நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 11,12 February 2020


தமிழ்நாடு

  • தமிழக அரசின் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் : சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் நடந்தும் சைக்கிள்களிலும் மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ், அமைக்கப்படும் சாலைகளின்கீழ் குடிநீா்க் குழாய்கள், மின்வடங்கள், மழைநீா் வடிகால்கள் போன்றவை திட்டமிடப்பட்டு அமைக்கப்படும். இதனால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு சாலையைத் தோண்டுவது தவிர்க்கப்படும் இந்த திட்டத்தின் பணிகள்  முதல் கட்டமாக பெருநகரச் சென்னை மாநகராட்சியில் 12-2-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
    • சென்னையைத் தொடா்ந்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூா் மற்றும் வேலூா் ஆகிய மாநகராட்சிகளுக்கும் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
  • தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.. இதன்படி, கிரையம் முடித்தவர்கள் http://ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.
  • மாநில மனித உரிமை கள் ஆணையத்தின் தலை வராக, துரை ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • இதற்கு முன்னதாக  தமிழ்நாடு மாநில மனித உரிமை கள் ஆணையத்தின் தலைவராக  இருந்துவந்த  மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி  கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா்மாதம் 25-ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக உள்ள துரை ஜெயசந்திரன் அவ்வமைப்பின்  புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
  • காவிரி - கோதாவரி இணைப்புக்கு ரூ.60, 361 கோடியில்வரைவுத் திட்ட அறிக்கை தயார் : காவிரி - கோதாவரி நதிகளை இணைக்க காவிரியின் கல்லணைக்கும் ஆந்திர மாநிலம் ஜனம் பேட்டை ஈஞ்சம்பள்ளியிலுள்ள கோதாவரியையும் இணைக்கும் விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளம் மற்றும் சமூக நீதித் துறை அமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா மாநிலங்களவையில் 10-2-2020 அன்று  தெரிவித்தார்.
  • தமிழக சட்டசபையில் 68 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவம் அடுத்த ஆண்டோடு முடிவுக்கு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1952-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்காக ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
    • 1952-57-ம் ஆண்டில் அமைந்த முதல் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக டபுள்யு.ஜெ.பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டார். 2006-2011-ம் ஆண்டுகளில் ஆஸ்கர் சி.நிக்ளி, 2011-2016-ம் ஆண்டுகளில் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு 15-ம் சட்டசபை அமைந்தது. அப்போது ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
    • இப்போது நடக்கும் சட்டசபையில் ஐந்தாண்டு காலம் நிறைவடையும் வரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படலாம். இனி நடக்கும் தேர்தலுக்குப் பிறகு அமையும் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 68 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்களுடன், 235-வது எம்.எல்.ஏ.வாக அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதி, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு இடம்பெறமாட்டார்.

இந்தியா

  • அரசியல் சாசன (பழங்குடியினா்) உத்தரவு (திருத்த) மசோதா-2019’ என்ற அந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மக்களவையில் 12-2-2020 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. கா்நாடகத்தில் உள்ள பரிவாரா மற்றும் தல்வாரா பழங்குடியின சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு மற்றும் அரசால் வழங்கப்படக் கூடிய இதர பலன்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டம் தவிா்த்து பெலகாவி மற்றும் தாா்வாட் பகுதிகளில் வாழும் சித்தி சமுதாயத்தினருக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படுகிறது.
  • ’காச நோய் ஒழிப்பிற்கான தேசிய செயல் திட்டம் 2017-2025 ’ (National Strategic Plan for TB Elimination (NSP 2017-25) 8-5-2017 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்  2025 ஆம் ஆண்டிற்குள்ளாக காச நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.
  • இந்தியாவில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ‘தேசிய நீர் பயன்பாட்டு திறன் பணியகம்’ ( ‘National Bureau of Water Use Efficiency’ ) எனும் அமைப்பை உருவாக்க இருப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் (National Institute of Financial Management) பெயரை, அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (Arun Jaitley National Institute of Financial Management) எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • 1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நிறுவனம், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறையின் கீழ், பதிவு செய்யப்பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட நிதி மற்றும் கணக்கியல் துறையைச் சேர்ந்த  பல்வேறு அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்கப்படும்.  மத்திய நிதியமைச்சர் இதன் தலைவராவார். 
  • ”ஏக் பாரத் ஷ்ரேஷ்த் பாரத்” (ஒரே இந்தியா”) எனும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை போற்றுவதற்கான  18 நாள் தேசிய அளவிலான பரப்புரை 10-28 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.
    • கூ.தக. : ”ஏக் பாரத் ஷ்ரேஷ்த் பாரத்” திட்டம்   சர்தால் வல்லபாய் பட்டேலின் 140 வது பிறந்த தின நிகழ்வின் போது, 31-10-2015 ல் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தியாவின் ‘இராணுவக்கண்காட்சி 2020” (“DefExpo 2020”) 5-9 பிப்ரவரி 2020 தினங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘இந்தியா : வளரும் பாதுகாப்புத்துறை தயாரிப்பு மையம்’ (India: The Emerging Defence Manufacturing Hub) எனும் மையக்கருத்தில், ‘ பாதுகாப்புத் துறைக்கான டிஜிட்டல் மாற்றங்கள்’ (Digital Transformation of Defence) என்ற நோக்கத்துடன் நடைபெற்றது.
  • தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை ஏப்ரல் 1-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார். அதில் முதல் நபராக அவர் தன்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கிறார்.
  • 23 வது தேசிய மின்னாளுமை மாநாடு 2020 (23rd National conference on e-Governance 2020) மும்பையில் நடைபெற்றது. 

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவுக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பில், 5 ரேடார் அமைப்புகள், 118 ஏவுகணைகள், 3 ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள், 4 ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகள், மேலும் ஒரு வகையிலான 134 ஏவுகணைகள், 32 துப்பாக்கிகள், 40 ஆயிரம் தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • கடல் சார் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான கிழக்கு ஆசிய கூடுகை 2020 (EAS (East Asia Summit) Conference on Maritime Security Cooperation 2020) 6-7 பிப்ரவரி 2020 தினங்களில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றூம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா அரசுகள் இணைந்து நடத்தின.
  • ”அஜயா வாரியர் -2020’ (AJEYA WARRIOR-2020) என்ற பெயரில் , இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஐந்தாவது கூட்டு இராணுவ பயிற்சி 13-26 பிப்ரவரி 2020 தினங்களில் இங்கிலாந்து நாட்டிலுள்ள சாலிஸ்பரி பிளைன்ஸ் (Salisbury Plains)  எனுமிடத்தில் நடைபெற்றது.
  • ’பிம்ஸ்டெக் NDRF பேரிடர் மேலாண்மை ஒத்திகை ’ (BIMSTEC Disaster Management Exercise-2020 (BIMSTEC DMEx-2020)) என்ற பெயரில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையேயான கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை 11-13 பிப்ரவரி 2020 தினங்களில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது.
    • கூ.தக. : 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி  (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation -  BIMSTEC)  அமைப்பின் தலைமையிடம் வங்காளதேச மாநிலம் டாக்காவில் அமைந்துள்ளது.
    • வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இலங்கை நாடு (செப்டம்பர் 2018 முதல்) ஏற்றுள்ளது. 2000 -2001 காலக்கட்டத்தில், இவ்வமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தியா வகித்தது குறிப்பிடத்தக்கது.
  • ”காட்டு விலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் 13 வது பங்குதாரர்களின் மாநாடு (சிஓபி)” (13th Conference of Parties (COP) of the Convention on the Conservation of Migratory Species of Wild Animals )  17-22 பிப்ரவரி 2020 தினங்களில்  குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறுகிறது.  ஐ.நா. சுற்றுழூழல் திட்டம் (United Nations Environment Programme)  அமைப்புடன் இணைந்து இந்தியா இந்த மாநாட்டை நடத்துவதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்கவுள்ளது.
    • இந்த மாநாட்டின் இலச்சினையாக “கிபி பறவை” (“Gibi - The Great Indian Bustard” ) அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : காட்டு விலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா 1983 முதல் கையெழுத்திட்ட பங்குதாரர் நாடாக இருந்து வருகிறது.
  • முதலாவது, ஜெருசலேம் - மும்பை திருவிழா (Jerusalem-Mumbai Festival) 15-16 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெற்றது. இந்தியா - இஸ்ரேல் நாடுகளின் கலை, கலாச்சார ஒத்துழைப்பு நிகழ்ச்சியாக இது நடைபெற்றது.

முக்கிய தினங்கள்

  • தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) - பிப்ரவரி 10
  • உலக பருப்புகள் தினம் (World Pulses Day) - பிப்ரவரி 10
  • உலக யுனானி தினம் (World Unani Day) - பிப்ரவரி 11
  • அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science)   - பிப்ரவ்ரி 11 | மையக்கருத்து (2020) - பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான் அறிவியல் கல்வியில் முதலீடு என்பது,  அனைவரையும் உள்ளடக்கிய பசுமை வளர்ச்சிக்கான முதலீடு (“Investment in Women and Girls in Science for Inclusive Green Growth”)

விருதுகள்

  • 91-வது ஆஸ்கார் விருதுகள் 2020 பட்டியல் (நன்றி : தினமணி)
    • சிறந்த துணை நடிகா் - பிராட் பிட், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.
    • சிறந்த அனிமேஷன் படம் - டாய் ஸ்டோரி 4
    • சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்
    • சிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ, ஹன் ஜின் வோன். கதாசிரியா்: போங் ஜூன் ஹோ. பாராசைட்
    • சிறந்த தழுவல் திரைக்கதை:- தாய்கா வைதிதி.ஜோஜோ ராபிட்.
    • சிறந்த குறும்படம்: த நெய்பா்ஸ் விண்டோ
    • சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரான்.லிட்டில் வுமன்.
    • தயாரிப்பு வடிவமைப்பு:பாா்பரா லிங், நான்சி ஹைக்.ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்
    • சிறந்த ஆவணப்படம்: அமெரிக்கன் ஃபேக்டரி
    • சிறந்த துணை நடிகை: லாரா டொ்ன்.மேரேஜ் ஸ்டோரி
    • சிறந்த ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் விஸஸ் ஃபெராரி.டொனாஸ்டு சில்வஸ்டா்.
    • சிறந்த ஒலிக்கலவை: 1917, மார்க் டெய்லா், ஸ்டூவா்ட் வில்சன்.
    • சிறந்த படத்தொகுப்பு: ஃபோர்டு விஸஸ் ஃபெராரி.
    • மைக்கேல் மெக்கஸ்கா், ஆண்ட்ரூ பக்லாண்ட்.
    • சிறந்த ஒளிப்பதிவு: 1917, ரோஜா் டெகின்ஸ்.
    • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: 1917
    • குல்லாம் ரோசெரன், கிரேக் பட்லா், டொமினிக் டுஹோய்.
    • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: பாம்ஷெல்
    • சிறந்த சா்வதேச திரைப்படம்: பாராசைட்
    • சிறந்த பின்னணி இசை: ஹில்துா் குட்னாடோட்டிா்.ஜோக்கா்
    • சிறந்த பாடல்: ‘லவ் மீ அகெயின்’.ராக்கெட்மேன்
    • சிறந்த இயக்குநா்: பாங் ஜூன் ஹோ, பாராசைட்
    • சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ், ஜோக்கா்
    • சிறந்த நடிகை: ரென்னிஜெஸ்வேகா்.ஜூடி
    • சிறந்த படம்: பாராசைட்
கூ.தக. : ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்று தென் கொரிய மொழியில் உருவான  'பாராசைட்' படம் வரலாறு படைத்து உள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பம்

  • கரோனா வைரஸுக்கு புதிய பெயர் ”கொவைட்-19”  (COVID-19)  : கரோனா வைரஸுக்கு கொவைட்-19' (COVID-19) என்ற புதிய பெயரை சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு  12-2-2020 அன்று  தெரிவித்தது.  இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. COVID' என்ற இந்தப் பெயரில் CO' என்பது கரோனா  (CORONA) என்ற வார்த்தையையும், VI  என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், D  என்பது நோய் (DISEASE) என்ற வார்த்தையையும் குறிப்பதாகும்.
  • ‘கபிந்த்ரா’ என்ற பெயரில் பூமிக்கு திரும்பும் ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. இயற்பியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.ராமச்சந்திர ராவ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியர்கள் என்.அருணாச்சலம், சத்யன் சுப்பையா, பத்மநாப் பகைரா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 
    • இந்த தொழில்நுட்பமானது, சிறப்பான மூலப்பொருட்களின் மேற்பூச்சுகளின் உதவியோடு ஏவுகணைகளின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவுகிறது. விண்வெளி, ராணுவம், மருத்துவம் மற்றும் எலக்ட்ரானிக் துறைகளுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயன் உள்ளதாகும்.
    • ‘கபிந்த்ரா’ தொழில்நுட்பம் ஆராய்ச்சி மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) நடத்திய புதுமையான கண்டுபிடிப்பு தொடர்பான போட்டியில் இந்த தொழில்நுட்பம் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

  • ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்காக ஆலன் பார்டர் விருதை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றார்.
  • சர்வதேச ஒலிம்பில் குழுவின் (International Olympic Committee) சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனை விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை  புலேலா கோபிசந்த் (Pullela Gopichand) பெற்றுள்ளார்.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் எழுச்சி நட்சத்திர விருது (FIH(International Hockey Federation) Women’s Rising Star of the Year 2019) இந்திய ஹாக்கி பெண்கள் அணியின்  லால்ரெம்சியாமி (Lalremsiami) மற்றூம் விவேக் சாகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதித்யா மேத்தா (மும்பை) பலமுறை சாம்பியன்  பங்கஜ் அத்வானியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த போட்டிகள் பூனேயில் நடைபெற்றன.

புத்தகங்கள்

  • ‘A Child of Destiny’ என்ற பெயரில் பேராசிரியர் ராம்சந்த்ர ராவின் (K. Ramakrishna Rao) சுயசரிதையை துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!