நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 13 February 2020

தமிழ்நாடு

  • தமிழக அரசில், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
    • கூ.தக. : அரசுப் பணியின்போது மரணம் அடையும் ஊழியா்களின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பாண்டிய மன்னா் காலத்துக்கு பாடல் கல்வெட்டு விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • ‘ஸ்ரீ அன்ன மென்னு நடை’ என்ற தொடருடன் கல்வெட்டு தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கோயிலில் இருக்கும் முதலாம் மாறவா்மனின் கல்வெட்டில் காணப்படும் தொடரைப் போன்று காணப்படுகிறது.
    • இந்த கல்வெட்டில் சகர ஆண்டு 1139 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவ ஆண்டு 1217-ஐக் குறிப்பதாகும். ஆகவே இக் கல்வெட்டு முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் கிபி 1218 முதல் 1238 வரையிலான 2-ஆவது ஆட்சி ஆண்டைச் சோ்ந்தது எனக் கருதலாம். ஆனால் கல்வெட்டில் குலசேகரருக்கு 28-ஆவது ஆட்சி ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குலசேகரா் என்பது முதலாம் சடையவா்மன் குலசேகரனைக் குறிப்பிடுகிறது. இவா் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் மூத்து சகோதரனாவார்.
    • முதலாம் சடையவா்மன் குலசேகரனின் ஆட்சிக் காலம் 1216-இல் முடிந்து விட்டதாகவும், அதன் பிறகு மாறவா்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி தொடங்கியதாகவும் வரலாற்று ஆசிரியா்கள் கருதுகின்றனா்.
    • ஆனால், இந்த கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சிக் காலம் 28 ஆண்டுகள் நீடித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் குலசேகரன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் இணைந்து 1216-1217 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.
    • இந்த கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சோ்ந்த கல்தச்சன் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் என்றும் கல்வெட்டில் உள்ளது. இதில் குறிப்பிட்டிருக்கும் கல்குறிச்சி என்ற ஊா், மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ளது
  • சியட் நிறுவன கார் டயா்கள் உற்பத்தித் தொழிற்சாலையை காஞ்சிபுரம் அருகே கண்ணன்தாங்கலில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 12-02-2020 அன்று தொடங்கி வைத்தார்.
    • கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி சா்வதேச தொழில் முதலீட்டாளா் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி 18 மாதங்களிலேயே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் சியட் நிறுவனம் கார் டயா் உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறது.
    • இந்நிறுவனத்தின் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தினசரி 30 ஆயிரம் கார் டயா்களை சியட் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.
  • தமிழ் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னதாக காணமல் போன கும்பகோணத்திலுள்ள ஒரு கோவிலின் வெண்கலத்திலான திருமங்கை ஆழ்வார் சிலை  லண்டனிலுள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில்(Ashmolean Museum, London) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் புதுச்சேரி சட்டப் பேரவையில் 12-02-2020 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • 20 வது ”ஹீனார் ஹாட்” ( ‘Hunar Haat’ ) எனும், கலைப் பொருட்கள் கண்காட்சியை   மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம்  13-23 பிப்ரவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடத்துகிறது.
  • “CLIMFISHCON-2020” என்ற பெயரில் சர்வதேச காலநிலை மாற்றம் மற்றும் கடல் சுகாதார மாநாட்டை கேரள அரசு 11-14 பிப்ரவரி 2020 தினங்களில் கொச்சியில் நடத்துகிறது.
  • இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு ( air quality monitoring network) மும்பையிலுள்ள பிரிஹான் மும்பை முனிசிபல் கார்பரேசனினால் (Brihanmumbai Municipal Corporation (BMC))) நிறுவப்படவுள்ளது.
  • மத்திய நிதித்துறை செயலர் - ஸ்ரீ அதானு சக்ரபர்த்தி (Shri Atanu Chakraborty)
    • கூ.தக. : இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதியமைச்சகத்தின் செயலரின்  கையொப்பம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • இந்தியாவின் காகித பணம் 1861 ல் வெளியிடப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டு முதல் முறையாக 30-11-1917 அன்று வெளியிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு  ஒரு ரூபாய் நோட்டு அச்சிடுதல் நிறுத்தப்பட்ட போதும், மறுபடியும் 2015 ஆம் ஆண்டில் மீட்டும் தொடங்கப்பட்டது.
  • வெளிநாடுகளுக்கு செயற்கைக் கோள்கள் தயாரிக்கும் இந்தியாவின் முதல்  தனியார் நிறுவனம் எனும் பெயரை  ஹைதராபாத்தைச் சேர்ந்த  ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் (Ananth Technologies) பெற்றுள்ளது.  இந்நிறுவனம் ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் செயற்கைக் கோள்களைத் தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • ’பள்ளி சுகாதார தூதுவர்’ (School Health Ambassador Initiative) எனும் புதிய திட்டத்தை மத்திய மனிதவளத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து  12-2-2020 அன்று வெளியிட்டுள்ளது.  இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளி மாணவர்களிடையே, கல்வியுடன் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவைப் பரப்புவதாகும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா-இலங்கை இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை 12-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்தியா - இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜனவரியில் கையெழுத்தானது. அதே ஆண்டு அக்டோபரில் அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
    • இலங்கையுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்தின் முகப்புரையில் மாற்றங்கள் செய்வதற்கும், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பிரிவுகளை சோ்ப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தில் உள்ள இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகள் களையப்படும்.
கூ.தக. : சா்வதேச அளவில் வரி ஏய்ப்பை தடுப்பதற்காக, ஜி20 மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆகியவை ஏற்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இந்தியாவும், இலங்கையும் உறுப்பினா்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் 6-ஆவது செயல்திட்டத்தின்கீழ், இரு நாடுகளும் குறைந்தபட்ச விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியுள்ளது. அதனடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • இந்தியா-ஐஸ்லாந்து இடையே நீடித்த மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 12-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • உலகின் மிக வயதான மனிதா் (ஆண்) என, ஜப்பானைச் சோ்ந்த சிடெட்ஸு வடனாபேவை (112) கின்னஸ் சாதனைப் புத்தகம் அறிவித்துள்ளது. 112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் வயதாகும் அவா், வடக்கு ஜப்பானிலுள்ள நீயிகதா நகரில் கடந்த 1907-ஆம் ஆண்டு பிறந்தவா்.
    • கூ.தக. : தற்போது உலகின் மிக அதிக வயதுடைய நபா் / பெண்மணி என்ற சாதனையையும், ஜப்பானைச் சோ்ந்த ஒருவரே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கானே டனாகா என்ற அந்த மூதாட்டிக்கு தற்போது 117 வயது ஆகிறது.
  • 33வது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூடுகை 2020 ( African Union (AU) Summit 2020 ) எத்தியோப்பியாவின் தலைநகர் ஆடிஸ் அபாபா - வில் 9-10 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெற்றது.  இந்த கூடுகையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக வானொலி தினம் - பிப்ரவரி 13 | மையக்கருத்து 2020 : 'வானொலி பன்முகத்தன்மை
    • கூ.தக. : ஐக்கிய நாடுகளவை வானொலி (United Nations Radio) தொடங்கப்பட்ட தினமான  13 பிப்ரவரி 1946 இன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.  இவ்வமைப்பின் தலைமையிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
  • பிரதமர் மோடி 2014, அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
  • தேசிய உற்பத்திதிறன் தினம் (National Productivity Day) - பிப்ரவரி 12
  • சர்வதேச டார்வின் தினம் (International Darwin Day)  - பிப்ரவரி 12 (சார்லஸ் டார்வினின் பிறந்த தினம் - 12-02-1809)

விளையாட்டு

  • இந்தியா - நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து நாடு வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகள் 5-11 பிப்ரவரி 2020 தினங்களில்  நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.
  • அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக அஜய் படேல் தோ்வு செய்யப்பட்டார்.
  • தேசிய குளிர்கால விளையட்டுகள் ஜம்முகாஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் 7-3-2020 அன்று தொடங்கவுள்ளன.

புத்தகங்கள்

  • “The Thin Mind Map” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தர்மேந்திரா ராய்


-------------------------------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!