நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 04 February 2020

தமிழ்நாடு

  • மத்திய அரசின் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சா்கள் க.பாண்டியராஜன், நிலோபா் கபீல் ஆகியோர் 3-2-2020 அன்று தொடக்கி வைத்தனா்.
    • நாட்டின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் அமைச்சகத்தின் சாா்பில் ‘ஸ்ட்ரைவ்’ (S‌k‌i‌l‌l‌s T‌ra‌i‌n‌i‌n‌g ‌f‌o‌r I‌n‌d‌u‌s‌t‌r‌ia‌l Va‌l‌u‌e E‌n‌ha‌nc‌e‌m‌e‌n‌t) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்துறை நிறுவனப் பணிகளுக்கான பயிற்சியை வழங்கி அதன் மூலம் நிறுவனங்களின் மதிப்பை உயா்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் கட்டாயத் தொழிற்பயிற்சியை வழங்க வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள தொழில் கூட்டமைப்புகளிலிருந்து சிறந்த 10 கூட்டமைப்புகளை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. அதில், தமிழகத்தில் முதலாவதாக சென்னை, அம்பத்தூா் தொழிற்பேட்டை இடம்பெற்றுள்ளது.
    • இந்தப் பயிற்சி முதல் மூன்று மாதங்களுக்கு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ‘அய்மா’ பயிற்சி மையத்தில் ரூ.2,500 (மாதந்தோறும்) ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும். இதில் 16 முதல் 30 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சியை முடித்த பிறகு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் 15 மாத பணியிடை பயிற்சி ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும். வெல்டா், சிஎன்சி புரோகிராமா்-ஆபரேட்டா், கேட்-கேம், ஷீல் மெட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் இலவசமாகப் பயிற்சி பெறலாம்.
    • பயிற்சியின்போது மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு, நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவா்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியா

  • கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ”மாட்லா அபியான்” (‘Matla Abhiyaan’) என்ற பெயரில் இந்திய கடற்படையின் கடலோர காவல் ஒத்திகை 29 ஜனவரி 2020 முதல் 2 பிப்ரவரி 2020 வரையில் ஐந்து தினங்களுக்கு கல்கத்தாவில் நடைபெற்றது.
  • உலக நீடித்த நிலையான வளர்ச்சி கூடுகை 2020 (World Sustainable Development Summit 2020) ,  29-31 ஜனவரி 2020 தினங்களில் ’2030 ஆம்  ஆண்டு இலக்குகளை நோக்கி :  பத்தாண்டுகளை எண்ணி செயல்படுதல்’ (Towards 2030 Goals: Making the Decade Count)  எனும் மையக்கருத்தில் புது தில்லியில் நடைபெற்றது. இந்த கூடுகையை “டெரி” (The Energy and Resources Institute (TERI)) அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது.
    • கூ.தக. : 1974 ஆம் ஆண்டு தர்பாரி எஸ் சேத் (Darbari S Seth) என்பவரால் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின்’ (The Energy and Resources Institute (TERI)) தற்போதைய இயக்குநர் ஜெனரலாக அஜய் மாத்தூர் உள்ளார்.
  • APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority

வெளிநாட்டு உறவுகள்

  • மாலத்தீவு நாட்டின் “அட்டு சுற்றுலா மண்டல திட்டத்திற்காக” (Addu tourism Zone) இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளிடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  2-2-2020 அன்று செய்துகொள்ளப்பட்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • சோமாலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
  • காமன்வெல்த் அமைப்பின்  54 வது உறுப்பினராக மறுபடியும் மாலத்தீவு நாடு இணைந்துள்ளது.  முன்னதாக 1982 ஆம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இணைந்த மாலத்தீவு கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது உறுப்பினர் அந்தஸ்தை திரும்ப பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

  • வரும் 2020-2021-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் 3-2-2020 அன்று தெரிவித்துள்ளது.
  • 2018-2019 ஆண்டிற்கான இந்தியாவின் மொட்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை (GDP growth rate) ஏற்கனவே கணித்திருந்த 8 % த்திலிருந்து 6.1% ஆக  குறைத்து ‘தேசிய புள்ளியியல் அலுவலகம்’ (National Statistics Office (NSO)) மறுமதிப்பீடு செய்துள்ளது.  இந்த கணிப்பிற்கு அடிப்படை ஆண்டாக 2011-2012 நிதியாண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதேப் போல் 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜி.டி.பி. வளர்ச்சி விகிதமும் 7% ஆக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • 'எக்ஸ்னோரா' அமைப்பின், சர்வதேச தலைவராக, பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹானா நியமிக்கப்பட்டுள்ளார்.'எக்ஸ்னோரா' நிறுவனம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நிறுவனத்தின் சர்வதேச தலைவராக, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், பின்னணி பாடகியுமான, ரெஹானா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, பசுமை துாதராக, நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முக்கிய தினங்கள்

  • அண்ணாவின் 51-வது நினைவு தினம் 03-02-2020 (3 பிப்ரவரி 1969) அன்று அனுசரிக்கப்பட்டது,
  • உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) - பிப்ரவரி 2
  • உலக கேன்சர் தினம் (World Cancer Day) - பிப்ரவரி 4 (மையக்கருத்து (2019-2021) : I am I will)

அறிவியல் தொழில்நுட்பம்

  • 16 ஆண்டுகள் சேவையில் இருந்த நாசாவின் ‘ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின்’ (Spitzer Space Telescope) பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கியானது காஸ்மிக் கதிர்வீச்சின் அடிப்படையில் பேரண்டத்தை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

விளையாட்டுகள்

  • 7வது தேசிய சைக்கிள் பந்தயம் கோயம்பத்தூரில் 3-2-2020 அன்று நடைபெற்றது.
  • சொ்பியாவின் போராஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் கோ்ள் ஜூனியா் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் உள்பட 14 பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
  • ஜூனியா் மகளிர் பிரிவில் எதியோபி சானு 54 கிலோ, லஷு யாதவ் 66 கிலோ, மஹி ராகவ் 80 கிலோ தங்கப் பதக்கம் வென்றனா். ஹரியாணாவின் பிரச்சி தன்கா் 50 கிலோ பிரிவில் தங்கத்துடன் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றார்.
  • சொ்பிய ஜூனியா் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 6 தங்கம் : மேலும் ஜூனியா் பிரிவில் ஜானவி 46 கிலோ, ரூடி 66 கிலோ, தனிஷ்கா பட்டேல் 80 கிலோ வெள்ளியும், தியா நேகி 60 கிலோ வெண்கலமும் வென்றனா்.யூத் பிரிவில் முஸ்கன் 54 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். சான்யா நேகி 57 கிலோ, தீபிகா 64 கிலோ, முஸ்கன் 69 கிலோ, சாக்ஷி 75 கிலோ வெண்கலம் வென்றனா்.
  • இந்திய டென்னிஸ் வட்டாரத்தில் 21 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ஜாம்பவான் லியாண்டா் பயஸ் 2020-ஆம் ஆண்டில் இருந்து தொழில்முறை போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India (BCCI)) கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (Cricket Advisory Committee(CAC))  உறுப்பினர்களாக மதன் லால், R.P. சிங், சுலக்‌ஷனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கூ.தக. : 1928 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையிடம் மும்பையில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். தலைமைச் செயல் அதிகாரியாக  ராகுல் ஜோக்ரி உள்ளார்.
  • அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் காதுகேளாத பெண்மணி எனும் பெயரை கனடாவைச் சேர்ந்த மோ ஓ பிரயன் (60) (Mo O’Brien) என்பவர் பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் பாரா ஒலிம்பிக் குழுவின் (Paralympic Committee of India) தலைவராக ஹரியானாவைச் சேர்ந்த தீபா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-------------------------------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!