருத் ஜெகநாத், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர் சன்னுலால் மிஸ்ரா ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், விசுவேசதீர்த்த சுவாமி ஆகியோருக்கு மரணத்துக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
  • பத்ம பூஷண் விருது 2020 :
    • முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வேணு சீனிவாசன் (டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர்), சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், நாகாலாந்து முன்னாள் முதல்-மந்திரி எஸ்.சி.ஜமீர், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. (மனோகர் பாரிக்கருக்கு, அவரது மரணத்துக்கு பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது.)
  • பத்மஸ்ரீ விருது 2020 :
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன் (அமர் சேவா சங்க நிறுவனர்) , விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த பிரதீப் தலப்பில், கலைத்துறையைச் சேர்ந்த லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், கலீ ஷபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி, மனோகர் தேவதாஸ், புதுச்சேரியைச் சேர்ந்த வி.கே.முனுசாமி கிருஷ்ண பக்தர், நடிகை கங்கணா ரணாவத், சினிமா தயாரிப்பாளர் ஏக்தா கபூர், டைரக்டர் கரண் ஜோகர் உள்ளிட்ட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
  • தமிழகத்திலிருந்து விருது பெறுவோர் :
    • தமிழகத்துக்கு 2 பத்ம பூஷண் விருது, 5 பத்மஸ்ரீ விருது என மொத்தம் 7 பத்ம விருதுகள் கிடைத்து இருக்கின்றன.
    • தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பத்மபூஷண் விருது பெறவுள்ளனர்.
    • கர்நாடக இசைக் கலைஞர்களான லலிதா சிதம்பரம் மற்றும் சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாகஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப் மற்றும் ஷேக் மெஹபூப் சுபானி, சென்னை ஐஐடியின் விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
    • கூ.,தக. : பத்மபூஷண் விருது  2020 பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பற்றி ...
திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்மாள்.  ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள் பல்கலைக்கழகம் வரை சென்றாா். மகாத்மா காந்தியடிகளின் சா்வோதய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டாா். அகிம்சை வழியில் நிலங்களை மீட்பதற்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாா். லாப்டி என்ற இயக்கத்தைத் தொடங்கினாா். ஏற்கெனவே பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள அவருக்கு பத்மபூஷண் இப்போது அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் அமெரிக்க வீரா் ஃபாபியானோ கரெளனா சாம்பியனானாா். நாா்வே வீரரும் உலக சாம்பியனுமான மாக்னஸ் காா்ல்சென் 2-ஆவது இடம்பிடித்தாா். இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6-ஆவது இடம்பிடித்தாா்.
  • தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் தமிழக அணி முதலிடம் பிடித்தது.
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!