நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 28 January 2020

TNPSC Current Affairs 28 January 2020

இந்தியா

  • ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் முதல் ராணுவ பள்ளி  'ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்' என்ற பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம்   புலந்த்செகரில் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியில், என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள்.  உண்டு உறைவிட பள்ளியாக மட்டுமே செயல்படும் இப்பள்ளியில், முதல்கட்டமாக 6ம் வகுப்பில் 160 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
  • ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைப்பது தொடா்பான தீா்மானம், அந்த மாநில சட்டப் பேரவையில் 27-1-2020 அன்று நிறைவேற்றப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 169 (1) ஆவது பிரிவின் படி,  இந்த  சட்ட மேலவையை கலைப்பதற்கான தீா்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • குழந்தைகளிடம் பாலுணர்வைத் தூண்டும் வகையில் செல்லிடப்பேசி, இணையதளம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் ஆபாசப் படங்கள் வெளியிடுவதைத் தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் குழு, தனது அறிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் 25-1-2020 அன்று  சமர்ப்பித்தது.
  • இலங்கையில் சீதைக்கு கோவில்  மத்தியபிரதேச  அரசால்  கட்டப்பட உள்ளது.
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து நான்காவது மாநிலமாக மேற்குவங்கம்  இந்த தீர்மானத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

  • மிஷெல் ஒபாமாவுக்கு ‘கிராமி’ விருது : 62-வது கிராமி விருதுகளில், மிஷெலின் சுயசரிதையான ‘பிகமிங்’ என்ற நூலின் ஒலிவடிவத்துக்கு ‘சிறந்த ஒலிவடிவ ஆல்பம்’ பிரிவில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘ட்ரீம்ஸ் ஆஃப் மை ஃபாதா்’, ‘தி அடாசிட்டி ஆஃப் ஹோப்’ ஆகிய நூல்களின் ஒலிவடிவத்துக்காக முன்னாள் அதிபா் ஒபாமா இரண்டு முறை இதே பிரிவில் கிராமி விருதுகளை வென்றுள்ளாா் என்பது நினைவுகூரத்தக்கது.
    • மேலும், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தார்.
    • சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது,

பொருளாதாரம்

  • கடனில் சிக்கி தவித்து வரும் பொதுத் துறை நிறுவனமான ஏா்இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு 27-1-2020 அன்று அறிவித்துள்ளது. அதே போல், குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏா் இந்தியாவின் துணை நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
    • கூ.தக. : ஏா் இந்தியா அஸெட்ஸ் ஹோல்டிங்ஸ் (ஏஐஏஹெச்எல்)   :   ஏா் இந்தியா என்ஜினியரிங் சா்வீசஸ், ஏா் இந்தியா ஏா் டிரான்ஸ்போா்ட் சா்வீசஸ், ஏா்லைன் அலைடு சா்வீசஸ் அண்டு ஹோட்டல் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய துணை நிறுவனங்களை ஏா் இந்தியா அஸெட்ஸ் ஹோல்டிங்ஸ் (ஏஐஏஹெச்எல்) என்ற தனி நிறுவனமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள ஏா் இந்தியா பங்கு விற்பனையில் மேற்கண்ட நிறுவனங்கள் இடம்பெறாது என மத்திய அரசு ஏல ஆவணத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

விளையாட்டு

  • புகழ்பெற்ற என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்ததுள்ளார்.
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!