Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS
☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 10 February 2020

தமிழ்நாடு
 • காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9-2-2020 அன்று அறிவித்துள்ளார்.
 • தமிழக பள்ளி கல்வி துறையின் புதிய முதன்மை செயலராக, தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியா

 • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், சிறந்த, 100 ஸ்மார்ட் சிட்டி பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரம், முதல் இடத்தை பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் வெற்றி பெற்ற தொகுதியின், வாரணாசி, தமிழகத்தின், திருப்பூர், வேலுார், உள்ளிட்ட நகரங்கள், முதல், 20 இடங்களுக்குள் வந்துள்ளன.
 • ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ ('APJ Abdul Kalam: The Missile Man') என்ற பெயரில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரைத் துறையின் கூட்டுத் தயாரிப்பாகும். இப்படத்தில் தென்னிந்திய நடிகா் அலி  பாஷா, அப்துல் கலாம் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளா்கள் ஜெகதீஷ் தனேதி, சுவா்ண பப்பு மற்றும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மார்டினி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 
  • இதுமட்டுமின்றி, 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' மற்றும் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' குறித்த திரைப்படங்கள் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட மார்டினி பிலிம்ஸ் மற்றும் பிங்க் ஜாகுவார்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிற பேனர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளன. இதற்காக அவர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்கிறார்கள்.
 வெளிநாட்டு உறவுகள்
 • இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் - லக்னோ பிரகடனம் 2020”  (Lucknow Declaration of India-Africa Defence Ministers)   லக்னோவில் நடைபெற்ற ‘இந்திய இராணுவ கண்காட்சி 2020’ ( DefExpo India 2020) வின் போது  இந்தியா மற்றும் 50 ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.
  • இந்த பிரகடனத்தின் மூலம், நைஜீரியா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இராணுவ கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மெளரீசியஸ், செஷல்ஸ், ஷாம்பியா, நமீபியா, போஸ்ட்வானா, லெசாத்தோ, தன்சானியா மற்றும் உகாண்டா நாடுகளில் சிறப்பு பயிற்சிக் குழுக்கள் பணியமர்த்தப்படவுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

 • ’ஆப்பிரிக்க ஒன்றியத்தின்’ கூடுகை 2020 (African Union Summit )  ”துப்பாக்கிகளை அமைதியாக்குவோம்” (Silencing the Guns) எனும் மையக்கருத்தில் எத்தியோப்பியாவின் தலைநகர் ஆட்டிஸ் அபாபா (Addis Ababa) ல் நடைபெற்றது.

பொருளாதாரம்

 • கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா 2018-2019-ஆம் ஆண்டில் தாமிரத்தை இறக்குமதி செய்துள்ளது.வெளிநாடுகளிலிருந்து தாமிரத்தை இறக்குமதி செய்வதற்கு, தமிழகத்தில் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டதும் அதற்கு ஒரு காரணம் என்று அரசு தெரிவித்துள்ளது.

 அறிவியல் தொழில்நுட்பம்

 • இந்தியாவில், முதல் முறையாக, , 'குஷி' என பெயரிடப்பட்டுள்ள நாய்க்கு, இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்காக, ஆப்பரேஷன் மூலம், 'பேஸ் மேக்கர்' கருவி புது தில்லியில்  பொருத்தப்பட்டது.
 • ”பார்த்” (“Parth”) என்ற பெயரில் மிகக்குறைந்த விலையிலான துப்பாக்கிச் சூடு இடத்தைக் கண்டறிவதற்கான கருவியை   இந்திய இராணுவத்தின்   மிலிட்டரி பொறியியல் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டு

 • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி முதன்முறையாக  கோப்பை வென்றது.
 • தென் அமெரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த மலைச் சிகரமான அகோன்காகுவாவில் (ஆா்ஜெண்டீனாவின் மென்டோஸா மாகாணத்தில் உள்ளது) ஏறி, இந்தியாவைச் சோ்ந்த பள்ளி மாணவி காம்யா கார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம், அந்த மலைச் சிகரத்தில் ஏறிய உலகின் மிகக் குறைந்த வயதுச் சிறுமி என்ற பெருமையை அவா் பெற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள கடற்படை சிறார் பள்ளியில் காம்யா கார்த்திகேயன் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

----------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments