Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS
☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 05 February 2020

TNPSC Current Affairs 05 -02-2020 

தமிழ்நாடு

 • 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு 5-02-2020 அன்று நடக்கிறது.
கூ.தக. :
 • தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார்.
 • உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 • கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
 • கோயம்பத்தூரில் ஏவுகணை ஒருங்கிணைப்பு மையத்தை (missile integration facility) எல் & டி (L&T (Larsen & Toubro Limited)) மற்றும்  ஐரோப்பிய முன்னணி ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான  MBDA Missile Systems ஆகியவை இணைந்து அமைக்கவுள்ளன.
 • தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் 4-2-2020 அன்று அறிவித்துள்ளார்.

இந்தியா

 • "அந்தபிராக்ன்யா 2020” (Antahpragnya 2020) என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய ஊரக தொழில்நுட்ப திருவிழா தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்திலுள்ள ராஜிவ் காந்தி அறுவ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 3-2-2020 அன்று நடைபெற்றது.
 • மஹாராஷ்டிர மாநிலத்தில், ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • அதிநவீன ஆளில்லா விமானங்களை ( Unmanned Combat Aerial Vehicles (UCAVs)) உருவாக்குவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் (Hindustan Aeronautics Limited (HAL)) மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் தொழில் நிறுவனம் (Israel Aerospace Industries (IAI))  இடையே 3-2-2020 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

 • சியாட்டில் நகர கவுன்சிலில் சிஏஏ-க்கு எதிராக தீா்மானம் : அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகர கவுன்சிலில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக 3-2-2020 அன்று ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

விருது

 • ’ஆசியா- பசுபிக், 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது 2020’ (‘Central banker of the year 2020, Asia-Pacific’) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த  ‘பேங்கர்ஸ் மேகஷின்’ (Banker magazine) மூலம் இந்த விருது வழங்கப்படுகிறது.
 • மாத்ருபூமி, 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த புத்தக விருது (Mathrubhumi book of the year 2020 award) இந்தி மொழி நாவலாசிரியர்  வினோத் குமார்  சுக்லாவிற்கு அவர் எழுதிய ‘Blue Is Like Blue’ எனும் புத்தகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • ’பிரிட்டிஷ் அகடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் 2020’ (British Academy of Film and Television Arts (BAFTA)Awards 2020) ல் சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘1917’ எனும் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கூ.தக. : ‘1917’  எனப்படும் முதல் உலகப்போர் தொடர்பான திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ’சாம் மெண்டஸ்’ (   Sam Mendes) இயக்கியுள்ளார்.

விளையாட்டு

 • ’டோக்கியோ ஒலிம்பிக் 2020’ (Tokyo Olympic) போட்டிகளில் இந்திய அணிக்கான நல்லெண்ண தூதுவராக செயல்பட  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி அழைக்கப்பட்டுள்ளார்.  
 • தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு. இவர், சானு ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோவும், ஜொ்க்கில் 115 கிலோ என மொத்தம் 203 கிலோவை தூக்கி தனது முந்தைய சாதனையை தகா்த்தார்.

அறிவியல்  தொழில்நுட்பம் 

 • ’பேச்சுக் குறைபாடுடையவர்களின் மூளை சமிக்ஞைகளை அர்த்தமுள்ள மொழியாக மாற்றுவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை’ பேராசிரியர் விஷால் நந்திகானா  தலைமையிலான சென்னை ஐ.ஐ.டி. யின் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
 • ”Lapinised CSF (Classical Swine Fever)” என்ற பெயரில் ஸ்வைன் ஃபுளூவிற்கான புதிய மருந்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுண்சிலின்  (ICAR (Indian Council of Agricultural Research)) கீழ் செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute (IVRI)) உருவாக்கியுள்ளது.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments