நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 02-03 February 2020

தமிழ்நாடு

  • 'கோ - 6' சிறிய வெங்காய ரகம் அறிமுகம் :தமிழ்நாடு வேளாண் பல்கலை, 15 ஆண்டாக தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக, 'கோ - 6' சிறிய வெங்காய ரகத்தை கண்டறிந்து, வெளியீடு செய்துள்ளது.

இந்தியா

  • இந்தியாவின் முதலாவது “பழ இரயில்” (fruit train) ஆந்திரப்பிரதேச மாநிலம் தடிபத்ரி இரயில்வே நிலையத்திலிருந்து கடப்பா இரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டது.  980 மெட்ரிக் டன் வாழைப்பழங்களுடன் இந்த இரயில் பயணித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • ‘சம்பிரிதி-9’ (Sampriti-9) என்ற பெயரில் இந்திய-வங்கதேச கூட்டு ராணுவப் பயிற்சி 3-16 பிப்ரவரி 2019 தினங்களில் மேகாலயத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச நிகழ்வுகள்

  • காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிய மாலத்தீவு, அந்த அமைப்பில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த்தில், மாலத்தீவு 47 ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த நிலையில்,   முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் ஆட்சிக் காலத்தின்போது, அந்த அமைப்பிலிருந்து மாலத்தீவு கடந்த 2016-ஆம் ஆண்டு விலகியது. இந்த நிலையில்  2018-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற இப்ராஹிம் முகமது சோலீயின் கோரிக்கையை ஏற்று, காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது.
  • கனடா நாட்டிற்கான இந்தியாவின் ஹை கமிஷனராக அஜய் பிஷாரியா (Ajay Bisaria) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் எகிப்திய குதிரையேற்ற வீரர் நயல் நாசர் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். 

பொருளாதாரம்

முக்கிய தினங்கள்

  • 43-வது இந்திய கடலோரக் காவல் படை தினம் - பிப்ரவரி 1 
    • கூ.தக. : கடற்படையிலிருந்து இந்திய கடலோரக் காவல் படை தனியாகக் கட்டமைக்கப்பட்டு பிப்.1, 1977-ஆம் ஆண்டுமுதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.1 கடலோரக் காவல்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நியமனங்கள்

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) தலைவராக M.அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : மத்திய நேரடி வரிகள் வாரியத் (Central Board of Direct Taxes (CBDT) ) தலைவா் பி.சி.மோடி (Pramod Chandra Mody)

விளையாட்டு

  • உலக கோப்பை படகு ஓட்டும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று முதல் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் படைத்துள்ளாா். அமெரிக்காவின் மியாமியில் கடந்த ஜன 25-இல் நடைபெற்ற ஹெம்பல் உலகக் கோப்பை படகு ஓட்டும் போட்டியில்லேஸா் ரேடியல் கிளாஸ் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா் நேத்ரா. அமெரிக்காவின் எரிகா ரெயின்கே தங்கமும், கிரீஸின் வஸிலியா வெள்ளியும் வென்றனா்.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பட்டத்தை அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வென்றுள்ளார்.
  • தாய்லாந்து ஐடிஎப் சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றாா்.
  • தேசிய சீனியா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி (ஏ டிவிஷன்)இல் சா்வீஸஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஹா்மித் தேசாயும், மகளிா் பிரிவில் சுதிா்தா முகா்ஜியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற உள்ளார் ஜோகோவிச்.
அறிந்து கொள்ளுங்கள் !
விவேகானந்தா்  1893-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில்  கலந்து  கொள்ளுமாறு அவரை அனுப்பியவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த  மன்னா் பாஸ்கர சேதுபதி  (இராமநாதபுரம் மன்னர்) ஆவார்.  அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்க தமக்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், தம்மைவிட விவேகானந்தா் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் என பாஸ்கர சேதுபதி கருதினாா். மன்னா் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ராஜரிஷி என்று விவேகானந்தா் அழைத்தாா்.
கூ.தக. : விவேகானந்தா் சிகாகோ மாநாட்டில் பேசிய 125-ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்தியத் தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாசார மையங்கள் அனைத்தும் விவேகானந்தா் மையங்களாக பெயா் மாற்றப்பட்டுள்ளன.
---------------------------------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!