Skip to main content
குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch - Admission Going on!

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS | Online & PDF

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 22-24 February 2020

தமிழ்நாடு

 • கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக டி.ஜி.பி. சுனில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
 • பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி 22-2-2020 அன்று திறந்து வைத்தார். செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் 60 சென்ட் நிலத்தில் இந்த  மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
 • தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு பிரிட்டனின் ஐஇடி நிறுவனத்தின் உயர்நிலைத் தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அபிநயா -விற்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவியை வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
 • இந்தியன் -2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வழக்கின், விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

 • நிழல் உலக தாதா ரவி பூஜாரி செனகல் நாட்டில் கைது  : கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி  ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள செனகல் நாட்டில் அந்த நாட்டு போலீசாரால்   2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், செனகல் மற்றும் இந்தியாவுக்கு இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதையடுத்து, அவரை அங்கிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, கர்நாடக காவல்துறையினர் செனகலுக்கு எச்ன்று கைது செய்துள்ளனர்.
 • சர்வதேச நீதித்துறை மாநாடு (International Judicial Conference), ‘மாறிவரும் உலகில் நீதித்துறை’ (Judiciary and The Changing World) எனும் தலைப்பில்   22 பிப்ரவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
 • வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்படுத்தியுள்ளது.
 • இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 (Assisted Reproductive Technology Regulation Bill 2020) - க்கு மத்திய அமைச்சரவை 19-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.  வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2020 நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, மருத்துவ ரீதியிலான கர்ப்ப கால திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றின் தொடர்ச்சியாக  இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதன் முக்கிய அமசங்கள் வருமாறு,
  • நாட்டின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சேவைகளை ஒழுங்குபடுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய பயனாக இருக்கும். இதனால் மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் ஏற்படும்.
  • சிகிச்சையகங்களின் உள்கட்டமைப்புக்கான குறைந்தபட்ச தரம், பரிசோதனைக்கூடம், மருத்துவ உபகரணங்கள், பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய வாரியம் வகுக்கும்.
  • மத்திய அரசின் அறிவிக்கை வெளியான 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில வாரியங்கள் மற்றும் அதிகாரிகளை  நியமிக்கும்.
  • தேசிய வாரியம் அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மாநிலங்களில் செயல்படும் சிகிச்சையகங்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு மாநில வாரியங்களுக்கு உள்ளது.
 • 2024-25-ஆம் ஆண்டு வரையிலான தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் 2-ஆம் கட்டத்திற்கு (Swachh Bharat Mission (Grameen) Phase-II)  மத்திய அமைச்சரவை  19-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது . எவர் ஒருவரும் விடுபடாமல், அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும். முந்தைய இயக்கம் போலவே செயல்படுத்தப்படவுள்ள 2-ஆம் கட்ட இயக்கத்துக்கு 2020-21 முதல் 2024-25 வரையிலான காலத்தில் மத்திய – மாநில அரசுகளின் பங்குகளையும் சேர்த்து மொத்த நிதித்தேவை ரூ.52,497 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கூ.தக.
 • 10.2014 அன்று தூயமை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ஊரகப் பகுதிகளில் துப்புரவு நிலை 38.7 சதவீதமாக இருந்தது.  இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன்பயனாக  2019 அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மாநிலங்களும் ஊரகப்பகுதிகளைத் திறந்தவெளி கழிப்பிடம் அற்றவையாக அறிவித்தன.
 • குஜராத்தில் உள்ள பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் நிறுவனத்தை (பைசாக்) (Bhaskaracharya Institute of Space Applications and Geoinformatics (BISAG)), மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்குவதற்கும் பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் தேசிய நிறுவனம் (பைசாக் N) (Gujarat as Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics (BISAG(N)))  என தரம் உயர்த்த  19-2-2020 அன்று  மத்திய அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது.
 • ’UPI Chalega’ பரப்புரை :  இந்திய தேசிய பணப் பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India) ,  ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற தளத்தின் (UPI(Unified Payments Interface)) சரியான பயன்பாட்டைக் குறித்து பொது மக்களிடையே விழிப்புண்ரவை ஏற்படுத்த ’UPI Chalega’  எனும் பரப்புரை தொடங்கியுள்ளது.
கூ.தக. : 
 • 2008 ஆம் ஆண்டு  இந்திய ரிசர்வ் வங்கி மற்றும்  இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து உருவாக்கிய இந்திய தேசிய பணப் பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India) இன் தலைமையிடம் மும்பையில் உள்ளது.
 • ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற தளம் (UPI(Unified Payments Interface))   11 ஏப்ரல் 2016 அன்று  இந்திய தேசிய பணப் பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India) இன் மூலம் உருவாக்கப்பட்டது.
 • UPI 2.0 (Unified Payments Interface 2.0) 16 ஆகஸ்டு 2018 அன்று  வெளியிடப்பட்டது.
 • இந்தியாவின் முதல் மிதக்கும் குடியேற்ற அலுவலகம் (Floating & Immigration office) கோவாவிலுள்ள  மோர்முகோ துறைமுகத்தில் (Mormugao Port) 21-2-2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.
 • ”தல் சேனா பவன் “(“Thal Sena Bhawan”) என்ற பெயரில் இந்திய இராணுவத்திற்கான புதிய தலைமை அலுவலக கட்டடம் அமைபதற்கான அடிக்கல்லை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்  21-2-2020 அன்று நாட்டினார்.
 • ”ஆஷ்க்திஷா” (ASKDISHA) என்ற பெயரிலான இந்திய இரயில்வேயின் கேடரிங், சுற்றுலா நிறுவனத்தின் (Indian Railways Catering & Tourism Corporation Limited (IRCTC)) ”சாட்பாட்” (chatbot) எனப்படும்  செயற்கை நுண்ணறிவு மூலம்  வாடிக்கையாளர்களின்  கேள்விகளுக்கு பதிலளிப்பதான தானியங்கி உரையாடல் மென்பொருள்     21-2-2020 முதல் இந்தி மொழியிலும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சேவை ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

 • இந்தியா, அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில், சீனாவை பின்னுக்குத் தள்ளி தற்போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த, 2018 - 2019ம் நிதியாண்டில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 6.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், இந்த காலத்தில், சீனாவுடனான வர்த்தகம், 6.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், கடந்தாண்டு ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், இந்தியா - அமெரிக்கா இடையே, 4.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவுடன், 4.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே வர்த்தகம் நடந்துள்ளது.
 • இந்தியாவுக்கு வருகை தரும் 7-ஆவது அமெரிக்க அதிபா் டிரம்ப் : (நன்றி தினமணி)
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 பிப்ரவரி 2020 தினங்களில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வருகை புரிவதன் மூலம், சுதந்திர இந்தியாவுக்கு வரும் ஏழாவது அமெரிக்க அதிபா் என்ற பெருமையை டிரம்ப் பெற்றுள்ளாா். இவருக்கு முன்னர் இந்தியாவிற்கு வருகைபுரிந்த அமெரிக்க அதிபர்கள் விவரம் வருமாறு,
  • டுவைட் ஐசன்ஹோவா்-1959, டிச. 9-14
   • நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவதாக, கடந்த 1959-ஆம் ஆண்டு ஜவாஹா்லால் நேரு பிரதரமாக இருந்தபோது அப்போதைய அமெரிக்க அதிபா் டுவைட் டி ஐசனாவா் இந்தியா வந்தாா்.
  • ரிச்சா்டு நிக்சன்-1969, ஜூலை 31-ஆக. 1
   • கடந்த 1969-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அதிபா் ரிச்சா்டு நிக்சன் இந்தியாவுக்கு வருகை தந்தாா்.
  • ஜிம்மி காா்ட்டா்-1978, ஜன. 1-3
   • கடந்த 1978-இல் மொராா்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி காா்ட்டா் இந்தியா வந்தாா்.
  • பில் கிளிண்டன்-2000, மாா்ச் 19-25
   • 22 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2000-ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபா் பில் கிளிண்டன் இந்தியா வந்தாா்.
  • பராக் ஒபாமா-2010, நவ. 6-9 & 2015, ஜன. 24-27
   • அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஒபாமா இரண்டு முறை இந்தியா வந்துள்ளாா். முதலாவதாக, கடந்த 2010-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வந்தாா். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா கலந்து கொண்டாா்.

சர்வதேச நிகழ்வுகள்

 • ”டைமண்ட் பிரின்ஸஸ்  சொகுசு கப்பல்”  :  கரோனா வைரஸ் அக்சுறுத்தல் காரணமாக, ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில்   தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலாகும். இதில் 3,711 போ் பயணித்தனா். அவா்களில் 138 போ் இந்தியா்கள் ஆவா். அதில் 132 கப்பல் ஊழியா்கள், 6 பயணிகள் அடங்குவா்.
 • கொரோனா (கொவைட்-19) வைரஸ் காய்ச்சல்  பாதிப்பு எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
 • மூன்றாவது, சாலை பாதுகாப்பிற்கான உயர்மட்ட  அளவிலான உலக மாநாடு ( High Level Global Conference on Road Safety ) ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் 19-20 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெற்றது.  இந்தியாவின் சார்பில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

பொருளாதாரம்

 • லாட்டரி சீட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை    மாா்ச் 1 , 2020 -ஆம் தேதி முதல்   நாடுமுழுவதும் அமலாகவுள்ளது.  தற்போது அரசு லாட்டரிகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மாா்ச் 1 முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வரும்.
 • உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் 3,350 டன் அளவுள்ள 2  பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது கையிருப்பு உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
  • இந்தச் சுரங்கங்களில் ரூ 12 லட்சம் கோடி மதிப்புள்ள 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பஹாடி என்ற இடத்தில் 2943 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 646 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.  
 • இந்தியப் பொருளாதாரம் கடந்த 2018-19 இல் 6.1 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2019-2020) அது 4.9 சதவீதமாக இருக்கும் என நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசா்ச் (என்சிஏஇஆா்) தெரிவித்துள்ளது. இருப்பினும், 2020-21 இல் பொருளாதாரம் 5.6 சதவீதமாக வளா்ச்சி காணும் என்று என்சிஏஇஆா் தெரிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

 • சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) - பிப்ரவரி 21 | மையக்கருத்து (2020)  - எல்லைகளற்ற மொழிகள் (Languages without Border)
 • உலக சிந்தனை தினம் (World Thinking Day) - பிப்ரவரி 22

விருதுகள்

 • ”SERB சிறந்த பெண் அறிவியல் ஆராய்ச்சியாளருக்கான விருது” (Science and Engineering Research Board (SERB) Women Excellence Award-2020) லக்னோவிலுள்ள  மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Drug Research Institute ) அராய்ச்சியாளர்  டாக்டர். நிதி குமாருக்கு (Dr. Niti Kumar) அறிவிக்கப்பட்டுள்ளது.
 • “மிஸ் திவா அழகிப் போட்டி 2020’ ல் மங்களூருவைச் சேர்ந்த அட்லின் கேஸ்டலினோ இந்திய அழகியாக (மிஸ் டிவா யுனிவர்ஸ்) தேர்ந்தெடுத்து கிரீடம் சூட்டப்பட்டார்.

நியமனங்கள்

 • பிரதமரின் தனி ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாஸ்கர் குல்புலே, அமர்ஜித் சின்ஹா ஆகியோரை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் இருவரும் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்கா - இந்திய வர்த்தக குழுவின் (US-India Business Council (USBIC)) உலக வாரியத்தின் தலைவராக விஜய் அத்வானி நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

 • கம்ப்யூட்டரில் கட், காபி, பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் காலமானார்.  இவர், ஜெராக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில், வேலையை எளிமையாகச் செய்ய கண்டுபிடித்தது தான் கண்ட்ரோல் சி (Ctrl + C ) மற்றும் கண்ட்ரோல் வி (Ctrl + V ) கட்டளைகள்.
 • Nature Ranking Index 2020 ன் படி, 2019 ஆம் ஆண்டில், இந்திய அளவில்  மொத்த ஆராய்ச்சி வெளியீட்டுத் திறனில் (otal research output)  முதல் மூன்று இடங்களைமுறையே   மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு (Council of Scientific and industrial Research(CSIR)) , இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (Indian Institute of science (IISC)) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research (TIFR)) ஆகியவைப் பெற்றுள்ளன.

விளையாட்டு

 • சா்வதேச டென்னிஸ் சங்கம் (ஐடிஎப்) சாா்பில் ஜோத்பூரில் நடைபெற்ற போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா பட்டம் வென்றாா்.
 • ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஞானசேகரன் இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றனா்.
 • உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை டைசன் பியூரி வென்றுள்ளார்.
 • துபையில் நடைபெற்ற டபிள்யுடிஏ மகளிா் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் எலெனா ரெபக்கினாவை   வென்று முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப்  சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.
 • தேசிய சீனியா் பூப்பந்து போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியன் ரயில்வேயும், மகளிா் பிரிவில் கா்நாடக அணிகளும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
 • இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளா் பிரக்யான் ஓஜா சா்வதேச மற்றும் முதல்தரம் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். ஹைதராபாதைச் சோ்ந்த 33 வயதான ஓஜா இந்தியாவுக்காக 24 டெஸ்ட்கள், 18 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளாா்.
 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, 79 கிலோ பிரிவில் கௌரவ் பாலியான் (79 கிலோ பிரிவில்), சத்யவிரத் கடியன் (97 கிலோ பிரிவில் )  ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
 • முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை (Khelo India University Games) ஒடிஷாவின் புவெனேஸ்வரில் பிரதமா் நரேந்திர மோடி  22-2-2020 அன்று  தொடங்கி வைத்தாா். 22 பிப்ரவரி 2020 - 1 மார்ச் 2020 வரையில் நடைபெறும், இந்த விளையாட்டுப்போட்டிகளை புவனேஸ்வரிலுள்ள  கலிங்கா பல்கலைக்கழகம் ( Kalinga Institute of Industrial Technology ) நடத்துகிறது.
 • துபையில் நடைபெற்ற டபிள்யுடிஏ மகளிா் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் எலெனா ரெபக்கினாவை    வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப்.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments